நம்பியாரூரர் அருளிய திருப்பாட்டு
தலம் : திருக்கலயநல்லூர்
பண் : தக்கராகம்
ஏழாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
குரும்பை முலை மலர்க்குழலி கொண்ட தவம் கண்டு
குறிப்பினொடு சென்று அவள் தன் குணத்தினை நன்கறிந்து
விரும்புவரம் கொடுத்து அவளை வேட்டு அருளிச்செய்த
விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவிய ஊர் வினவில்
அரும்பருகே சுரும்பருவ அறுபதம் பண் பாட
அணிமயில்கள் நடமாடும் அணிபொழில் சூழயலின்
கரும்பருகே கருங்குவளை கண் வளரும் கழனிக்
கமலங்கள் முகம் மலரும் கலயநல்லூர் காணே.
திருச்சிற்றம்பலம்
sundarar aruLiya thevaram
thalam : thirukkalayanallUr
paN : thakkarAgam
Seventh thirumuRai
thirucciRRambalam
kurumbai mulai malarkkuzali koNDa thavam kaNDu
kuRippinoDu cenRu avaL than guNathhtinai n^angaRin^thu
virumbuvaram koDuththu avaLai vETTu aruLicceytha
viNNavarkOn kaNNuthalOn mEviya Ur vinavil
arumbarukE curumbaruva aRupatham paN pADa
aNimayilkaL n^aDamADum aNipozil cUzayalin
karumbarukE karuN^kuvaLai kaN vaLarum kazanik
kamalaN^kaL mukam malarum kalayan^allUr kANE.
thirucciRRambalam
Explanation of song:
Seeing the austerity taken up by the young breast, floral plait Lady,
Going with the motive and realizing well Her quality,
giving the desired boon of accepting Her,
the King of celestials, forehead-eye Lord
- the town He resided when asked -
it is the thirukkalayanallUr where in the neighborhood
where beetle hums near flower buds,
six-legged (beetle) singing melody,
embellished peacocks dancing colorful garden,
near the sugarcane, black kuvaLai flower sleeping field
lotus faces bloom!!
Notes:
1. First part of the song is dedicated to the great austerity
of pArvati devi for which God gave Himself as the boon.
The second part is the poetic depiction of the
pictureque morning at thirukkalayanallur -
kuvaLai goes to sleep and lotus blooms wide.
2. kurmbai - young; vETTal - to seek; curumbu -
beetle.