திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : பொது
பண் : காந்தாரபஞ்சமம்
மூன்றாம் திருமுறை
பஞ்சாக்கரத் திருப்பதிகம்
திருச்சிற்றம்பலம்
கொங்கலர் வன்மதன் வாளி ஐந்து; அகத்து
அங்குள பூதமும் அஞ்ச; ஐம்பொழில்;
தங்கரவின் படம் அஞ்சும்; தம்முடை
அங்கையில் ஐவிரல்; அஞ்செழுத்துமே. 3.22.5
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : pothu
paN : gAndhAra panycamam
Third thirumuRai
panycAkkarath thiruppathikam
thirucciRRambalam
koN^galar vanmathan vALi ain^thu; akaththu
aN^guLa bUthamum anyca; aimpozil;
thaN^garavin paDam anycum; thammuDai
aN^kaiyil aiviral; anycezuththumE. 3.22.5
thirucciRRambalam
Meaning of Thevaram
Five are the floral arrows of harsh cupid;
Five are the elements inside;
Five are the lands;
Five are the hoods of the snake that resides;
Five are the fingers in the hand;
Five are the (holy) syllables!
பொருளுரை
வன்மையுடைய மன்மதனின் பூங்கணைகள் ஐந்து;
உள்ளிருக்கின்ற பூதங்களும் ஐந்து;
பொழில்கள் ஐந்து;
அங்கிருக்கின்ற பாம்பின் படம் ஐந்து;
தம்முடைய கரத்தில் விரல்கள் ஐந்து;
(மந்திரத்) திருவெழுத்துக்களும் ஐந்தே!
Notes
1. கொங்கு - தேன்; வாளி - அம்பு.