Prayer of the Day
Prayer song in Tamil
அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி
அருளொடு நிறைந்ததெது? தன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
தழைத்ததெது? மனவாக்கினில்
தட்டாமல் நின்றதெது? சமயகோ டிகளெலாந்
தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது?
எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
என்றைக்கு முள்ள தெது? மேல்
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெது? அது
கருத்திற் கிசைந்ததுவே!
கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்
கருதிஅஞ் சலிசெய்குவாம்
தாயுமானவர் - திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்
Shloka as Romanized text
angking kenAthapadi engkum prakAsamAy
Anan-tha pUrththiyAki
aruLodu n-iRain-thathethu thannaruL veLikkuLE
akilANda kOdiyellAn-
thangkum padikkissai vaiththuyirk kuyirAyth
thazaiththathethu manavAkkinil
thaddAmal n-inRathethu samayakO dikaLelAn-
than-theyvam en-theyvamen
Rengkun- thodarn-thethir vazakkidavum n-inRathethu
engkaNum peruvazakkAy
yAthinum vallavoru siththAki inpamAy
enRaikku muLLa thethumEl
kangkulpaka laRan-inRa ellaiyuLa thethuathu
karuththiR kisain-thathuvE
kaNdana velAmOna vuruveLiya thAkavung
karuthianj saliseykuvAm
thAyumAnavar - thiruvaruL vilAsap parasiva vaNakkam
Meaning of the Prayer Song:
Without limiting to here or there, Which is the One
that is splendid everywhere and fulfilled in bliss, complete with grace?
Which is the One that kept within Its enclave of grace
the complete universe and resided within each life as the life force?
Which is the One that stood not confined by the mind and words?
Which is the One that is claimed by all the numerous religions as "Our God"?
Which is the One that is in vogue everywhere, that is intelligent capable than anything else,
and eternally blissful?
Which is the One that is at the region beyond day and night?
Is That imaginable in thoughts!
Let us salute It with the intent of seeing everything as the silent form of space!
Notes:
1. சமயகோ டிகளெலாந்
தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது?
Religions and their zealots claim and fight with each other
arguing their God is the God. But there is one God only and
not one God per religion. Those whose thinking is not large enough
realize that not!