logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

aaravaar-chorkalil-mayaingkathir

ஆரவாரச் சொற்களில் மயங்காதீர்

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்

 
தலம்    : திருக்கழுமலம்  
பண்    : கொல்லி 
மூன்றாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
தாருறு தட்டுடைச் சமணர் சாக்கியர்கள் தம் 
ஆருறு சொற் களைந்து அடியிணை அடைந்துய்ம்மின் 
காருறு பொழில் வளர் கழுமல வளநகர்ப் 
பேரறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே.        3.24.10 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunyAnacamban^thar thEvAram

 
thalam    :    thirukkazumalam 
paN    :    kolli 
Third thirumuRai 
 
thirucciRRambalam 
 
thAruRu thaqTTuDaic camaNar cAkkiyarkaL tham 
AruRu coR kaLain^thu aDiyiNai aDain^thuymmin 
kAruRu pozil vaLar kazumala vaLan^agarp 
pErARaththALoDum perun^thakai irun^thathE. 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

 
Getting rid of the noisy words of dusty mat clad jains  
and budhdhists, reach to the Feet parallel and get uplifted! 
There is the Magnanimous along with the Lady of 
great charity at the prosperous town of thirukkazumalam 
where the dense gardens grow! 
 
பொருளுரை


தூசி படிந்த பாயை உடுத்த சமணர் மற்றும் பௌத்தர்களின் 
ஆரவாரமான சொற்களை நீக்கி திருவடி இணையை அடைந்து உய்யுங்கள்! 
கரிய சோலைகள் வளர்கின்ற திருக்கழுமலமாகிய வளமிக்க 
திருநகரில் பெரிய அறத்தைச் செய்யும் உமையம்மையுடன் 
பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருக்கிறார்! 
 
Notes


1. பேரறம் - உயிர்களை உய்விக்கும் பொருட்டு சத்தியானது 
சிவத்தினின்று வெளிப்பட்டுச் செயல்படுவது கருதுக. 
2. தார் - தூசி; தட்டுடை - பாயுடை; ஆர் - ஆரவாரம்; 
கார் - கருமை. 

Related Content

Palindromic song

Lead Happy Life

Medicine, Mantra & Meritorious

Need what else protection ?

For Glorious Marriage