திருச்சிற்றம்பலம்
சொல் இயலாது எழு தூ மணியோசை சுவை தரும் ஆகாதே
துண்ணென என்னுளம் மன்னிய சோதி தொடர்ந்தெழும் ஆகாதே
பல் இயல்பாய பரப்பு அற வந்த பராபரம் ஆகாதே
பண்டு அறியாத பரானுபவங்கள் பரந்தெழும் ஆகாதே
வில்லியல் நன்னுதலார் மயல் இன்று விளைந்திடும் ஆகாதே
விண்ணவரும் அறியாத விழுப்பொருள் இப்பொருள் ஆகாதே
எல்லை இலாதன எண்குணமானவை எய்திடும் ஆகாதே
இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்தருளப் பெறிலே
திருச்சிற்றம்பலம்
Song as Romanized text
thiruchiRRambalam
sol iyalAthu ezu thU maNiyOsai suvai tharum AkAthE
thuNNena ennuLam manniya sOthi thodarn-thezum AkAthE
pal iyalpAya parappu aRa van-tha parAparam AkAthE
paNdu aRiyAtha parAnupavangkaL paran-thezum AkAthE
villiyal n-annuthalAr mayal inRu viLain-thidum AkAthE
viNNavarum aRiyAtha vizupporuL ipporuL AkAthE
ellai ilAthana eNkuNamAnavai eythidum AkAthE
in-thu sikAmaNi engkaLai ALa ezun-tharuLap peRilE
thiruchiRRambalam
Meaning of the Prayer Song:
Wouldn't the indescribable pure ring of the bell that araises, be delectable?
Wouldn't the glow that at once stayed firm in my mind, continue to shine?
Wouldn't the supremacy of getting rid of the scatter, be got?
Wouldn't the supreme experiences unknown earlier, be unfolded?
Wouldn't the love of the ladies of bow like forehead, spring up today?
Wouldn't the Ultimate Thing unknown to celestials, crystalize for us?
Wouldn't the boundless eight qualities, begotten?
If the One, Who has moon as the crown jewel, comes to govern us!
Notes:
1. This song describes the state of the soul that has left its
material consciousness and proceeded to Divine consciousness!
That soul enjoys the Bliss of the Lord shiva unperturbed by the
world. That is brilliantly sung in this poem - thirupadaiyatchi
or Jiva upadi ozidhal.
2. eNguNam - eight qualities.
God also has eight qualities.
By definition these can never be the qualities of the soul, even in the
liberated state. Then what are these 8 qualities? The 8 qualities of
the devotee are given by umApathi Sivam in the song below:
தொண்டரடித் தொழல்பூசைத் தொழில்மகிழ்தல் அழகார்
துளங்கியஅர்ச் சனைபுரிதல் தொகுதி நியமங்கள்
கொண்டபணி திருவடிக்கே கொடுத்தல் ஈசன்
குணமருவும் அருங்கதையைக் குலவிக் கேட்டு
மண்டிவிழி துளும்பல்மயிர் சிலும்பல் உன்னல்
மருவுதிருப் பணிகாட்டி வருப வாங்கி
உண்டிகொளா தொழிதல்என இவையோர் எட்டும்
உடையர் அவர் பத்தர்என உரைத்து ளாரே.