logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

eduthanai-thaduthanai

எடுத்தானைத் தடுத்தானை

 
 

திருநாவுக்கரசர் தேவாரம்

 
தலம்    : திருக்கச்சி ஏகம்பம் 
பண்     : காந்தாரம் 
நான்காம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
அடுத்தானை உரித்தானை அருச்சுனற்குப் பாசுபதம் 
கொடுத்தானைக் குலவரையே சிலையாகக் கூரம்பு 
தொடுத்தானைப் புரமெரிய சுனைமல்கு கயிலாயம் 
எடுத்தானைத் தடுத்தானை என்மனத்தே வைத்தேனே.        4.7.10 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunAvukkaracar thEvAram

 
thalam    :    thirukkacci Ekambam 
paN    :    gAndhAram 
Fourth thirumuRai 
 
thirucciRRambalam 
 
aDuththAnai uriththAnai aruccunaRkup pAcupatham 
koDuththAnaik kulavaraiyE cilaiyAkak kUrambu 
thoDuththAnaip purameriya cunaimalku kayilAyam 
eDuththAnaith thaDuththAnai en manaththE vaiththEnE         4.7.10 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

 
One Who pealed the assaulting elephant; 
One Who gave the pAshupata weapon to arjuna; 
One Who shot the sharp arrow with the glorious  
mount as the bow burning the three cities; 
One Who prevented the one (rAvaNa) who lifted  
the thirukkayilAyam having ponds 
- Him, I have placed in my mind! 
 
பொருளுரை

 
போருக்கு வந்த யானையை உரித்தவனும், 
அருச்சுனற்குப் பாசுபத அத்திரத்தை அளித்தவனும், 
பெருமைவாய்ந்த மலையை வில்லாகக் கூரிய அம்பு 
தொடுத்து முப்புரம் எரித்தவனும், 
சுனைகள் மிக்க திருக்கயிலாய மலையை எடுத்தவனை 
(இராவணனை), அது செய்ய விடாது தடுத்தவனும் 
ஆகிய பெருமானை என் மனத்தே வைத்தேனே. 
 
Notes


1. அடுத்தானை - அடுத்த ஆனை - சண்டையிட வந்த யானை;  
குலவரை - இங்கு மந்தர மலை (ஏழு குலவரைகள் -  
கயிலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலம்) 

Related Content

The Best Escort is Namasivaya

Oh God save me

Saw Their Holy Feet, the Unseen I saw !!

May Your Feet Never Slip From My Mind

My Focus is You, Give me the Glorious State