logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

aramum-arulum-amaintha-perumaan

அறமும் அருளும் அமைந்த பெருமான்


திருநாவுக்கரசர் தேவாரம்

 
தலம்    : திருவதிகை 
பண்     : கொல்லி 
நான்காம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
பொன் போல மிளிர்வதோர் மேனியினீர் 
    புரிபுன் சடையீர் மெலியும் பிறையீர் 
துன்பே கவலை பிணி என்று இவற்றை 
    நணுகாமல் துரந்து கரந்தும் இடீர் 
என்போலிகள் உம்மை இனித் தெளியார் 
    அடியார் படுவது இதுவேயாகில் 
அன்பே அமையும் அதிகைக்கெடில 
    வீரட்டானத்துறை அம்மானே.        4.1.9 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunAvukkaracar thEvAram

 
thalam    :    thiruvAlavAy 
paN    :    kolli 
Fourth thirumuRai 
 
thirucciRRambalam 
 
pon pOla miLirvathOr mEniyinIr 
    puripun caDaiyIr meliyum piRaiyIr 
thunbE kavalai piNi enRu ivaRRai 
    n^aNukAmal thuran^thu karan^thum iDIr 
enpOlikaL ummai inith theLiyAr 
    aDiyAr paDuvathu ithuvEyAkil 
anbE amaiyum athikaik keDila 
    vIraTTAnaththu uRai ammAnE        4.1.9 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

 
Oh the One of the form shining like gold! 
Of twined holy hair! Of waning crescent! 
Drive away without allowing near and remove - 
the misery, worries and sickness! 
If this is what the devotees undergo, 
people like me will not realize You! 
Oh Mother for Whom love is the quality, 
residing at the thiruvadhikaik keDila vIraTTAnam! 
 
பொருளுரை


பொன் போன்று மிளிர்கின்ற திருமேனி உடையவரே! 
பின்னியுள்ள புனிதமான சடையுடையவரே! 
மெலிந்துவரும் பிறையைச் சூடியவரே! 
துன்பம், கவலை, நோய் என்னும் இவற்றை 
அருகில் வராது விரட்டி, இல்லாது செய்துவிடுங்கள்! 
அடியவர்கள் இதுபோன்று துன்புற்றால் என் போன்றவர்கள் 
உம்மைத் தெளிந்து உய்யமாட்டார்கள். 
அன்பே உடைய திருவதிகை வீரட்டானத்தில் 
உறைகின்ற தாய் போன்றவனே! 
 
Notes


1. இறைவன் தருகின்ற எந்தத் துன்பமும் அறம் இன்றிக் 
கொடுக்கப்பட்டதல்ல. எனினும் பல நேரங்களில் அவற்றை 
நம்மால் பொறுக்க இயலாது அவரிடமே முறையிடுகின்றோம். 
இறைவன் அருளால் (அறம் விலகாத அளவில்) தணிக்கின்றார். 
(இவ்வாறே உருத்திரப் பெருமறையும் பல இடங்களில்  
இறைவனை வேண்டுகின்றது.) 
2. நணுகாது - அணுகாது; துரத்தல் - விரட்டுதல்;  
கரத்தல் - நீக்குதல்; போலிகள் - போன்றவர்கள். 

Related Content

The Best Escort is Namasivaya

Oh God save me

Saw Their Holy Feet, the Unseen I saw !!

May Your Feet Never Slip From My Mind

My Focus is You, Give me the Glorious State