பதினொன்றாம் திருமுறை
காரைக்கால் அம்மையார் அருளியது
திருஇரட்டைமணிமாலை
திருச்சிற்றம்பலம்
பிரானென்று தன்னைப் பன்னாள் பரவித் தொழுவார் இடர் கண்
டிரான் என நிற்கின்ற ஈசன் கண்டீர் இன வண்டு கிண்டிப்
பொரா நின்ற கொன்றைப் பொதும்பர்க் கிடந்து பொம்மென் துறைவாய்
அரா நின்றிரைக்குஞ் சடைச் செம்பொன் நீள்முடி அந்தணனே
திருச்சிற்றம்பலம்
eleventh thirumuRai
kAraikkAl ammaiyAr aruLiyathu
thiruiraTTaimaNimAlai
thirucciRRambalam
pirAnenRu thannaip pannAL paravith thozuvAr iDar kaN
DirAn ena n^iRkinRa Ican kaNDIr ina vaNDu kiNDip
porA n^inRa konRaip pothumbark kiDan^thu pommen thuRaivAy
arA n^inRiraikkum caDaic cempon n^ILmuDi an^thaNanE
thirucciRRambalam
Meaning:
The Master Who does not stay idle seeing the misery of
those who hail and worship Him as the Lord for long.
He is the Cool-hearted One on Whose golden long
matted-hair, beetles dig up and fight it out with the
konRai grove making a humming noise in the port in
which the snakes make noise.
Notes:
1. The information that Lord shiva is highly benevolent
to the devotees is wide spread in epics like mahAbhArata
and purANas.
2. c.f. thozuvAravar thuyarAyina thIrththal una thozilE
- cun^tharar
3. porAn^iRRal - poruthal - wrestling; pothumbar - grove;
arA - snake.