திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
தலம் : திருக்கொச்சைவயம்
பண் : பியந்தைக் காந்தாரம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
இறைவனை ஒப்பிலாத ஒளிமேனியானை
உலகங்கள் ஏழும் உடனே
மறைதரு வெள்ளமேவி வளர்கோயில் மன்னி
இனிதா இருந்த மணியைக்
குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த
தமிழ்மாலை பாடும் அவர் போய்
அறைகழல் ஈசன் ஆளும் நகர் மேவி என்றும்
அழகா இருப்பது அறிவே.
திருச்சிற்றம்பலம்
thirugnanasambanthar aruLiya thevaram
thalam : thirukkoccaivayam
paN : piyan^thaik kAn^thAram
Second thirumuRai
thirucciRRambalam
iRaivanai oppilAtha oLimEniyAnai
ulakaN^gaL Ezum uDanE
maRaitharu veLLamEvi vaLarkOyil manni
inithA irun^tha maNiyaik
kuRaivila nyAnamEvu kuLirpan^than vaiththa
thamizmAlai pADum avarpOy
aRaikazal Ican ALum n^agar mEvi enRum
azakA iruppathu aRivE.
thirucciRRambalam
Explanation of song:
It is the wisdom that those who sing the
thamiz garland kept by cool thirunyAnacambandhar
of flawless wisdom on the God, peerless Splendor Form,
the Gem that happily resided eternally in the abode
that grew above the flood that covered the seven worlds
(cIrkAzi), they would go and beautifully reside in the city
governed by the Master of roaring anklets.
Notes: