திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
தலம் : திருப்புறவார் பனங்காட்டூர்
பண் : சீகாமரம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
வாளையுங் கயலும் மிளிர் பொய்கை
வார் புனற் கரையருகெலாம் வயல்
பாளையொண் கமுகம் புறவார் பனங்காட்டூர்ப்
பூளையும் நறுங்கொன்றையும் மத
மத்தமும் புனைவாய் கழலிணைத்
தாளையே பரவும் தவத்தார்க்கு அருளாயே.
திருச்சிற்றம்பலம்
Thirugnanasambandhar Thevaram
Thalam : Thirupuravar panagattur
Pan : Sikamaram
Second Thirumurai
thiruchiRRambalam
vALaiyum kayalum miLir poykai
vAr punaR karaiyarukelAm vayal
pALaiyoN kamukam puRavAr panangkAddUrp
pULaiyum n-aRungkonRaiyum matha
maththamum punaivAy kazaliNaith
thALaiyE paravum thavaththArkku aruLAyE.
thiruchiRRambalam
Adjoining the banks of the wide ponds where trichiurus
and carp fishes shine, where in the fields areca-palms
with spathe grow - in such thiruppuravar panangattur,
oh Lord, Who wears Pulai, nice Konrai and Umaththam,
bless those who are in the austerity of hailing (Your)
ornate feet!
Notes:
See Also: