திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருமருகல்
பண் : இந்தளம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
வய ஞானம் வல்லார் மருகற் பெருமான்
உயர் ஞானம் உணர்ந்து அடி உள்குதலால்
இயல் ஞான சம்பந்தன பாடல் வல்லார்
வியன் ஞாலமெல்லாம் விளங்கும் புகழே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar thEvAram
thalam : thirumarugal
paN : indhaLam
Second thirumuRai
thirucciRRambalam
vaya nyAnam vallAr marugaR perumAn
uyar nyAnam uNarn^thu aDi uLguthalAl
iyal nyAna camban^dhana pADal vallAr
viyan nyAlamellAm viLaN^gum pukazE.
thirucciRRambalam
Meaning of Thevaram
Because of contemplating the Feet, realizing the
supreme wisdom of the Lord of thirumarugal,
where people of wisdom subjected (to the Lord) live,
the able thirunyAnacambandhan sung songs
those who are capable, their fame will shine
throughout the grand world.
பொருளுரை
(இறைவனிடத்து) வயமாகின்ற ஞானமுடையவர் வாழ்கின்ற
திருமருகற் பெருமானுடைய உயர்ந்த ஞானத்தை உணர்ந்து
திருவடியை நினைத்தலால் இயங்குகின்ற திருஞானசம்பந்தன்
சொன்ன பாடல்கள் வல்லவர்களுடைய புகழ்
இப்பரந்த உலகெங்கும் விளங்கும்.
Notes
1. வய ஞானம் வல்லார்:
சடையில் கங்கை தரித்தானைச் சாராதார் சார்பென்னே - சுந்தரர்.
ஞானத்தின் பயனானது இறைவனின் வயப்படுதலே. அவ்வாறு
இறைவனிடத்து முழு அடைக்கலம் அடைந்து வயப்படுவோர்க்கு
இன்பமே ஆகும்.
(ஒ: ஆப்யாயந்து மமாங்கானி வாக் ப்ராண: சக்ஷ¤ ச்ரோத்ர மதோ
பலம் இந்த்ரியானி சர்வானி| சர்வம் ப்ரஹ்மோபநிஷதம்||
- சந்தோக உபநிஷத சாந்தி பாடம்
உடல், சொல், பிராணன் இந்திரியங்கள் எல்லாம் இறைவன்
திருக்குறிப்பில் நடக்கட்டும்.)
2. அடி உள்குதலால் இயல் ஞானசம்பந்தன்
இவ்வாறாக இறைவன் வழி நிற்றலே ஞானசம்பந்தப் பெருமான்
போன்ற சீரடியார்களின் ஆற்றல். அவர் செய்த அற்புதங்களும்
திருப்பதிகங்களும் இறைவனை முன்னிறுத்தியே செய்யப்பட்டன.
திருத்தொண்டர் புராணத்தும், பிள்ளையார் திருமொழிகளிலும்
இதனை நன்கு தெளியலாம்.
அ. ஈனர்கட்கு எளியேன் அலேன் திருவாலவாய் அரன் நிற்கவே
ஆ. எனதுரை தனதுரையாக
3. வியன் - பெரிய; ஞாலம் - உலகம்.