திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் : பொது
பண் : சாதாரி
நான்காம் திருமுறை
திருவங்கமாலை
திருச்சிற்றம்பலம்
கால்களாற் பயன் என் - கறைக்கண்டன் உறைகோயில்
கோலக் கோபுரக் கோகரணஞ் சூழாக் கால்களாற் பயன் என்? 4.9.9
திருச்சிற்றம்பலம்
thirunAvukkaracar thEvAram
thalam : common
paN : cAthAri
Fourth thirumuRai
thiruvangamAlai
thirucciRRambalam
kAlkaLAR payan en - kaRaikkaNDan uRaikOyil
kOlak kOpurak kOkaraNany cUzAk kAlkaLAR payan en? 4.9.9
thirucciRRambalam
Meaning of Thevaram
What is the use of legs?
If they do not circumambulate the abode of the
stain throated Lord, the gOkarNa having beautiful pinnacles,
what is the use of legs?
பொருளுரை
கால்கள் இருந்தும் பயன் என்ன?
கறையைக் கழுத்தின் அணிந்த பெருமானின் திருக்கோயிலாம்
அழகிய கோபுரங்கள் கொண்ட திருக்கோகரணத்தை வலம் செய்யாத
கால்கள் இருந்தும் பயன் என்ன?
Notes
1. கோளில் பொறியில் குணமிலவே எண் குணத்தான்
தாளை வணங்காத் தலை - திருக்குறள்
சிவபெருமானுடைய திருவடிகளை வணங்கி வலம் வராத
கால்களும் வழிபடாத உறுப்புக்களும், போற்றாத வாழ்வும்
வீண் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
2. கோகரணம் - கன்னட நாட்டில் உள்ள தலம்.
சம்பந்தர், அப்பரால் பதிகம் பாடப்பெற்றது.