logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

aayiram-paattu

ஆயிரம் பாட்டு

 
 

திருநாவுக்கரசர் தேவாரம்


தலம்    : திருவாரூர் 
பண்     : காந்தாரம் 
நான்காம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
ஆயிரம் தாமரை போலும் 
    ஆயிரஞ் சேவடியானும் 
ஆயிரம் பொன்வரை போலும் 
    ஆயிரந் தோளுடையானும் 
ஆயிரம் ஞாயிறு போலும் 
    ஆயிரம் நீண்முடியானும் 
ஆயிரம் பேருகந்தானும் 
    ஆருர் அமர்ந்த அம்மானே.        4.4.8 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunAvukkaracar thEvAram


thalam    :    thiruvArUr 
paN    :    gAndhAram 
Fourth thirumuRai 
 
thirucciRRambalam 
 
Ayiram thAmarai pOIum 
    Ayiram cEvaDiyAnum 
Ayiram ponvarai pOlum 
    Ayiram thOLuDaiyAnum 
Ayiram nyAyiRu pOlum 
    Ayiram n^INmuDiyAnum 
Ayiram pErukan^thAnum 
    ArUr amarn^tha ammAnE.        4.4.8 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

 
Like thousands of lotuses One Who has thousands of perfect Feet, 
like thousands of golden mounts One Who has thousands of shoulders, 
like thousands of suns One Who has thousands of long hair, 
One Who is pleased with thousands of names, 
He is the mother-like sitting at thiruvArUr! 
 
பொருளுரை


ஆயிரக்கணக்கான தாமரை போன்ற ஆயிரக்கணக்கான சீர்மிகு திருவடிகளுடையவனும், 
ஆயிரக்கணக்கான பொன்மலைகள் போன்ற ஆயிரக்கணக்கான தோள்கள் உடையவனும், 
ஆயிரக்கணக்கான சூரியர்கள் போன்று ஆயிரக்கணக்கான நீண்ட முடிகள் உடையவனும், 
ஆயிரக்கணக்கான பெயர்களை உகந்து கொண்டவனும் திருவாரூரில் அமர்ந்திருக்கும் 
அன்னை போன்றவனே. 
 
Notes

 
1. இறைவனின் பலபலவாம் வியன் தோற்றத்தினை கண்டு 
மகிழ்ந்து காட்டுகிறார். 
ஒ. ஸஹஸ்ராக்ஷ சதேஷ¤தே, 
   ஸஹஸ்ரானி ஸஹஸ்ரசோ யே ருத்ரா அதிபூம்யாம் - ஸ்ரீருத்ரம் 
   ஸஹஸ்ர ஸீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ ஸஹஸ்ர பாத் - புருஷ ஸ¥க்தம் 
2. ஆயிரம் பேருகந்தானும் 
ஒ. ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம் 
   திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ - திருவாசகம். 
3. வரை - மலை; ஞாயிறு - சூரியன். 

Related Content

The Glory of Arudra Dharisanam

Don't Worry Mind, You will be blessed !

Instead of ripe I went for immature !

Recipe for Liberation

The praise of the greats