logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

aliyum-aayavan

அலியும் ஆயவன்

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்

 
தலம்    : திருவேடகம் 
பண்    : கொல்லி 
மூன்றாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
வரியணி நயனி நன் மலைமகள் மறுகிடக் 
கரியினை உரிசெய்த கறையணி மிடறினன் 
பெரியவன் பெண்ணினோடு ஆண் அலியாகிய 
எரியவன் உறைவிடம் ஏடகக் கோயிலே.        3.32.5 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunyAnacamban^thar thEvAram

 
thalam    :    thiruvEDagam 
paN    :    kolli 
Third thirumuRai 
 
thirucciRRambalam 
 
variyaNi n^ayani n^an malaimakaL maRukiDak 
kariyinai uriceytha kaRaiyaNi miDaRinan 
periyavan peNNinODu AN aliyAgiya 
eriyavan uRaiviDam EDagak kOyilE.            3.32.5 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram


One with stain-worn-throat, Who peeled the elephant  
making the nice Lady of mountain with striped-eyes 
frightened; The Big; Fire-like Who became 
male, female and neuter; His residence if the  
abode of thiruvEDagam. 
 
பொருளுரை

 
வரிகளை உடைய கண்ணுடைய நல்ல மலைமகள் அஞ்சுமாறு 
யானையை உரித்த கறுத்த கண்டம் உடையவன்; 
பெரியவன்; பெண் ஆண் அலி என்ற இயல்புகள் எல்லாம் ஆகிய 
எரி உருவானவனின் உறைவிடம் திருவேடகக் கோயில் ஆகும். 
 
Notes

 
1. வரியணி நயனி - செவ்வரியோடிய கண்கள். 
2. பெண்ணினோடு ஆண் அலியாகிய  
இறைவனை ஆணாகவும் பெண்ணாகவும் காட்டுவதோடு  
நில்லாமல் அலியாகவும் காட்டுகின்றது சைவம். 
"ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான்." 
திருவாசகத்தில் இத்தன்மை பல இடங்களில் சுட்டப்படுகின்றது. 
3. நயனி - கண்ணுடையவள்; மறுகுதல் - கலங்குதல்;  
கரி - யானை. 

Related Content

Reputation of Thiruvedakam

கவலை நீங்க வழி

ஐயனை அரற்றுமின்