கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பா
தலம் சாட்டியக்குடி
பண் பஞ்சமம்
ஒன்பதாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
செங்கணா போற்றி திசைமுகா போற்றி
சிவபுர நகருள் வீற்றிருந்த
அங்கணா போற்றி அமரனே போற்றி
அமரர்கள் தலைவனே போற்றி
தங்கள் நான்மறைநூல் சகலமும் கற்றோர்
சாட்டியக்குடி இருந்தருளும்
எங்கள் நாயகனே போற்றி ஏழிருக்கை
இறைவனே போற்றியே போற்றி.
திருச்சிற்றம்பலம்
karuvUrththEvar aruLiya thiruvicaippA
thalam cATTiyakkuDi
paN panycamam
onbadhAm thirumuRai
thirucciRRambalam
ceN^kaNA pORRi thicaimukA pORRi
civapura n^agaruL vIRRirun^tha
aN^kaNA pORRi amaranE pORRi
amararkaL thalaivanE pORRi
thaN^kaL n^AnmaRai n^Ul cakalamum kaRROr
cATTiyakkuDi irun^tharuLum
eN^kaL n^AyakanE pORRi Ezirukkai
iRaivanE pORRiyE pORRi.
thirucciRRambalam
Meaning of song:
Oh the Perfect-eye Lord hail! Direction faced hail!
The Beautiful-eyed Who resided in the city of shivapuram hail!
Immortal hail! Lord of immortals (divines) hail!
Our Lord Who is at thiruccATTiyakkuDi of people
who have learnt all their four vedas scripture, hail!
God of seven storey abode hail hail!!
Notes:
1. ceN^kaNA can also be interpreted as red eye
(eye of fire).
2. thicaimukam - four faces to the four direction.
In this perspective the Urdva mukham - IshAnam -
is not considered.
c.f. n^Angu kolAm avar thammukamAvana - appar.