திருஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பு
தலம் : திருப்பிரமபுரம்
பண் : நட்டபாடை
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.1
திருச்சிற்றம்பலம்
பொருளுரை:
சிறப்பு:
1. இப்பாடலே திருஞானசம்பந்தரின் அதிஅற்புதமான, அதிசய சக்தி நிறைந்த
முதல் பாடலாகும்; தன் உதடுகளில் சொட்டும் பாலைக் கண்டு, கோபங்கொண்ட
தன் தந்தையாருக்கு, தனக்கு விடைமேல் காட்சி தரும் இறைவனையும் இறைவியாரையும்
காட்டுவிக்கும் முகமாக இத்திருப்பாடல் காழிப்பிள்ளையாரின் திருவாயினின்றும் மலர்ந்தது.
2. இப்பாடலின் முதல் எழுத்து "தோ" = த் + ஓ. வேதத்தின் முதல் உயிரெழுத்து
ஓ (ஓம்); முதல் மெய்யெழுத்து "த்" (திருமுறையில் கடைசி எழுத்து "ம்" (உலகெலாம்).
ஓம் என்னும் ப்ரணவமே இறைவனைத் தோத்தரிக்கும் முதல் மந்திரமாகும். திருமுறைகளும்
"ஓ"-வில் (த்+ஓ = "தோ") தொடங்கி, "ம்"-ல் (உலகெலாம்) முடிவடைவது இறைவன்
கருணையின் சிறப்பாகும்.
thirunyAna chambandhar thirukkaDaikkAppu
paN n^aTTapADai
mudhal thirumuRai
thooDuDaiya cheviyan viDaiyeeRi Or thuuveN madhi chuuDi
kaaDuDaiya chuDalaip poDipUchi en uLLam kavar kaLvan
eeDuDaiya malaraan munain^aaL paNin^dheeththa aruLcheydha
piiDuDaiya piramaapuram meeviya pemmaan ivananRee.
Meaning of Thevaram
The One with ear-ring, Riding the bull, Wearing a chaste-white moon,
Smearing the ash of the cemetry, Thief Who steals my mind, Blessed when
the lotus one (brahma) worshiped in the past, the Lord of the majestic
brahmapuram (chIrkAzi), isn't This He ?
Speciality
1. This is the first song of the prodigy sambandhar. He showed the God
and Goddess to his furious father who enquired about the milk dripping
from sambandhar's lips and sang this. (For details see
/devotees/miraculous-milk-and-cymbals)
2. The first letter of this is "thO" = th + O. The first vowel of vedas
is O (Om) and first consonant is th !! (The last letter in thirumuRai
is m (ulagelAm). So thirumuRais start with O and end with m, praising
the Lord symbolised by praNavam)
3. All the panycha kR^itya - five deeds of the Lord are indicated int
his hymn beautifully. thODuDaiya cheviyan - creation, thUveNmadhi chUDi
- protection, chuDalaippoDipUchi - reduction (destruction), uLLam kavar
kaLvan (hiding), aruLcheydha (blessing).
(The complete padhikam is available here)