திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருக்காளத்தி
பண் : கொல்லி
மூன்றாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி
வட்ட வார்சடையனை வயலணி காழியான்
சிட்ட நான்மறை வல ஞான சம்பந்தன் சொல்
இட்டமாப் பாடுவார்க்கு இல்லையாம் பாவமே. 3.36.11
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : thirukkALaththi
paN : kolli
Third thirumuRai
thirucciRRambalam
aTTamA ciththikaL aNaitharu kALaththi
vaTTa vArcaDaiyanai vayalaNi kAziyAn
ciTTa n^AnmaRai vala nyAna camban^than col
iTTamAp pADuvArkku illaiyAm pAvamE. 3.36.11
thirucciRRambalam
Meaning of Thevaram
Those who sing eagerly the words of thirunyAnacambandhan,
adept in the superior four vedas, resident of field surrounded
cIrkAzi, on the long round (wound) twined hair Lord at
thirukkALaththi, where the eight great attainments wander,
are free from sin.
பொருளுரை
எட்டு பெருஞ்சித்திகள் வந்திருக்கின்ற திருக்காளத்தியில் உறையும்
வட்டமாக முடித்த நீண்ட சடையப்பனை, வயல்கள் அணிசெய்யும்
சீர்காழிப் பதியில் உறையும் மேன்மை பொருந்திய நான்கு மறைகளில்
வல்லவனான திருஞானசம்பந்தன் சொன்ன சொற்களை
விரும்பிப் பாடுபவர்களின் பாவம் இல்லாமல் போனது.
Notes
1. அட்ட மா சித்தி - அணிமா முதலான எட்டு பெரும் சித்திகள்.
(விளக்கம் திருமந்திரத்தில் காண்க. /thirumurai/tenth-thirumurai/379/thirumoolar-nayanar-thirumandiram-tantiram-3-ataingkayogam
640 தொடங்கி உள்ள மந்திரங்கள்.)
2. சிட்ட - சிரேஷ்டம் - மேன்மை