logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

eiraivan-kaalanthaizhthuvaaraa

இறைவன் காலந்தாழ்த்துவாரா?

 
 

திருநாவுக்கரசர் தேவாரம்

 
தலம்    : திருக்கடவூர் மயானம் 
திருக்குறுந்தொகை 
ஐந்தாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
உன்னி வானவர் ஓதிய சிந்தையில் 
கன்னல் தேன் கடவூரின் மயானத்தர் 
தன்னை நோக்கித் தொழுதெழுவார்க்கெலாம் 
பின்னை என்னார் பெருமான் அடிகளே.        5.38.2 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunAvukkaracar thEvAram

 
thalam    :    thirukkaDavUr mayAnam 
thirukkuRunthokai 
Fifth thirumuRai 
 
thirucciRRambalam 
 
unni vAnavar Odhiya cin^thaiyil 
kannal thEn kaDavUrin mayAnaththar 
thannai n^Okkith thozuthezuvArkkelAm 
pinnai ennAr perumAn aDikaLE            5.38.2 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

 
In the minds of the celestials who contemplated  
and hailed, sugarcane juice and honey is the  
Lord of thirukkaDavUr mayAnam! 
For those who rise worshipping Him, 
the perumAn aDikaL does not say, "Later (we will bless)"! 
 
பொருளுரை


உள் நினைந்து வானவர்கள் ஓதிட, அவர்கள் சிந்தையில் 
கரும்பின் சாறாகவும், தேனாகவும் இனிப்பவர் திருக்கடவூர் 
மயானத்துப் பெருமான். அந்தப் பெருமான் அடிகள் 
தன்னை நோக்கித் தொழுதெழுவார்களுக்குப் 
"பின்னர் அருள்வோம்" என்னார். (அப்பொழுதே அருள் புரிவார்.) 
 
Notes


1. இறைவனுடைய மிகச்சிறப்பான இயல்பை வாகீச முனிவர் 
இங்கு கூறுகின்றார். அளவில்லாத பேரருள் இன்பம் அளிக்க 
சிவபெருமான் எப்பொழுதும் தயாராக உள்ளார். தொழுகின்ற 
நாம் அடைந்துள்ள பக்குவத்திற்கு ஏற்பக் காலந்தாழ்த்தாது 
திருவருள் செய்யும் பெருங்கருணைப் பேராளர் அவர். 
2. பெருமான் அடிகள் - இறைவனின் திருநாமம்.  
சம்பந்தரும், சுந்தரரும் கூட இவ்வாறே அழைத்தமை காணலாம். 
(பேச வருவார் ஒருவர் அவர் எம் பெருமான் அடிகளே - சம்பந்தர். 
கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே - சுந்தரர்.) 
3. உன்னுதல் - நினைதல்; கன்னல் - கரும்பின் சாறு. 

Related Content

Who else is my Saviour ?

63 Nayanmar Drama-பேயாய நற்கணத்தார் - காரைக்கால் அம்மையார் -

The Thief Who Barged In

சிவார்ச்சனா சந்திரிகை - பூசைசெய்தற்குரிய காலம்

இறைவன் வலத்தில் நிற்கும் மாறிலாதார்