Prayer of the Day
Prayer from Sundarar Dhevaram
சுந்தரர் அருளிய தேவாரம்
தலம் : திருப்பரங்குன்றம்
பண் : இந்தளம்
ஏழாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
முண்டம் தரித்தீர் முதுகாடு உறைவீர்
முழுநீறு மெய் பூசுதீர் மூக்கப் பாம்பைக்
கண்டத்திலும் தோளிலும் கட்டிவைத்தீர்
கடலைக் கடைந்திட்டதோர் நஞ்சை உண்டீர்
பிண்டம் சுமந்து உம்மொடும் கூட மாட்டோம்
பெரியாரொடு நட்பு இனிது என்றிருந்தும்
அண்டம் கடந்து அப்புறத்தும் இருந்தீர்
அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே 7.2.2
திருச்சிற்றம்பலம்
Song as Romanized text
Sundharar aruLiya thEvAram
thalam : Thriuparangunram
Pan : Indhalam
Seventh thirumuRai
thiruchiRRampalam
muNdam thariththIr muthukAdu uRaivIr
muzun-IRu mey pUsuthIr mUkkap pAmpaik
kaNdaththilum thOLilum kaddivaiththIr
kadalaik kadain-thiddathOr n-anjsai uNdIr
piNdam suman-thu ummodum kUda mAddaËm
periyArodu n-adpu inithu enRirun-thum
aNdam kadan-thu appuRaththum irun-thIr
adikEL umakku Adseya anjsuthumE 7.2.2
thirucciRRampalam
Meaning of the Prayer Song:
You carry the skeletons; Reside at the cemetery;
Besmeared through out in ash;
Have tied the ferocious snake around the neck and shoulders;
Ate the poison that came from churning the ocean;
We would not take Your company carrying the body!
Even though there is a saying, "Nice is the association with the great people!",
You stayed beyond the universe!
We are scared of getting into Your fold!