logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

annaamalaiyaar-cheyalkal

அண்ணாமலையார் செயல்கள்

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்

   
தலம்    :    திருவண்ணாமலை 
பண்    :    நட்டபாடை 
முதல் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
உதிரும் மயிர் இடுவெண்டலை கலனா உலகெல்லாம் 
எதிரும் பலி உணலாகவும் எருது ஏறுவது அல்லால் 
முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேற் கொள அடிமேல் 
அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலையதுவே. 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunyAnacambanthar thEvAram

  
thalam    :     thiruvaNNAmalai 
paN    :    naTTapADai 
First thirumuRai 
 
thirucciRRambalam 
 
uthirum mayir iDu veN thalai kalanA ulakellAm 
ethirum pali uNalAkavum eruthu ERuvathu allAl 
muthirum caDai iLaveNpiRai muDimER koLa aDimEl 
athiruN^ kazal aDikaTku iDam aNNAmalai athuvE. 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

  
Apart from begging throughout the world with the 
hair-fallen white-skull bowl and riding the bull, 
One Who has the tender white crescent on the  
old matted hair and reverberating anklet on the foot 
- that Reverend's place is only that thiruvaNNAmalai. 
 
பொருளுரை

  
முடி உதிர்ந்த வெண் தலையை இடுகின்ற ஓடாகக்  
கொண்டு உலகெங்கும் எடுக்கும் பிச்சையை உணவாகவும், 
எருதினை வாகனமாகவும் உடையவராக இருப்பது மட்டுமல்லாமல் 
முதிர்ந்த சடைமேல் இளமையான வெண்பிறையை அணிந்து 
திருவடிகளில் அதிர்ந்து ஒலிக்கின்ற கழல்களை உடைய  
அடிகளாருடைய இடமே அந்தத் திருவண்ணாமலை. 
 
Notes

  
1. கலன் - பாத்திரம்; பலி - பிச்சை. 

Related Content

Five Deeds of Lord

Sure loss of evils

The Best Wealth

Help in Distress

Devotees' Hurdle Remover