திருச்சிற்றம்பலம்
சாலக் கோயில் உள நின் கோயில்
அவை என் தலைமேற் கொண்டாடி
மாலைத் தீர்ந்தேன் வினையும் துரந்தேன்
வானோர் அறியா நெறியானே
கோலக் கோயில் குறையாக் கோயில்
குளிர் பூங்கச்சூர் வடபாலை
ஆலக்கோயிற் கல்லால் னிழற்கீழ்
அறங்கள் உரைத்த அம்மானே!
திருச்சிற்றம்பலம்
thiruchiRRambalam
sAlak kOyil uLa n-in kOyil
avai en thalaimER koNdAdi
mAlaith thIrn-thEn vinaiyum thuran-thEn
vAnOr aRiyA n-eRiyAnE
kOlak kOyil kuRaiyAk kOyil
kuLir pUngkachchUr vadapAlai
AlakkOyiR kallAl nizaRkIz
aRangkaL uraiththa ammAnE!
thiruchiRRambalam
Notes: