திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
தலம் : திருக்கீழ்வேளூர்
பண் : நட்டராகம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
குருண்ட வார் குழற் சடையுடைக் குழகனை அழகமர் கீழ்வேளூர்த்
திரண்ட மாமறையவர் தொழும் பெருந்திருக்கோயில் எம்பெருமானை
இருண்ட மேதியின் இனமிகு வயல் மல்கு புகலி மன் சம்பந்தன்
தெருண்ட பாடல் வல்லாரவர் சிவகதி பெறுவது திடமாமே.
திருச்சிற்றம்பலம்
thirugnanasambanthar aruLiya thevaram
thalam : thirukkIzvELUr
paN : naTTarAgam
Second thirumuRai
thirucciRRambalam
kuruNDa vAr kuzaR caDaiyuDaik kuzakanai azakamar kIzvELUrth
thiraNDa mAmaRaiyavar thozum perun^thirukkOyil emperumAnai
iruNDa mEthiyin inamiku vayal malku pukali man camban^than
theruNDa pADal vallAravar civagathi peRuvathu thiDamAmE.
thirucciRRambalam
Meaning of song:
On the Youth of curled long twined hair, our Lord at the
grand temple of beautiful thirukkIzvELUr worshipped
by the great vedins assembled, thirunyAnacambandhar
the king of thiruppukali of fields rich with the clan of
dark buffalos, (sung) cream-like songs those who are
capable, getting shivagathi is definite for them.
Notes:
1. kuruLuthal - to curl; vAr - long; kuzakan - youth;
mEthi - buffalo; man - king; theruNDa - clear.