திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம் : திருக்கோட்டாறு
பண் : சீகாமரம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
பஞ்சின் மெல்லடி மாதர் ஆடவர்
பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும்
கொஞ்சி இன் மொழியால்
தொழில் மல்கு கோட்டாற்றில்
மஞ்சனே மணியே மணி மிடற்று
அண்ணலே என உள் நெகிழ்ந்தவர்
துஞ்சுமாறு அறியார்
பிறவார் இத்தொல் நிலத்தே.
திருச்சிற்றம்பலம்
thirugnanasambanthar aruLiya thevaram
thalam : thirukkOTTARu
paN : cIkAmaram
Second thirumuRai
thirucciRRambalam
panycin mellaDi mAthar ADavar
paththar ciththarkaL paNbu vaikalum
konyci in moziyAl
thozil malku kOTTARRil
manycanE maNiyE maNi miDaRRu
aNNalE ena uL n^ekizn^thavar
thunycumARu aRiyAr
piRavAr iththol n^ilaththE.
thirucciRRambalam
Meaning of stanza:
Ladies of feet softer than cotton, men, devotees,
attained people doing abundantly the job of
fondling with sweet words (Your) qualities everyday
at thirukkOTTARu, those who melt inside saying,
"Lovely Lord! Gemlike! Elder of gem throat!"
they do not know to be dead or born again
in this ancient world.
Notes:
1. vaikal - everyday; manycan - lovely; miDaRu - throat.