logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

chelar-vinpeychil-eizhiya-chelar-payrinpam-thuythuyya

சிலர் வீண்பேச்சில் இழிய, சிலர் பேரின்பம் துய்த்துய்ய

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்

   
தலம்    : திருவாவடுதுறை 
பண்    : காந்தாரபஞ்சமம் 
மூன்றாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் 
அத்தா உன் அடியலால் அரற்றாதென் நாப் 
புத்தரும் சமணரும் புறன் உரைக்கப் 
பத்தர்கட்கு அருள் செய்து பயின்றவனே. 
    இதுவோ எமையாளுமாறு ஈவதொன்றெமக்கில்லையேல் 
    அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே.        3.4.10 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunyAnacamban^thar thEvAram

   
thalam    :    thiruvAvaDuthuRai 
paN    :    gAndhAra panycamam 
Third thirumuRai 
 
thirucciRRambalam 
 
piththoDu mayaN^giyOr piNi varinum 
aththA un aDiyalAl araRRAthan n^Ap 
puththarum camaNarum puRan uraikkap 
paththarkaTku aruL ceythu payinRavanE. 
    ithuvO emaiyALumARu IvathonRemakkillaiyEl 
    athuvO unathinnaruL AvaDuthuRaiyaranE.        3.4.10 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

   
Even if the sickness comes with insanity, 
oh Father, my tongue will not utter other than Your feet! 
Oh the One Who practices blessing the devotees, 
as the buddhins and jains backbite! 
    If this is the way to govern us and nothing to give us, 
    that be Your nice blessings, oh the hara of thiruvAvaDuthuRai! 
 
பொருளுரை

   
பைத்தியம் பிடித்து நோய்வாய்ப்பட்ட போதிலும் 
தந்தையே, உனது திருவடியல்லால் எனது நாக்கு அரற்றாது! 
புத்தர்களும், சமணர்களும் (வீணே) புறங்கூறித் திரிய, 
தனது அடியவர்களுக்குத் திருவருள் செய்தலைத் தொடர்ந்து செய்பவனே! 
    இவ்வகையே எம்மை ஆளும் வகையாக, 
    எமக்குக் கொடுப்பது ஒன்றும் இல்லையானால், 
    அதனையே உனது திருவருளாகக் கொள்வோம் 
    திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் அரனே! 
 
Notes

  
1. சித்த சுவாதீனம் இல்லாத பொழுது திருவைந்தெழுத்து 
சொல்ல இயலுமா எனின், சுந்தரர் தேவாரம் விடையளிக்கிறது - 
நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே. 
 
  பெருமான் திருநாமத்தையே சொல்லிப் பழகிய நாக்கு அதனையே 
அரற்றும். அப்பைய தீக்ஷ¢தர் வரலாற்றில் உன்மத்த பஞ்சாசத் இயற்றிய 
பகுதி காண்க. /devotees/sri-appayya-dikshitar-divya-charthram 
2. புத்தரும் சமணரும் புறனுரைக்க - இவர்கள் நாத்தீகத்தால் 
இறைவனை நாடாது தம் அறிவுக்கு எட்டியதே உரைத்துக் கிடக்க, 
இறைவன் தன்னை நாடும் அடியவர்களுக்கு ஓயாது அருள் செய்து 
கொண்டிருக்கிறான். 
 ஒ. சங்கரன் சார்ந்தவர்க்கல்லால் நலமிலன் - அப்பர். 
3. பயிலுதல் - திரும்பத் திரும்பச் செய்தல். 

Related Content

Drive Away My Fear

Get firm devotion - the Glorious wealth

Drive away my fear

எல்லாம் ஈசன் அருள்

உடல் தளர்ந்த பொழுதும் உனை ஏத்துவேன்