திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருப்புள்ளிருக்குவேளூர்
பண் : சீகாமரம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழ நின்ற பரஞ்சோதி பயிலுமிடம்
வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தின் வழிபட்டான் புள்ளிருக்குவேளூரே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : thiruppuLLirukkuvELUr
paN : cIkAmaram
Second thirumuRai
thirucciRRambalam
gIdhaththai mikappADum aDiyArkaL kuDiyAgap
pAdhaththaith thoza n^inRa paranycOthi payilumiDam
vEdhaththin man^dhiraththAl veNmaNalE civamAgap
pOdhaththin vazipaTTAn puLLirukkuvELUrE.
thirucciRRambalam
Meaning of Thevaram
The place the Supreme Light practices, with
the devotees who verily sing the hails saluting
the Feet as the sanctuary, is thiruppuLLirukkuvELUr,
where with the mantra of vedas, white sand as the
shivalinga (sambAdhi and jaTAyu) worshipped in wisdom!
பொருளுரை
கீதத்தை மிகவும் பாடும் அடியவர்கள் தம் சரணாலயம்
இதுவெனத் திருப்பாதங்களைத் தொழுதேத்த நின்ற பரஞ்சோதி
இருக்கின்ற இடமாவது, வேதத்தின் மந்திரத்தால்,
வெண்மணலைச் சிவலிங்கமாகச் செய்து, ஞானத்தால்
(சம்பாதி, சடாயு) வழிபட்ட திருப்புள்ளிருக்குவேளூராகும்.
Notes
1. ஒ. அ. பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
- இதே பதிகத்தில்.
ஆ. நாராயணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் - திருவாசகம்
2. போதம் - ஞானம்.