திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் : திருவாரூர்
பண் : காந்தாரம்
நான்காம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
பாடிளம் பூதத்தினானும்
பவளச் செவ்வாய் வண்ணத்தானும்
கூடிள மென்முலையாளைக்
கூடிய கோலத்தினானும்
ஓடிள வெண்பிறையானும்
ஒளிதிகழ் சூலத்தினானும்
ஆடிளம் பாம்பசைத்தானும்
ஆருர் அமர்ந்த அம்மானே. 4.4.1
திருச்சிற்றம்பலம்
thirunAvukkaracar thEvAram
thalam : thiruvArUr
paN : gAndhAram
Fourth thirumuRai
thirucciRRambalam
pADiLam bUthaththinAnum
pavaLac cevvAy vaNNaththAnum
kUDiLa menmulaiyALaik
kUDiya kOlaththinAnum
ODiLa veNpiRaiyAnum
oLithikaz cUlaththinAnum
ADiLam pAmbacaiththAnum
ArUr amarn^tha ammAnE 4.4.1
thirucciRRambalam
Meaning of Thevaram
One with singing young bhUthas;
One with coral red lips;
One Who is in the Form united with
the lady of gapless soft breasts;
One with young white running moon;
One with brilliant trident;
One tied with dancing young snake
- He is the Mother-like sitting at thiruvArUr!
பொருளுரை
பாடுகின்ற இளம் பூதங்களை உடையவனும்,
பவளம் போன்று சிவந்த திருவாய் உடையவனும்,
சேர்ந்திருக்கின்ற மென்முலைகளுடைய நங்கையை
ஒரு பாகம் கொண்ட திருக்கோலத்தானும்,
(விண்ணில்) ஓடிக்கொண்டிருக்கின்ற இள வெண்பிறை உடையவனும்,
ஒளிர்கின்ற சூலத்தை உடையவனும்,
ஆடுகின்ற இளம் பாம்பைக் கட்டியுள்ளவனும்
திருவாரூரில் அமர்ந்துள்ள தாய்போன்றவன்!
Notes
1. அசைத்தல் - கட்டுதல்