திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
தலம் : திருநாலூர்மயானம்
பண் : சீகாமரம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
பாலூரு மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும்
மேலூருஞ் செஞ்சடையான் வெண்ணூல் சேர் மார்பினான்
நாலூர் மயானத்து நம்பான்றன் அடி நினைந்து
மாலூருஞ் சிந்தையர் பால் வந்தூரா மறுபிறப்பே.
திருச்சிற்றம்பலம்
thirugnanasambandhar aruLiya thevaram
thalam : thirunAlUrmayAnam
paN : seekAmaram
Second thirumuRai
thirucciRRambalam
pALUru malaippAmbum panimathiyum maththamum
mElUruny cenycaDaiyAN VENNUl cEr mErbinAn
n^AlUr mayAnaththu n^ambAnRan aDi n^inain^thu
mAlUruny cin^thaiyar pAl van^thUrA maRupiRappE.
thirucciRRambalam
Explanation of song:
One with red twined hair on which python snarls along
and cool moon and maththam flower stay,
One having in the chest adorned with white thread,
our Beloved at thirunAlUr mayAnam - those who
think His Feet and have an enthralled mind,
on them rebirth will not cloak them.
Notes:
1. mAl - in lost state of mind.