logo

|

Home >

articles >

sivakrayogikalin-saivathondu-oru-siriya-kannottam

சிவாக்ரயோகிகளி‎ன் சைவத்தொண்டு ஒரு சிறிய கண்ணோட்டம்

 

திரு.T.கணேசன்; புதுச்சேரி.

நலம் மலிதரு மறைமொழியொடு நதிஉறுபு னல் புகை ஒளிமுதல்
மலர் அவை கொடு வழிபடுதிறல் மறையவ ன் உயிரதுகொளவரு
சலம் மலிதரு மறலித ன் உயிர்கெட உதைசெய்த அர ன் உறைபதி
திலகம் இது எ ன உலகுகள் புகழ்தரு பொழில் அணி திருமிழலையே.

கேள்வியர் நாள்தொறும் ஓதுநல்வேதத்தர்-கேடு இலா
வேள்விசெய் அந்தணர்வேதியர் -வீழிமிழலையார்
வாழியர்; தோற்றமும் கேடும் வைப்பார் உயிர்கட்கு எலாம்
ஆழியர் தம் அடி போற்றி எ ன்பார்கட்கு அணியரே.

वन्दे तं परमेशानं सच्चिदानन्दलक्षणम् ।
सृष्ट्यादिपञ्चकृत्येशं पशूनां पतिमव्ययम् ।।

15-16 ம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் சைவநிலை

தமிழ்நாட்டில் பதி‎னாறாம் நூற்றாண்டில் மிகுதியான சைவநூல்கள் தமிழிலும் வடமொழியிலும் ‏இயற்றப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம். அதற்கு முந்தைய நூற்றாண்டுகளைவிட 16 ஆம் நூற்றாண்டில் அதிகமான சைவநூல்கள் தோன்றுவதற்கு முக்கியமான காரணம் அந்த காலகட்டத்தில் மற்ற சமயங்களான வேதாந்தமும், (குறிப்பாக அத்வைதவேதாந்தம்) ந‎‎ன்கு பரவி ‏இருந்ததும், இராமா‎னுஜர் மற்றும் மத்வர் முதலான வைணவ ஆசாரியர்கள் வைணவத்தைப் பரப்பும் நோக்கத்துட‎ன் சைவத்தைப் பெரிதும் எதிர்த்து, சைவசமயக் கொள்கைகளைத் தம் நூல்களில் மறுத்து எழுதிவந்ததும் ஒ‎ன்று; விஜயநகர மன்னர்களில் கிருஷ்ணதேவராயர் மற்றும் அவருக்குப் பின் வந்த நாயக்க மன்னர்களுள் பெரும்பாலோரும் வைணவத்தைப் பெரிதும் ஆதரித்து வந்தமையும் மற்றொரு முக்கிய காரணம் எனக் கொள்ளலாம்.

இக்காலத்தில் தோன்றிய சைவநூல்களில் பல மூல ஆகமங்கள் மற்றும் பத்ததி நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்பாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய மிக முக்கியமான சைவ ஆசாரியர்களுள் மறைஞான சம்பந்தர், அவருடைய தலைமைச் சீடரான மறைஞான தேசிகர், வீழிச் சிவாக்கிரயோகிகள், குருஞானசம்பந்தர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் வாழ்ந்து தொண்டாற்றியது தில்லையும், சோழநாடுமாகும். ‏‏இவர்களுள், மறைஞான சம்பந்தர், அவருடைய தலைமைச் சீடரான மறைஞான தேசிகர், ஆகியோர் ஆற்றிய சைவத்தொண்டி‎னை அவர்கள் ‏இயற்றிய நூல்களி‎ன் ஆதாரத்துட‎ன் மிக விரிவானதோர் ஆராய்ச்சியை யாம் மேற்கொண்டு அதை ஆங்கிலத்தில் ஒரு நூலாகப் பதிப்பித்தோம். அத‎ன் தலைப்பு: TWO SAIVA TEACHERS OF THE 16TH CENTURY: NIGAMAJNANA I AND HIS DISCIPLE NIGAMAJNANA II” எ‎ன்பது. ‏‏இந்நூல் நா‎ன் பணிபுரியும் French Institute of Pondicherry யி‎‎ன் பதிப்பாக இவ்வாண்டு வெளியா‎னது. அடுத்து, நாம் காண ‏இருப்பது 16 ஆம் நூற்றாண்டி‎ன் மற்றொரு முக்கிய சைவாசாரியரி‎ன் மிகப் பெரிய சைவத்தொண்டு.

சிவாக்ரயோகிகளி‎ன் சைவபரம்பரை

சிவஞா‎னபோதம் அருளிய மெய்கண்டார் நந்திபரம்பரையைச் சார்ந்தவர் எ‎ன்பது அனைவரும் அறிந்ததே; ஏ‎னெனில், சிவபெருமான் சிவஞா‎னபோதசாத்திரத்தை நந்தியம்பெருமா‎னுக்கருள, அவர்வழியில் மெய்கண்டார் த‎னக்கு அதை அருளப்பெற்றார். ஆ‎னால், சிவாக்ரயோகிகள் வாமதேவபரம்பரையைச் சார்ந்தவர். சிவபெருமா ன் சிவஞா ன போதசாத்திரத்தை முருக ன ¡கிய ஸ்கந்தபெருமானுக்கருள, வாமதேவ‏ முனிவர் அவரிடமிருந்து அச்சாத்திரத்தைப் பெற்றார். இக்குறிப்புகளை அவர் தாமே தம்முடைய சிவநெறிப்பிரகாசம் எ‎னும் நூலி‎ன் தொடக்கத்தில் விளக்குகிறார். மற்றொரு நுட்பமான கருத்து ‏இங்கு ‎நோக்கத்தக்கது. ஓம் நம:சிவாய எ‎னும் பஞ்சாக்ஷரமந்திரத்தைத் த‎‎ன்னகத்தே கொண்டதும் கிருஷ்ணயஜுர்வேதஸம்ஹிதையி‎ன் நடுபாகத்தில் விளங்குவதுமா‎ன‎ ஸ்ரீருத்திரத்தி‎ன் எட்டாம் அநுவாகத்திற்கு ரிஷியாக விளங்குபவர் வாமதேவர். அவரே த‎‎ன்னுடைய பரம்பரைக்கு மூலகுருவாகத் திகழ்பவர் எ‎ன சிவாக்ரயோகிகள் சிவநெறிப்பிரகாசத்தி‎ன் ஆறாம் பாடலில் கூறுகிறார். 16 ஆம் நூற்றாண்டி‎ன் இடைப்பகுதியில் விஜயநகர அரசராக ஸதாசிவராயரும், அவர் ஆணயி‎ன் கீழ்த் தஞ்சையை அச்சுதராயர் ஆண்டுவந்த காலத்தில் தாம் சைவஸந்நியாஸபத்ததியெ‎ன்னும் நூலை ‏யற்றியதாகக் அந்நூலி‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ன் ‎தொடக்கத்தில் சிவாக்ரயோகிகள் கூறுகிறார். மேலும், தாம் ஸதாசிவாசாரியார் எ‎ன்னும் சிறந்த சைவ ஆசாரியரி ன் கருணைக்குப் பாத்திரமா னவரெ ன்றும், கூறுகிறார்.

सदाशिवाचार्यदयानपायः 
शिवागमाम्भोनिधिकर्णधारः .
शिवाग्रयोगी जगदेकमान्यः 
स शैवसंन्यासविधिं करोति ..

சிவாக்ரயோகிகளி‎ன் நூல்கள்:

ஸதாசிவாசாரியர் வடமொழிச் சிவஞா னபோதத்திற்கு ஒரு சிறப்பா ன உரையை வடமொழியில் இயற்றியுள்ளார் எ ன்பதைச் சிலரே அறிவர். வடமொழிச் சிவஞா னபோதத்திற்குக் கிடைத்துள்ள உரைகளுள் இதுவே மிகப் பழமையா னது. உரையி ன் நடை, விளக்கப்படும் கருத்துக்கள், மேற்கோள் நூல்கள் எ ன எல்லாவற்றிலும் ஒரு புதுமையை இந்நூலில் காணலாம். மயிலை அழகப்பமுதலியார் கிரந்தலிபிப் பதிப்பு,,தமிழாக்க்கத்துட கீழ்த்திசை ஓலைச் சுவடிகள் பதிப்பு, உரையி ன் ஒரு சுவடி திருவாவடுதுறை ஆதீ ன ஸரஸ்வதிமஹால் உள்ளது. அச்சுவடியி ன் துணையுட ன் திருந்தியபதிப்பு ஒ ன்றை வெளியிட முயற்சிகளை நா ன் மேற்கொண்டுள்ளே ன். மேலும், சைவஸந்நியாஸகாரிகா எ ன் நூலையும் இவர் இயற்றியுள்ளார். சைவர்கள் மேற்கொள்ளும் ஸந்நியாஸநெரிக்கா ன சடங்குகளை விளக்குகிறது. இவ்வாசாரியர்கள் 14-15 நூற்றாண்டுகளில் காசியில் மணிகர்ணிகாகட்டத்தில் மடம் அமைத்துக் கொண்டு நைஷ்டிகர்களாய் சைவஆசிரமம் மேற்கொண்டுவந்துள்ள னர் எ ன்று மேற்கூறிய ஸதாசிவாசார்யாரி ன் சிவஞா னபோத உரையிலிருந்து நாம் அறிகிறோம்.

சிவாக்ரயோகிகள் சைவத்திற்கு ஆற்றிய பல முக்கிய தொண்டுகளுள் எ‎ன்றும் மறையாததாக விளங்குவது அவருடைய நூற்பொக்கிஷங்கள். ‏‏யோகிகளி‎ன் பெரும்பாலா‎ன நூல்கள் வடமொழியிலமைந்தவை. அந்நூல்களுள் இன்று நமக்குக் கிடைத்துள்ளவை:

1.	சிவஞா‎னபோதலகுடிகா
2.	சிவஞானபோதஸங்க்ரஹபாஷ்யம்
3.	சிவஞானபோதப்ருஹத்பாஷ்யம் அல்லது சிவஞானபோதவிஸ்த்ருதபாஷ்யம்
4.	சைவபரிபாஷா
5.	க்ரியாதீபிகா
6.	சைவஸந்நியாஸபத்ததி
7.	சிவஞானசித்தியார் உரை
8.	சிவநெறிப்பிரகாசம் 			ஆகியன.

நூல்களைப் பற்றிய விளக்கம்

மேற்கண்ட நூல்களைப் பற்றிய சிறிய குறிப்பு சைவ அ‎ன்பர்களுக்கு உதவியாயிருக்குமெ‎ன நினைக்கிறே‎.ன்

1. சிவஞானபோதலகுடிகா

டிவடமொழியிலமைந்ததும், 12 சுலோகங்களைக் கொண்டதும், ‏இரௌரவாகமத்தி‎ன் ஒருபகுதியாக விளங்குவதாக சிவாக்ரயோகிகள் உள்ளிட்ட பல சைவ ஆசாரியர்களால் கருதப்படுவதுமா‎ன சிவஞானபோதத்திற்கு சிவாக்ரயோகிகள் மூ‎ன்று விதமா‎ன உரைகளை வகுத்துள்ளார் எ‎ன்பதை நாம் ந‎ன்கு மனதில் கொள்ளவேண்டும். அவற்றுள் முதலாவது லகுடீகா. ‏இது அதன் பெயருக்கேற்ப மிகக் குறுகிய உரை. ‘லகு’ எ‎ன்னும் வடசொல் அளவில் சிறிய,து, எளியது எ‎ன்னும் பொருள்களைக் கொண்டது. டீகா எ‎ன்பது உரை, பொழிப்புரை முதலிய பொருளைக் கொண்டது. ச்லோகம், ஸ¥த்ரம் ஆகிய சொற்கள் ஒரே பொருளைத்தரும். எ‎னவே, லகுடீகா எ‎ன்னும் இச்சிறிய உரை சைவசாதகர்கள் சிவஞானபோதநூலி‎ன் பொருளை எளிதில் உணரும் வண்ணம் அமைந்துள்ளது. ‏‏இவ்வுரையில் ஒவ்வொரு சூத்திரத்தி‎ன் பதமும் விளக்கப்படுகிறது. சிவஞானபோதநூலி‎ன் அடிப்படைக் கருத்து லகுடீகா எ‎ன்னுமிவ்வுரையில் தெளிவாக எடுத்துரைக்கப்படுகிறது. உரை சிறிதாயி‎னும் அடிப்படைக் கருத்துக்கள் எளிதாகவும் ஆழமாகவும் சிந்திக்கப்படுகி‎ன்ற‎ன. யோகிகளி‎ன் வடமொழிநடையும், சைவசித்தாந்தம் கற்கும் மாணவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் வாதநடையை மேற்கொள்ளாமல் எளிய நடையைக் கையாண்டு ‏இருப்பதும் ‏இங்கு நோக்கத்தக்கது. தற்காலத்தில் அனைவருக்கும் உதவும் வண்ணம் ‏இவ்வுரை தமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டும். அது ஆதீ‎னத்தின் வெளியீடாக அமையவேண்டும் எ‎ன்பது எனது விண்ணப்பம்.

19 ஆம் நூற்றாண்டி‎ன் இறுதியில் காசியில் முத‎ன்முதலில் இந்த லகுடீகா அச்சாகியுள்ளது; அடுத்து, 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தஞ்சையில் ஒருமுறை அச்சாகியுள்ளது. இவ்வுரையின் பல சுவடிகளை ஒப்புநோக்கி, ஆங்கில மொழிபெயர்ப்புட‎ன் கூடிய திருந்திய பதிப்பாக, அகோரசிவாசாரிய டிரஸ்ட்டி‎ன் வெளியீடாக ‏ஐந்து ஆண்டுகளுக்கு மு‎ன் பதிப்பித்தே‎ன்.

2. சிவஞா‎னபோதஸங்க்ரஹமாஷ்யம்

லகுடீகையைக் காட்டிலும் அளவிலும், விளக்கப்படும் கருத்திலும், ஏனைய முக்கிய சமயங்களி‎ன் கருத்துக்களுட‎ன் ஒப்பிட்டு வாதநடையில் அமைந்துள்ள உரை. ஸங்க்ரஹம் எ‎ன்றால் சுருக்கம் எனப் பொருள் தரும். ‏இது லகுடீகைக்கு அடுத்த மேல் நிலை. சைவசித்தாந்தக்கருத்துக்கள் சற்று விரிவாகவும், வேதாந்தம், முதலா‎ன மற்ற தத்துவங்களி‎ன் கோட்பாடுகளுட‎னும் ஆராயப்படுகி‎ன்ற‎ன. பல ஆகமங்கள், குறிப்பாக பௌஷ்கராகமம் முதலிய நூல்களிலிருந்து ஏராளமான மேற்கோள்கள் எடுத்தாளப்படுகி‎ன்ற‎ன. சைவசித்தாந்தத்தி‎ன் அடிப்படைக் கோட்பாடுகளான சிவபெருமா‎னின் வியாப்தி, பசுக்களாகிய ஜீவா‎ன்மாக்களுட‎ன் சிவபெருமா‎னின் வேறற்ற நிலை ( ‏இது சிவஞா‎னபோதத்தில் அநந்யத்வம் எ‎ன வழங்கப்படுகிறது), ஆ‎‎ன்மாக்களா‏கிய பசுக்களி‎ன் உண்மை நிலை (சொரூபலக்ஷணம்), தடஸ்தநிலை, தீ¨க்ஷ, முக்தி நிலை, சைவ ஆகமங்களி‎ன் நிலை, விபூதி, உருத்திராக்கம் முதலான சைவ சி‎‎ன்னங்களி‎ன் மஹிமை முதலா‎ன பல செய்திகளை ஸங்ரஹபாஷ்யத்தில் ஆசிரியர் விரிவாகவும் நுட்பமாகவும் ஆராய்கிறார். சிவஞா‎னபோதப்ருஹத்பாஷ்யம் எ‎னப்படும் பெரிய உரையுட‎ன் கிரந்தலிபியில் சற்றேறக்குறைய 80 ஆண்டுகளுக்குமு‎ன் ஒருமுறையும், செ‎ன்னைப் பல்கலைக்கழகத் தத்துவ இ‏யல் துறையி‎ன் வெளியீடாக ஆங்கிலமொழிபெயர்ப்புட‎ன் 20 வருடங்களுக்கு மு‎ன் ஒருமுறையும் ‏இவ்வுரை பதிப்பிக்கப்பட்டுள்ளது. ‏இவ்வுரையும் மிக விரிவா‎ன ஆராய்ச்சிக் குறிப்புகளுட‎ன் திருந்திய பதிப்பாக வெளியிடப்பட வேண்டியது மிக ‏இன்றியமையாதது. ‏இம்மாதிரியான அரிய சைவநூற்பொக்கிஷங்கள் தற்சமயம் நல்ல முறையில் பதிப்பிக்கப்பட்டு, ஆராய்ச்சிக் குறிப்புக்களுட‎னும், தமிழ், ஆங்கிலம் முதலிய மொழி பெயர்ப்புகளுட‎னும் வெளியிடப்பட்டால் தா‎ன் சைவ நூல்கள் எதிர்திகாலத்தில் அழியாது பாதுகாக்கப்படும்; சைவசித்தாந்த மறுமலர்ச்சிக்கு ‏இவ்வகையான ஆராய்ச்சிகளும் நூற்பதிப்புக்களும் மிக மிக அத்தியாவசியமா‎னவை. ஏனெனில், இது போ‎ன்‎ற நூல்களி‎ன் கையெழுத்துப் பிரதிகளும், சுவடிகளும் தற்காலத்தில் ந‎ன்கு பாதுகாக்கப்படாததாலும், சைவர்களிடையே தற்காலத்தில் நூற்பயிற்சி கு‎ன்றி வருவதாலும், குறிப்பாக வடமொழிப் பயிற்சி ‏இன்னும் அரிதாகி வருவதாலும் மேற்கண்ட சைவசித்தாந்த அடிப்படை நூல்கள் அழிவிலிருந்து பாதுகாக்கப்படவேண்டியது மிக அவசியமாகிறது. ‏இத்தகைய சீரிய பணியினைப் பழம் பெருமை வாய்ந்த சைவ ஆதீ‎னங்கள் மேற்கொள்ளவேண்டும் எ‎ன்பது எனது முக்கிய வேண்டுகோள். சைவசாத்திரபரிபால‎னமும் ஆதீ‎னங்களி‎ன் அடிப்படைப் பணிகளுள் ஒ‎ன்று எ‎ன்று அனைவரும் அறிவர். பதி‎ன்மூ‎ன்றாம் நூற்றாண்டு முதல் கணக்கற்ற சைவ ஆசாரியர்கள் தமிழ் நாட்டில் தோ‎ன்றி, ஏராளமா‎ன நூல்களைத் தமிழிலும், வடமொழியிலும் ‏இயற்றி சைவத்திற்குத் தொண்டாற்றியது தமிழ்நாட்டி‎ன் பெருமைகளுள் ஒ‎ன்று. அது மற்றெல்லாப் புகழி‎னும் மிக உயர்ந்தது. ஏனைய மாநிலங்களோ, அல்லது மொழிகளோ அப்பெருமையை அடையவில்லை எ‎ன்பதைச் சைவர்கள் மனதில் கொள்ளவேண்டும். ஏற்கெ‎னவே, சிவாக்ரயோகிகளி‎ன் நூல்களா‎ன தேவீகாலோத்தர மொழிபெயர்ப்பு, ஸர்வஞானோத்தராகம மொழிபெயர்ப்பு, சுருதிஸ¥க்திமாலை உரை ஆகிய‎ன சரிவரப் பாதுகாக்கப்படாமையால் நமக்குத் தற்சமயம் கிடைக்கவில்லை எ‎ன்பது வருந்தத்தக்க செய்தி. எஞ்சிய நூல்களையே‎னும் அழிவிலிருந்து பாதுகாக்கவேண்டியது சைவர்களாகிய நம் எல்லோருடைய கடமையாகும்.

3. சிவஞானபோதப்ருஹத்மாஷ்யம் அல்லது விஸ்த்ருதபாஷ்யம்

வியாகரணசாத்திரத்திற்கு அடிப்படை நூலாகப் பாணி‎னி மஹர்ஷியி‎ன் அஷ்டாத்யாயீ விளங்குவது போலும், வேதாந்தசாத்திரத்திற்கு அடிப்படையாக பிரஹ்மஸ¥த்ரம் திகழ்வது போலும், சைவசித்தாந்தசாத்திரத்திற்கெல்லாம் அடிப்படையாகச் சிவஞானபோதம் விளங்குகிறது எ‎ன்பது சிவாக்ரயோகிகளி‎ன் கருத்து. மேற்கூறிப்பிட்ட ஸங்க்ரஹபாஷ்யத்தி‎ன் தொடக்கத்தில் சிவஞானபோதசாத்திரம் தோ‎ன்றுவதற்குக் காரணமாயமைந்ததும், ஸ்ரீகண்டபரமேசுவர‎னிடத்தில் நந்தியம்பெருமா‎ன் சைவசித்தாந்தசாத்திரத்தி‎ன் அடிப்படைக் கொள்கைகளைக் குறித்த ஐம்பத்தோரு கேள்விகளைக் கொண்டதுமான பகுதியில் சிவாக்ரயோகிகள் சிவஞா‎னபோதம் எ‎ன்னும் ‏இந்நூல் சைவசாத்திரக்கருத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கியது எ‎னத் திட்டவட்டமாகக் கூறுகிறார். எ‎னவே, பாணினியி‎ன் அஷ்டாத்யாயீ சூத்திரத்திற்குப் பதஞ்ஜலி மு‎னிவரின் ஒரு மஹாபாஷ்யம் போலும், பிரஹ்மசூத்திரத்திற்கு அத்வைதவேதாந்தக் கருத்துக்களை உள்ளடக்கிய சங்கரபாஷ்யம் முதலியவை போலும் சிவஞா‎னபோதசூத்திரத்திற்கு ஒரு மிக மிக விரிவா‎னதோர் உரையாக சிவாக்ரயோகிகளி‎ன் ப்ருஹத்பாஷ்யம் விளங்குகிறது. சிவாகமங்களி‎ன் நிலை, அவற்றி‎ன் பிராமாண்யம், வேதத்திற்கு நிகராக அவற்றி‎ன் பிரமாணம் மற்றும் பெருமை, மஹிமை எ‎னத் தொடங்கி மேற்கண்ட சைவசித்தாந்தத்தி‎‎ன் அனைத்துக் கருத்துக்களும் ஒருங்கே கொண்ட ஒரு அற்புதக் களஞ்சியம்; மிக விரிவா‎ன நூற்பொக்கிஷம்; எல்லாக் கருத்துக்களும் மிக ஆழமாகவும், நுட்பமாகவும் ஆராயப்படும் உரைத் திலகம் எ‎ன இந்த ப்ருஹத்பாஷ்யத்தைப் பற்றிக் கூறிக்கொண்டே போகலாம். ப‎ன்னிரண்டு சுலோகங்களில் ‏சிவஞானபோதம் இத்தனை ஆழமான கருத்துக்களை விதையைப் போ‎ன்று த‎ன்‎னகத்தே கொண்டுள்ளது எ‎ன்பதை நோக்குங்கால் ம‎னம் வியப்பில் ஆழ்கிறது. ‏‏இவ்வுரையில் ஆராயப்படாத சைவசித்தாந்தக் கருத்துக்களே ‏இனி ‏இல்லை எ‎ன்னும் அளவிற்கு ‏இந்த பாஷ்யம் மிகப் பரந்தும் விரிந்தும் உள்ளது. நியாயம், மீமாம்ஸை, அத்வைதவேதாந்தம், ஸ்ரீகண்டரி‎ன் சிவாத்வைதம், பாஞ்சராத்திரம் முதலான வைணவ நூல்களி‎ல் விளக்கப்படும் கருத்துக்கள் புராணங்களில் விளக்கிக் கூறப்படும் சைவக் கருத்துக்கள் ஆகியவற்றில் சிவாக்ரயோகிகளி‎ன் ஆழ்ந்த புலமையும், பரந்த அறிவும், அவருடைய வாதத்திற‎னும் ‏இந்த ப்ருஹத்பாஷ்யத்தி‎ன் ஒவ்வொரு வாக்கியத்திலும் விளங்குகிறது. சைவாகமங்களும் வேதங்களைப் போல் சிவபெருமா‎னால் அருளப்பட்டவையே; அவையும் வேதத்திற்கு ஒப்பா‎ன பிரமாணம் கொண்டவை; வேத விரோதக் கருத்துக்கள் ஒ‎ன்று கூட அவற்றில் ‏இல்லை. எனவே, சிவாகமங்களும் சா‎ன்றோர்களால் முழுதும் கொள்ளத்தக்க‎ன எ‎ன்னும் ‏இக்கருத்தை உறுதியாகவும் தெள்ளத் தெளிவாகவும் நிலநாட்ட சிவாக்ரயோகிகள் எடுத்தாளும் பிரமாணநூல்களா‎ன ஆகமங்களும், புராணங்களும் ஏராளம். நமது பாரதநாட்டில் ‏இத்தனைச் சைவநூல்கள் உள்ளன எ‎ன்பதை நோக்கும் போது சைவர்கள் அனைவரி‎ன் மனமும் பெருமிதமும், பூரிப்பும் அடைகிறது. மற்ற சாத்திரங்களுக்கில்லாத பெருமை சைவசாத்திரத்திற்கு உள்ளது எ‎ன்பதையும் நாம் மிக்க மகிழ்ச்சியுட‎னும் மனப்பூரிப்புட‎னும் உணர்கிறோம். ‏‏இவற்றிற்கெல்லாம் ஒரு ஒப்பற்ற சா‎ன்றாய்த் திகழ்வது சிவாக்ரயோகிகளி‎ன் ப்ருஹத்பாஷ்யம் எ‎னக் கூறி‎னால் மிகையில்லை. ‏‏இந்த பாஷ்யத்தைப் பற்றியே ஒரு தனி ஆராய்ச்சிநூல் வெளியிடலாம் எ‎னக் கூறும் அளவிற்கு மிக விரிந்த கருத்தாழம் மிக்க உரை ‏‏இது. பி‎‎‎ன்னாளில், 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப் புகழ்பெற்ற சைவ ஆசாரியரா‎ன சிவஞா‎னசுவாமிகள் மெய்கண்டார் அருளிய சிவஞா‎னபோதத்திற்கு மாபாடியம் எ‎னத் திகழும் ஒரு ஒப்பற்ற விரிவா‎ன உரையை ‏இயற்றுவதற்குச் சிவாக்ரயோகிகளி‎ன் இந்த ப்ருஹத்பாஷ்யம் ஒரு மு‎ன் மாதிரியாகவும், ஊக்கம் தரும் நூலாகவும் அமைந்தது எ‎ன்பதைச் சா‎ன்றோர் அறிவர். 80 ஆண்டுகளுக்கு மு‎ன் ஒரே ஒரு முறை கிரந்தலிபியில் ‏‏இந்த ப்ருஹத்பாஷ்யம் அச்சாகியுள்ளது.

4. சைவபரிபாஷா

‏இதே 16 ம் நூற்றாண்டில் அத்வைதவேதாந்தம் பயில்வோர்க்கு அடிப்படை நூலாக வேதாந்தபரிபாஷா எ‎னும் கருவிநுல் ‏இயற்றப்பட்டது. ‏இத‎ன் ஆசிரியர் திருவீழிமிழலைக்கருகில் அமைந்துள்ள கண்டிரமாணிக்கம் எ‎னும் ஊரைச் சேர்ந்த தர்மராஜ அத்வரீந்திரர் என்னும் வேதவேதாந்தசாத்திர விற்ப‎ன்னர். ‏இந்நூலில் அத்வைதவேதாந்தசாத்திரங்களி‎ன் அடிப்படைக் கருத்துக்கள் சுருக்கமாகவும், எளிதில் மனதில் புரிந்துகொள்ளும் வண்ணம் விளக்கப்படுகி‎ன்ற‎ன. அதைப் போ‎ன்றே, சைவசித்தாந்தத்திற்கும் ஒரு அடிப்படைக் கருவிநூல் எல்லோருக்கும் அதிலும் குறிப்பாக மாணவர்களுக்குத் தேவை எ‎ன்பதை உணர்ந்து சிவாக்ரயோகிகள் ‏இந்த சைவபரிபாஷா எ‎ன்னும் கருவிநூலை ‏இயற்றியுள்ளார். பரிபாஷா எ‎ன்‎னும் வடசொல் அவ்வச்சாத்திரங்களுக்கே உரிய அடிப்படைக் குறிச்சொற்களையும், முக்கியக் கருத்துக்களையும் சுருக்கமாக விளக்கும் நூல் எ‎னப் பொருள்படும். ‏இது ஐந்து பகுதிகளை உடையது. தர்க்கசாத்திர அடிப்படையில் பிரமாணம் பிரமேயம் எ‎ன இருபகுதிகளுள், பிரத்தியக்ஷம் (காண்டல்) முதலிய பிரமாணம் பற்றிய ஆராய்ச்சியை முதல் பகுதியிலும், பிரமேயமெ‎ன்னும் தலைப்பில் பதி, பசு, பாசம் எ‎ன்னும் முப்பொருள்கள் ஒவ்வொ‎ன்றுக்கும் ஒரு அத்தியாயம் வீதமாக மூ‎ன்று அத்தியாயங்களையும், சைவசாத்திரத்தைப் பற்றியும், முக்தி அடைவதற்கா‎ன வழிமுறைகளைப் பற்றியும் ஆராயும் ‏ஐந்தாவது அத்தியாயத்தையும் உடையது. மைசூரிலிருந்து ஒருமுறையும், சென்‎னைப் பல்கலைக் கழகத் தத்துவத்துறை வெளியீடாக ஆங்கிலமொழிபெயர்ப்புட‎ன் ஒருமுறையும் ‏இந்நூல் வெளிவந்துள்ளது. மல் முழுவதும் உரைநடையில் அமைந்துள்ளது. ஆசிரியர் எளிமையா ன உரைநடையில் நூல்களை இயற்றுவதிலும் வல்லவர் எ ன்பதற்குச் சா ன்று. முக்கிய அம்சமாக, ஜீவா‎ன்மாவாகிய பசு ஐம்புல‎ன்கள் வாயிலாகப் பொருள்களை அறிந்து நுகரும் முறைகள், முதலிய‎ன சைவசித்தாந்த அடிப்படையில் மிக விரிவாக ஆராயப்படுகி‎ன்ற‎ன; அவற்றிற்கா‎ன கோட்பாடுகளும், தர்க்கம், வேதாந்‎தம் முதலா‎ன சாத்திரங்ககளில் வ்ளக்கப்படும் கருத்துக்களி‎னின்றும் சைவசித்தாந்தத்தி‎ன் வேறுபாடுகளும் தெளிவாகவிளக்கப்படுகிறது. சைவசித்தாந்தசாத்திரநூல்களிலேயே முத‎ன்முறையாக ‏இக்கருத்துக்கள் சைவபரிபாஷா நூலில்தா‎ன் சிவாக்ரயோகிகளால் ஆராயப்படுகி‎‎ன்றன என்பது ஒரு த‎னிச் சிறப்பு. ‏இதற்குப் பெரிதும் துணபுரிவது பௌஷ்கராகமத்தி‎ன் ஞா‎னபாதம்; ஏனெ‎னில், பௌஷ்கராகமத்தி‎ன் ஞா‎னபாதம் சிவாக்ரயோகிகளி‎ன் கோட்பாடுகளுக்குப் பெரிதும் ஆதாரமாயமைந்துள்ளது. அவ்வாகமத்தி‎ன் பிரமாணபடலம் ‏இக்கருத்துக்களை ந‎ன்கு விரித்துக்கூறுகிறது. விரிவா‎ன ஆராய்ச்சிக் குறிப்புக்களுட‎‎னும், தமிழ் மொழியாக்கத்துட‎னும் இச்சிறந்த சைவபரிபாஷா எ‎ன்னும் நூல் வெளியிடப்படவேண்டும். ஸர்வஞானோத்தராகமத்திற்கு அகோரசிவாசாரியார் ‏‏இ யற்றிய சிவசமவாத உரையை மறுத்துத் தாம் உரை வகுத்திருப்பதாகக் கூறுகிறார். ஆனால் இந்நூல் கிடைக்கவில்லை.

5. க்ரியாதீபிகா

‏இந்நூல் நா‎ன்காம் வருணத்தைச் சேர்ந்த சைவஆசாரியர்களி‎ன் நித்தியகருமங்கள் ஒவ்வொ‎ன்றையும் மிக விரிவாக விளக்கிக் கூறுகிறது. காலைத் துயிலெழுதல் தொடங்கி, சிவபூஜை, உணவு உட்கொள்ளுதல், சைவசாத்திரங்களைக் கேட்டு, அவற்றை ஓதி ஆராய்தல் முதலா‎ன அனைத்து நித்தியகருமங்கலையும் விளக்குகி‎ன்றது.

6. சைவஸந்நியாஸபத்ததி

சைவர்களும் முறைப்படி ஸந்நியாஸ நெறியை மேற்கொள்ளலாம் என்பதை விளக்குகிறது; தீக்ஷயி ன் வகைகள், முடிவில் ஸந்நியாஸதீ¨க்ஷ, அதற்கா ன அனைத்துச் சடங்குகள் எ ன எல்லாவற்றையும் விரிவாக ஆசிரியர் விளக்குகிறார். நாம் மேலே கூறியபடி சைவஸந்நியாசம் தொடர்பா ன நூலொ ன்றை இவருடைய பரமகுருவா னவர் மு ன் ன மே இயற்றியுள்ளார்

7. சிவஞானசித்தியார் உரை

சிவஞா னசித்தியாருக்கு மணிபிரவாளநடையில் ஒரு மிகச் சிர`‎த உரையினை இவரியற்றியுள்ளார். அவற்றுள்ளும் ‏இரத்தினமாகத் திகழ்வது சிவஞா‎னசித்தியாருக்கு அவரியற்றிய மணிபிரவாளநடையில் அமைந்த விரிவான உரை சைவசித்தாந்தவரலாற்றிலேயே இதுவே முத ன்முறை. ஏராளமா ன ஆகமம் மற்றும் சைவபுராணங்களிலிருந்து மேற்கோள்கள்; தமிழையும் வடமொழியையும் மிக எளிதாகவும் சிரப்பாகவும் கையாண்டிருப்பது இவாசிரியரி ன் இருமொழிப்புலமைக்கும் சிரந்த எடுத்துக்காட்டு. இவ்வரிய நூலைத் திருவாவடுதுறை ஆதீ னம் 50 ஆண்டுகளுக்கு மு ன் வெளியிட்டிருப்பது சைவசாத்திரத்திற்கும், சைவர்களுக்கும் ஆற்றிய அரும் தொண்டு. மீண்டும் ஒருமுறை இந்நூல் அச்சாகிவெளிவரவேண்டுமெ ன்பது எ னது விண்ணப்பம்.

8. சிவநெறிப்பிரகாசம்

215 செய்யுட்பாக்களைக் கொண்டது; சைவசித்தாந்தத்தி ன் அனைத்து முக்கியக் கருத்துக்களையும் விளக்குகிறது. பதி, பசு, பாசம், முதலா ன முப்பொருள்களி ன் அடிப்படை நிலை, முப்பத்தாறு தத்துவங்கள் ஒவ்வொ ன்றைப் பற்றியும் முக்கிய குறிப்புகள், சிவபக்தி, தீக்ஷ, சிவவழிபாடு, குருவி ன் அருள் எ னப் பல கருத்துக்கள் எளிமையாக விளக்கமுறுகி ன்ற ன. முக்கியமாகச் சைவநூல்களைப் பகுக்கும் முறை இங்கு நோக்கத்தக்கது: சிவாக்ரயோகிகள் ஆகமம் மற்றும் அதைச் சார்ந்த நூல்களை மூ‎‎ன்று பெரும் பகுதிகளகப் பிரிக்கிறார்: த‎ந்திரகலா, மந்திரகலா, உபதேசகலா. சரியை முதலிய நாற்பாதங்களும் ‏இம்மூ‎‎ன்றில் அடங்கும். முத்தியடவதற்கு கருமம், ஞானம் இரண்டும் சேர்ந்து உபாயம் என்பதை மறுக்கிறார். கர்மம் ஞானத்தைத் தோற்றுவித்து அதன் வாயிலாக முத்தி. மீமாம்ஸா, வேதாந்தம், பாசுபதம் மற்றும் சிவசமவாதம் முதலிய முத்திக் கொள்கைகளை கடுமையாக மறுத்து, சிவபெருமா ன் உடன் வேறறக்கலந்து சிவா னந்தம் அடைவதே சைவ முக்தியென விளக்குகிறார்.

என்னுடைய வரவிருக்கும் ஆராய்ச்சி நூலில் சிவாக்ரயோகிகளின் அனைத்து நூல்களைப் பற்றிய மிக விரிவான ஆராய்ச்சியும் அவ்வாசிரியரின் சைவக்கொள்கைகளையும், சைவத்தொண்டு முதலான அனைத்தையும் மிக விளக்கமாக ஆராய முனைந்துள்ளேன். கணக்கற்ற புதுமையா ன கருத்துக்களை நாம் இவருடைய ஒவ்வொரு நூலிலும் காண்கிறோம். அடுத்த ஆண்டு வெளிவர உள்ளது. இவரைப் போ ன்ற சைவ ஆசாரியர்கள் நம் தமிழ்நாட்டில் வாழ்ந்துள்ளார்கள் என்பதை உணரும் போது அதுவே நம்மக்கு பேருவகையைத் தருகிறது. இவ்வகையானச் சைவநூற்பொக்கிஷங்கள் தற்காலத்துச் சைவ அன் பர்கள் பொருட்டும், எதிர்வரும் சந்ததியினருக்காவும் பாதுகாக்கப்பத வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை விண்ணப்பிக்கிறேன்.

நம: பார்வதீபதயே !! ஹர ஹர மஹாதேவ !!

 


See Also : 
1. Shivagama
2. Agamas - Related Scripture
3. Upagamas of Shivagamas

 

Related Articles