logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

ayarvu-niingku-neinjsamay

அயர்வு நீங்கு நெஞ்சமே

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்

 
தலம்    : திருக்கழுமலம்  
பண்    : கொல்லி 
மூன்றாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
அயர்வுளோம் என்று நீ அசைவொழி நெஞ்சமே 
நியர்வளை முன் கையாள் நேரிழையவளொடும் 
கயல் வயல் குதிகொளும் கழுமல வளநகர்ப் 
பெயர்பல துதிசெயப் பெருந்தகை இருந்ததே.        3.24.4 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunyAnacamban^thar thEvAram

 
thalam    :    thirukkazumalam 
paN    :    kolli 
Third thirumuRai 
 
thirucciRRambalam 
 
ayarvuLOm enRu n^I acaivozi n^enycamE 
n^iyarvaLai munkaiyAL n^Erizai avaLoDum 
kayal vayal kuthikoLum kazumala vaLan^agarp 
peyar pala thuthi ceyap perun^thakai irun^thathE.        3.24.4 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

 
Oh my mind, do not suffer saying, "we are exhausted!" 
Our Magnanimous along with the well adorned Lady of 
bright bangles in forehand, is at the prosperous town 
of thirukkazumalam where kayal fishes jump in the fields, 
to be hailed with many names! 
 
பொருளுரை

 
நெஞ்சமே! நீ, "நாம் அயர்ந்து போனோம்!" என்று தளர்ந்துவிடாதே! 
ஒளி மிக்க வளையல்களை அணிந்த கைகளை உடைய, 
அணிகலன்களை அணிந்த உமையோடு, கயல் மீன்கள்  
வயலிலே குதிக்கின்ற வளமான நகரமாம் திருக்கழுமலத்தில் 
தன் பெயர்கள் பலவும் கூறி (நாம்) துதிக்கப் பெருந்தகையாம் 
சிவபெருமான் வீற்றிருக்கின்றார்! 
 
Notes


1. திருமறைக்காட்டிலிருந்து திருஞானசம்பந்தர் மதுரை மாநகரில் 
சமணரை வென்று சைவநீதி தழைக்கச் செய்து வீற்றிருந்தார். 
அவர் தம் தந்தையாராம் சிவபாத இருதயர், பலகாலமாயதால் 
பிள்ளையாரைக் காண மதுரை வந்தார். வந்த தந்தையாரிடம் 
தம் உயிர்க்குத் தாயும் தந்தையுமாகிய தோணிபுரத்து இறைவன் 
இருந்த சிறப்பை பேசி இத்திருப்பதிகம் ஓதினார். 
2. "மண்ணில் நல்ல வண்ணம்" என்று துவங்கும் இத்திருப்பதிகம் 
எல்லா நலன்களையும் பெற்று வாழ ஓத வேண்டிய திருப்பதிகமாகும். 
முழுப்பதிகம்: /prayers-for-specific-ailments 
3. அயர்வுளோம் என்று நீ அசைவொழி நெஞ்சமே 
ஒ. சிவன தாள் சிந்தியாப் பேதைமார் போல நீ வெள்கினாயே - சம்பந்தர் 
   நடலையில்லோம் - அப்பர். 
4. அசைதல் - தளர்தல்; நியர் - நிகர் என்பதன் திரிபு. 

Related Content

Palindromic song

Lead Happy Life

Medicine, Mantra & Meritorious

Need what else protection ?

For Glorious Marriage