திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
தலம் : திருப்பிரமபுரம்
பண் : நட்டபாடை
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
விண்மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி விளங்கு தலையோட்டில்
உண் மகிழ்ந்த பலி தேரியவந்து எனது உள்ளம் கவர் கள்வன்
மண் மகிழ்ந்த அரவம் மலர்க்கொன்றை மலிந்த வரை மார்பில்
பெண் மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே
திருச்சிற்றம்பலம்
Thirugnanasambandhar Thevaram
Thalam : Thiruppiramapuram
Pan : Nattapadai
First Thirumurai
thiruchiRRambalam
viNmakizn-tha mathil eythathum anRi viLangku thalaiyOddil
uN makizn-tha pali thEriyavan-thu enathu uLLam kavar kaLvan
maN makizn-tha aravam malarkkonRai malin-tha varai mArpil
peN makizn-tha piramApuram mEviya pemmAn ivananRE
thiruchiRRambalam
Other than shooting down the forts that enjoy moving in the sky,
choosing alms of enjoyable food in the skull-bowl,
the Thief, Who came stealing my heart
is the Lord of brahmapuram, Who enjoys the presence of the Lady
in the hill like chest that has abundance of snakes that enjoy
the sand (ant-hill) and floral Konrai.
Notes:
See Also:
திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம் : திருப்பிரமபுரம்
பண் : நட்டபாடை
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
முற்றலாமை இள நாகமோடு ஏன
முளைக்கொம்பு அவை பூண்டு
வற்றலோடு கலனாப் பலி தேர்ந்து எனது
உள்ளம் கவர் கள்வன்
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல்
கையால் தொழுதேத்தப்
பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய
பெம்மான் இவனன்றே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnasambanthar aruLiya thEvAram
thalam : thiruppiramapuram
paN : naTTapADai
First thirumuRai
thirucciRRambalam
muRRalAmai iLa n^AgamODu Ena
muLaikkombu avai pUNDu
vaRRalODu kalanAp pali thErn^thu enthu
uLLam kavar kaLvan
kaRRal kETTal uDaiyAr periyAr kazal
kaiyAl thozuthEththa
peRRam Urn^tha piramApuram mEviya
pemmAn ivananRE.
thirucciRRambalam
Explanation of song:
Wearing old (hardened) turtle, young snake
and the budding horn of boar,
dried out skull as the bowl taking alms
the Thief Who steals my mind
is this Lord of thiruppiramApuram,
Who rode the bull, Whose ornated foot is
saluted with folded hands by the great
people who learn and listen!
Notes:
1. The words used in the song are just lively.
The turtle is old, snake is young and
the boar horn is just budding!
brahma's skull described as vaRRal ODu
is enjoyable.
2. kaRRal kETTal uDaiyar periyAr -
nice description of respectable people -
they learn and experience and listen to others
wise words and experience.
3. Enam - pig/boar; kalan - vessel; pali - alms;
peRRam - bull.