திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் : பொது
பண் : சாதாரி
நான்காம் திருமுறை
திருவங்கமாலை
திருச்சிற்றம்பலம்
தேடிக் கண்டுகொண்டேன் - திருமாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன். 4.9.11
திருச்சிற்றம்பலம்
thirunAvukkaracar thEvAram
thalam : common
paN : cAthAri
Fourth thirumuRai
thiruvangamAlai
thirucciRRambalam
thEDik kaNDukoNDen - thirumAloDu n^Anmukanum
thEDith thEDoNAth thEvanai ennuLE thEDik kaNDukoNDEn 4.9.11
thirucciRRambalam
Meaning:
I have sought and found out!
The Divine Who was not findable for the mahAviShNu
and four faced who were searching, Him, in me
I have sought and found out!
பொருளுரை:
தேடிக் கண்டுகொண்டேன்!
திருமாலும் நான்முகனும் தேடியும் கிடைக்காத
தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டுகொண்டேன்!
Notes:
1. ஒ. அ. அந்தர்முக சமாராத்யா பஹிர்முக சுதுர்லபா
- லலிதா சஹஸ்ரநாமம்
ஆ. சாத்திரம் ஓதும் சதிர் தனை விட்டு நீர்
மாத்திரைப் பொழுது மறித்துளே நோக்கினால்
பார்த்த அப்பார்வை பசுமரத்து ஆணிபோல்
ஆர்த்த பிறவி அகல விட்டோடுமே - திருமந்திரம்
இ. முகத்தினிற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தினிற் கண்கொண்டு கான்பதே ஆனந்தம் - திருமந்திரம்
2. இறைவன், அறிவாலும் தன் முனைப்பாலும் காணமுயல்பவர்
எவ்வளவு பெரிய தேவரானலும், காண அரியவர். உண்மையான
அன்போடு தன்னை நாடும் அடியவர்களுக்கு எளியவர்.
அ. நாடி நாரணன் நான்முகன் என்றிவர்
தேடியும் திரிந்தும் காண வல்லரோ
மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து
ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே - அப்பர்.
ஆ. பிரானவனை எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார்
சிந்தையினும் இங்குற்றான் காண்பார்க்கு எளிது - அம்மையார்.
இ. கனவிலும் தேவர்க்கு அரியார் போற்றி
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி - திருவாசகம்