திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திரு அண்ணாமலை
பண் : நட்டபாடை
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
விளவார் கனி பட நூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர் தாமரை மலர் மேல் உறை கேடில் புகழோனும்
அளவா வணம் அழலாகிய அண்ணாமலை அண்ணல்
தளரா முலை முறுவல் உமை தலைவன் அடி சரணே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : thiruvaNNAmalai
paN : naTTapADai
First thirumuRai
thirucciRRambalam
viLavAr kani paDa n^URiya kaDal vaNNanum vEdhak
kiLar thAmarai malar mEl uRai kEDil pukazOnum
aLavA vaNam azalAkiya aNNAmalai aNNal
thaLarA mulai muRuval umai thalaivan aDi caraNE.
thirucciRRambalam
Meaning of Thevaram
The Superior of thiruvaNNAmalai, Who became the Flame
immeasurable by the sea-colored one who smashed falling
the wood-apple fruits (viShNu) and the flawless famous one
residing on the rising vedic lotus (brahma), that Lord of
unslackening breasts and smiling umA, His Feet is the refuge!!
பொருளுரை
விளாம்பழங்கள் வீழ எறிந்த கடல்வண்ணனும் (திருமால்),
வேதமாகிய எழு தாமரையின் மேல் இருக்கின்ற கேடில்லாப்
புகழுடையவனும் (பிரம்மா) அளக்க இயலாத வண்ணம்
தீப்பிழம்பாய்த் தோன்றிய திருவண்ணாமலை அண்ணலாம்,
தளராத மார்பகங்களும், முறுவலும் உடைய உமையம்மையாரின்
தலைவனாரின் திருவடிகள் (நமக்கு) அடைக்கலம்.
Notes
1. விளவார் கனி பட நூறிய கடல்வண்ணன்
- மகாபாரதக் குறிப்பு. கண்ணனார் கன்றின் வடிவமாக
வந்த அசுரனை எறிந்து விளாமர உருவில் நின்ற அசுரனையும்
சேர்த்துக் கொன்றமை.
கன்றால் விளவெறிந்தான் - திருவாசகம்
விளவைத் தளர்வித்த விண்டுவும் - நம்பியாண்டார் நம்பி
2. கேடில் புகழோனும் - ஞானசம்பந்தப் பெருமான், மிக உயர்ந்த
பிரமனுக்கும் மாலுக்கும் இறைவனாகச் சிவபெருமான் விளங்குதலைக்
கூறுகின்றாரே அன்றி, அவர்களை இகழவில்லை என்பது இது போன்ற
பல இடங்களில் புலப்படும்.
(மற்றோர் சான்று: ஏவியல் வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரம்)
3. நூறுதல் - எறிதல்/அழித்தல்;