logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

eiraivanukku-kopam-varumaa

இறைவனுக்குக் கோபம் வருமா?

 
 

திருநாவுக்கரசர் தேவாரம்

 
தலம்    : திருவதிகை 
பண்     : கொல்லி 
நான்காம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
முன்னம் அடியேன் அறியாமையினால்  
    முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப் 
பின்னை அடியேன் உமக்காளும் பட்டேன் 
    சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் 
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ 
    தலையாயவர் தங்கடன் ஆவது தான் 
அன்ன நடையார் அதிகைக் கெடில  
    வீரட்டானத்து உறை அம்மானே.        4.1.4 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunAvukkaracar thEvAram

 
thalam    :    thiruvAlavAy 
paN    :    kolli 
Fourth thirumuRai 
 
thirucciRRambalam 
 
munnam aDiyEn aRiyAmaiyinAl 
    munin^thennai n^alin^thu muDakkiyiDap 
pinnai aDiyEn umakkALum paTTEn 
    cuDukinRathu cUlai thavirththaruLIr 
thannai aDain^thAr vinai thIrppathanRO  
    thalaiyAyavar thaN^kaDan Avathu thAn 
anna n^aDaiyAr athikaik keDila 
    vIraTTAnaththu uRai ammAnE            4.1.4 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram


Earlier due to my ignorance, displeased with me  
(You) put me into paralyzing distress; 
Later I got into Your fold; 
Colic is burning; Please bless driving it away! 
Isn't it the duty of the superior ones 
to cure the misery of those who seek refuge?! 
Oh Mother, residing at the thiruvIraTTAnam abode 
along keDilam river at thiruvadhikai where swan like 
walk ladies wander. 
 
பொருளுரை


முன்பு அடியேனுடைய அறியாது உழன்ற காரணத்தால் 
கோபம் கொண்டு என்னை வருந்தி முடங்குமாறு செய்யப் 
பின்பு நான் உமக்கு அடியவனானேன்; 
சூலை நோயானது சுட்டுக்கொண்டிருக்கின்றது; அதனை நீக்கியருளுவீர்; 
தன்னை நாடி அடைந்தவர்களின் துன்பத்தைத்  
தீர்ப்பதன்றோ பெரியவர்களின் கடமை? 
அன்னம் போன்ற நடையுடையவர்கள் பயிலும்  
திருவதிகை நகரில் கெடிலக் கரையில் திருவீரட்டானத்தில் 
உறைகின்ற தாயானவனே! 
 
Notes

 
1. திருநாவுக்கரசர் பெருமான் சமணத்தில் சேர்ந்து அங்கு 
தருமசேனராய் பெரும்பதவியில் அமர, அவர்தம் அக்கையாரான 
திலகவதியார், "தம்பி சிவபெருமானின் திருவடி தொழாது  
வாழ்வினை வீண் செய்கின்றானே!" என்று திருவதிகைப் பெருமானிடம் 
தவறாது முறையிட, இறைவன் தருமசேனருக்குக் கொடுமையான 
சூலை நோய் வயிற்றில் தர, அது சமணரால் தீர்க்கலாகாது, 
அக்கா திலகவதியாரிடம் தஞ்சமடைகிறார். திலகவதியார் 
சிவபெருமானின் திருநீற்றினை அளித்துப் பெருமானுக்கு 
உழவாரப்பணி செய்யச் சொல்கிறார். அப்படி ஆட்பட்ட 
மருள்நீக்கியாராம் அவர் இறைவனைப் பாடி பரவித் தம் 
சூலை நோய் நீங்க அருள் பெற்றது, இப்பதிகம் கொண்டு. 
ஆளுறுந் தமிழ் மாலை பாடிய அப்பெருந்தகைக்கு 
இறைவர் திரு நாவுக்கு அரசு என்று திருநாமம் சூட்டி 
அருளினர். 
2. வயிற்றில் ஏற்படும் கோளாறுகளிலிருந்து விடுபட 
ஓதவேண்டிய திருப்பதிகம். (முழுப்பதிகம்: /prayers-for-specific-ailments ) 
3. முனிந்து என்னை நலிந்து 
பிறருக்குக் கோபம் வரலாம். இறைவனுக்கு வரலாமா? 
இறைவனின் எண்குணங்களில் ஒன்று எப்பொழுதும் இன்பமயமாய் 
இருத்தல். அத்தகு இறைவன் எவ்வாறு முனிவார் எனின், 
இறைவன் தன் இன்பநிலையில் என்றும் மாறுவதில்லை. 
உயிர்களாகிய நாம் பிரானை உணரும் இன்ப வழிச் செல்லாது 
தவறிடும் பொழுது, நம்மைத் திருத்துவதற்காக நம் வினையையே  
ஊட்டுகின்றார். இவ்வாறு நம் வினையை நாம் அனுபவிக்குமாறு 
செய்வதையே இங்கு திருநாவுக்கரசர் பெருமான் அருளிச் செய்துள்ளார். 

Related Content

Recipe for Liberation

சிவார்ச்சனா சந்திரிகை - பத்திரங்களுள் மிகச்சிறந்தவை வருமாறு

இறைவனுக்குச் சாத்தும் மலர்கள் எப்படி இருக்க வேண்டும்?

சிவமஹிமை