திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருமருகல்
பண் : இந்தளம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
அறையார் கழலும் அழல்வா யரவும்
பிறையார் சடையும் உடையாய் பெரிய
மறையார் மருகல் மகிழ்வாய் இவளை
இறையார் வளைகொண்டு எழில் வவ்வினையே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : thirumarugal
paN : indhaLam
Second thirumuRai
thirucciRRambalam
aRaiyAr kazalum azal vAy aravum
piRaiyAr caDaiyum uDaiyAy periya
maRaiyAr marugal makizvAy ivaLai
iRaiyAr vaLai koNDu ezil vavinaiyE.
thirucciRRambalam
Meaning
Oh the One having reverberating anklet,
fiery snake and twined hair with crescent!
Oh the One enjoys thirumarugal where
the great vedas sound loud!
You have taken off her bangles in the
forehand and removed her charm!
பொருளுரை
ஒலிக்கின்ற கழலும், தீப்போன்ற வாயுடைய பாம்பும்,
பிறை சூடிய சடையும் உடைய பெருமானே!
உயர்ந்த மறைகளின் ஒலி ஓங்கும் திருமருகலை மகிழ்பவனே!
இவளுடைய முன்கை அணிந்த வளைகளை நீக்கி
இவளுடைய தோற்றப்பொலிவைக் குறைத்தனையே!
Notes
1. இறைவன் எப்பொழுதும் உரியதில்லாத துன்பத்தை
உயிர்களுக்கு ஊட்டுவதில்லை. எனினும் பக்குவமுறும்
பொருட்டு வினைப்பயனை இறைவன் ஊட்டுகின்றான்.
ஆயினும் நம்மால் நம்முடைய அல்லது நம்முடனான
பிற உயிர்களின் துன்பத்தைத் தாங்க இயலாத பொழுது
இறைவனிடம் வினையின் கடுமையைக் குறைக்க
இறைஞ்சுகின்றோம்.
இங்கு காண்பது நம் அருளாளராம் புகலி வேந்தரின்
கருணையின் வெளிப்பாடு. (உருத்திரப் பெருமறையின்
ஒரு பகுதியும் இறைவன் வினையூட்டும் வேகத்தைக்
குறைக்குமாறு வேண்டுவதற்காக.)
2. அறைதல் - ஒலித்தல்; அழல் - தீ; அரவு - பாம்பு;
இறை - முன்கை; எழில் - அழகு.