logo

|

Home >

articles >

sivakamangal-suvadikalum-pathippum

சிவாகமங்கள்: சுவடிகளும் பதிப்பும்

திரு.T.கணேசன்; புதுச்சேரி.

மு‎ன்னுரை

பாரதநாட்டுப் சமயம் மற்றும் அனைத்துக் கலாசாரக் கோட்பாடுகளுக்கும் வேதங்கள் ஆணிவேராகத் திகழ்கின்றன. தெய்வவழிபாட்டிற்கும் தத்துவக் கோட்பாடுகளின் வளர்ச்சிக்கும் வேதங்களும் அவற்றை சார்ந்த நூல்களும் அடித்தளமாக அமைந்து அவற்றின் மேல் தொடக்கமில் காலந்தொட்டு பல பரிணாம வளர்ச்சிகள் நிகழ்ந்துவந்துள்ளன; இக்காலத்தும் அவ்வாறே நிகழ்ந்துவருகின்றன என்பதையும் எல்லோரும் அறிவர். வேதங்களைப் போன்றே ஆகமங்கள் என்றழைக்கப்படும் நூல்களும் நம்நாட்டுச் சமயவளர்ச்சிக்கும் அதைச் சார்ந்த கலைகளின் வளர்ச்சிக்கும் வேதநெறியுடன் சேர்ந்து பெரும்பங்கு ஆற்றி வருகின்றன. இவ்விரு வகைப்பட்ட நூல்களும் பரமகாருண்யமூர்த்தியா‎ன சிவபெருமானால் அருளப்பட்டன என்பது சிவநெறியைப் பின்பற்றும் சான்றோர்களின் துணிபு. வேதங்கள் பொதுநூல்களாகவும், ஆகமங்கள் அவ்வச்சமயங்களைப் பி‎ன்பற்றுவோருக்குரிய சிறப்பு நூல்களாகவும் கொள்ளப்படுகின்றன. *1நாஸ்திக தரிசனங்கள் என்றழைக்கப்படும் பௌத்தம், சமணம் ஆ‏கியவற்றுக்கும் தனித்தனியே ஆகமங்கள் இருந்து வந்துள்ளன என்றும் நாம் அறிகிறோம்.

*1குமாரிலபட்டர் தன்னுடைய தந்த்ரவார்த்திகமெனும் வியாக்கியா‎ன நூலில் பௌத்த ஆகமங்களை நிராகரித்துள்ளார்.

ஆகமங்கள்

ஆரம்ப காலத்தில் வேதங்களும் ஆகமம் எ‎ன்றழைக்கப்பட்டு வந்த‎ன என்பதை நியாயஸ¥த்ரம், அத‎ன் பாஷ்யம் ஆகிய பழைய நூல்களிலிருந்து அறிகிறோம். சைவத்தின் பிரிவுகளா ன பாசுபதம், காலாமுகம், ஸோமஸித்தாந்தம் ஆகியவற்றிற்கும் ஆகமங்கள் இருந்தன; அவை காலப் போக்கில் அழிந்துபோயின. அச்சைவ சமயங்களுக்கு ஆகமங்கள் இருந்தனவென்று நாம் கல்வெட்டுக்கள் வாயிலாக அறிகிறோம். மேலும், சைவசித்தாந்த ஆகமங்களில் சிலவற்றுள் குறிப்பாக தீப்தாகமத்தில் பாசுபதம் லகுலீசம் முதலா ன சைவப் பிரிவுகளின் ஆகமங்கள் அவற்றின் பெயர்களுடன் குறிப்பிடப்படுகின்றன. எனவே, சிவபெருமான் அருளால் தற்சமயம் எஞ்சியுள்ளவை சைவசித்தாந்த ஆகமங்கள்,,பைரவ ஆகமங்கள் மற்றும் வீரசைவ ஆகமங்களே.

ஆகமங்களின் தனித்தன்மை

வேதங்களில் பொதுவாகவும் சுருக்கியும் கூறப்பட்ட சிவவழிபாட்டு முறைகள், ஆகமங்களில் தீ¨க்ஷ, சிவாலயம் அமைத்து வழிபாடாற்றுதல் முதலிய சைவர்களுக்கே உரிய த னிப்பட்ட விசேஷ சடங்குகள், மிக்க விரிவுட ன் விளக்கப்படுகி ன்ற ன. மேலும், ஆகமங்களி ன் தத்துவக்கோட்பாடுகள் வேதாந்தமென வழங்கப்படும் உபநிஷத்துக்கள் விளக்கும் தத்துவக்கோட்பாடுகளினின்றும் பொதுவாக வேறானவை. சுவேதாச்வதரம் முதலிய மிகப் பழமையான உபநிஷத்துக்களில் பதி, பசு, பாசமெனும் முப்பொருள்களும் குறிக்கப்படுகின்றன. ஆனாலும் முப்பத்தாறு தத்துவங்களைப் பற்றிய குறிப்பு அந்நூல்களில் காணப்படவில்லை; அக்கோட்பாடு முழுதும் சைவசித்தாந்த ஆகமங்களையே சாரும். இ க்கருத்தை வைணவசமய ஆசாரியரா ன இராமா னுஜரே தன்னுடைய ஸ்ரீபாஷ்யத்தில் குறிப்பிடுகிறார்.

ஆகமங்களில் விளக்கப்படும் செய்திகள்

மனிதனாகப் பிறந்தவ‎ன் இவ்வுலகில் வாழ்ந்து பல ‏இன்பங்களை அனுபவிப்பதற்கும், முடிவில் வைராக்கியமடைந்து பரம்பொருளா‎ன சிவபெருமான் திருவடிகளை அடைவதா‎ன மோக்ஷத்தை அடைவதற்கும் ஆகமங்கள் வழிமுறைகளை வகுத்துக் கூறுகி‎ன்ற‎ன. ஆகமங்களைப் பொறுத்தவரை அவை நா‎ன்கு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

1. சைவச் சடங்குகளையும் சிவலிங்கவழிபாட்டையும் மேற்கொள்ளத் தேவையா‎ன தகுதியை வழங்கும் தீ¨க்ஷ எ‎ன்னும் சிறப்புச் சடங்கைச் செய்யும் முறை, மந்திரங்கள், மற்றும் மண்டலங்கள் ஆகியவற்றைப் பற்றிய விரிவா‎ன செய்திகள் தீ¨க்ஷ பெற்றவ‎ன் தினந்தோறும் ஆற்றவேண்டிய ஸ்நானம், சிவபூஜை முதலிய சடங்குகள், சிவபெருமா‎னுக்கு ஆலயம் அமைத்தல், அங்கு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தல், திருவிழாக்களை நடத்துதல் ஆகிய பல செய்திகளை விளக்கும் கிரியாபாதம்.

2. சைவர்கள் மேற்கொள்ளவேண்டிய பொதுவா‎ன ஒழுக்கங்கள், பதி‎னாறு ஸம்ஸ்காரங்கள், வருடந்தோறும் செய்யவேண்டிய சிராத்தம், அந்தியேஷ்டி ஆகிய‎‎ன சரியாபாதத்தில் விளக்கிக் கூறப்படும் செய்திகள்.

3. எண்வகைச் சித்திகள் முதலா‎ன பற்பல சித்திகளைப் பெறவும், சிவபெருமானது அருளைப் பெற்று முடிவில் முத்திபெறவும் மேற்கொள்ளவேண்டிய யோகப் பயிற்சிகளையும், அதற்கு அடிப்படையாக மூலாதாரம் முதலிய ஷடாதாரங்கள், ‏இடை, பிங்கலை முதலா‎ன நாடிகள், தியா‎னம் செய்யும் முறை ஆகியவற்றை மிக விரிவாக விளக்குவது யோகபாதம்.

4. பதி, பசு, பாசம் எ‎னும் முப்பொருளகள், அவற்றி‎ன் விரிவு, சிவதத்துவம் முதல் பிருதிவீ தத்துவம் ஈறா‎ன முப்பத்தாறு தத்துவங்களி‎ன் தோற்றம், ஸ்ருஷ்டி,யி‎ன் வகைகள், மோக்ஷத்தி‎ன் இலக்கணம், அதில் ஆ‎ன்மாவின் நிலை ஆகிய சைவத்தி‎ன் அடிப்படைத் தத்துவக்கோட்பாடுகள் ஞா‎னபாதம் எ‎ன்னும் வித்தியாபாதத்தில் விளக்கப்படுகி‎ன்றன.

மூலாகமங்களும், உபாகமங்களும்

இக்கருத்துக்களை விளக்க எழுந்தவை 28 மூலாகமங்கள்; அவை காமிகம் முதலானவை. எல்லா ஆகமங்களும் எல்லாக் கருத்தையும் ஒருசேரக் கூறாமல் சில சில கருத்துக்களை மிக விரிவாகவும் மற்றவற்றைச் சுருக்கியும் கூறுகி‎ன்றன. அவ்வாறே ‏207 உபாகமங்கள் மூலாகமங்களி‎ன் அடிப்படையில் சிற்பச் செய்திகளையும், பலவிதமான உற்சவங்கள் முதலியவற்றையும் விளக்குகி‎ன்ற‎ன.

பத்ததிகள்

மூலாகமங்களில் கூறப்படும் கிரியைகள் மிகச் சுருக்கமாகவும், அடிப்படைகள் விரித்துக் கூறப்படாமலும் ‏இருப்பதால் சீடர்கள் எளிதில் அக்கிரியைகளை ‏இயற்றுவதற்காக கிரியாபாதச் செய்திகளை ஆகமங்களிலிருந்து திரட்டித் தொகுத்துக் ‏கிரியைகளைச் செய்யும் முறையுட‎ன் விளக்குவ‎ன பத்ததிகள் எனப்படுவ‎ன; அவை முற்காலத்திலிருந்து போஜதேவர், பிரஹ்மசம்பு, வருணசம்பு, ஸோமசம்பு, அகோரசிவர் முதலா‎ன பல சைவ ஆசாரியர்களால் ‏இயற்றப்பட்டவை.

ஸகலாகமஸங்கிரஹம்

அதைப் போ‎ன்றே, மஹோத்ஸவம், பிரதிஷ்டை, பிராயச்சித்தம் ஆகிய ஒவ்வொரு தலைப்பி‎ன் அடிப்படையிலும் ஆகம சுலோகங்களைத் தொகுத்துக் கூறுவ‎ன ஸகலாகமஸங்கிரஹம் எ‎னப்படும் தொகுப்பு நூல்கள். ‏இவையும் பற்பல காலங்களில் தொகுக்கப்பட்டுள்ளன. .

ஆகம உரைநூல்கள்

மற்றெந்த ஆகமவகைக்கும் ‏இல்லாத த‎னிச் சிறப்பு ஒ‎ன்று சைவசித்தாந்த ஆகமங்களுக்கு உண்டு; அது மிகப் பழங்காலந்தொட்டே ஆகமங்களுக்கு ஆசாரியர்கள் ‏இயற்றிய வியாக்கியா‎னம் என்னும் உரைநூல்கள். உக்ரஜ்யோதி, ப்ருஹஸ்பதி, ஸத்யோஜ்யோதி முதலா‎ன ஆசாரியர்கள் ரௌரவம் ஸ்வாயம்புவம் முதலா‎ன ஆகமங்களுக்கு உரை எழுதியுள்ள‎னர். இவர்கள் 6-7 நூற்றாண்டுகளில் காஷ்மீரதேசத்தில் பெரும்பாலும் வாழ்ந்தவர்கள்.

1. ஸத்யோஜ்யோதி சிவாசாரியார்

‏இவர்களுள் ஸத்யோஜ்யோதி சிவாசாரியாருடைய ஸ்வாயம்புவாகம உரையும் மற்றநூல்களுமே நமக்குக் கிடைத்துள்ள‎ன. ‏‏இவையே ‏இ‎ன்று நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையா‎ன ஆகம உரைகள். மேலும், ‏இவ்வாசாரியர் ரௌரவாகமம், ஸ்வாயம்புவாகமம் ஆகியவற்றி‎ன் அடிப்படையில் அவ்வாகமங்களி‎ன் ஞா‎னபாதக் கருத்துக்களைச் சுருக்கி தத்வத்ரயநிர்ணயம், தத்வஸங்க்ரஹம்,,போககாரிகை, மோக்ஷகாரிகை, பரமோக்ஷநிராஸகாரிகை ஆகிய நூல்களையும், பௌத்தசமயக் கொள்கைகளைக் கண்டித்து த‎னியாக ஆன்மாக்களும், அ‎னைத்துலகங்களுக்கும் ஆ‎‎ன்மாக்களுக்கும் தலைவனாகச் சிவபெருமா‎‎னெனும் பரம்பொருளும் உண்டு எ‎ன்னும் கருத்தை மிக்க வாதத்திறமையுட‎ன் நிறுவும் நரேச்வரபரீ¨க்ஷ எ‎ன்னும் நூல்களையும் ‏இயற்றிச் சைவசித்தாந்த சாத்திரத்திற்கு மிக வலிமையா‎ன ஆதாரத்தையும் தத்துவக் கோட்பாடுகளி‎ன் அடித்தளத்தையும் அமைத்துத் தந்துள்ளார். ‏இவர் காலத்திற்குப் பி‎ன்னர் தோ‎ன்றிய அனைத்துச் சைவ நூல்களிலும், உரைநூல்களிலும் ‏இவருடைய நூல்களிலிருந்து ஏராளமா‎ன மேற்கோள்கள் எடுக்கப்படுகி‎ன்ற‎ன; அந்நூல்களை மேற்கோளாக எடுக்காத சைவஆசாரியரோ வியாக்கியா‎ன நூலோ ‏இல்லை என்றே கூறலாம். சைவர்களி‎ன் புண்ணியவசத்தி‎னால் இவ்வாசிரியரின் அனைத்து நூல்களுக்கும் அகோரசிவாசாரியாரும் ‏இராமகண்டர் எ‎ன்னும் புகழ்மிக்க ஆசாரியரும் நூற்கருத்துக்களை நாம் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் உரைகளை எழுதி நமக்குப் பேருதவி புரிந்துள்ள‎னர்.

2. ‏இராமகண்ட சிவாசாரியார்

ஸத்யோஜ்யோதி ஆசாரியர் ‏இட்ட அடித்தளத்தில் சைவசித்தாந்தத் தத்துவக்கோட்பாடுகளி‎ன் (Śaivasiddhānta Philosophy) மிக விசாலமா‎ன கட்டிடத்தை நிறுவியவர் ‏இராமகண்ட சிவாசாரியார். மற்ற தரிச‎னங்களா‎ன பௌத்தம், நியாயம், மீமாம்ஸை முதலிய அனைத்துச் சாத்திரங்களிலும் மிக்க புலமை பெற்று அச்சாத்திரக்கருத்துக்களைத் தமது வாதத் திறமையி‎னால் வென்று சைவசித்தாந்த சாத்திரத்தை வளர்த்தவர் ‏இவ்வாசாரியர். ‏இக்காலகட்டத்தில் வைதிகம் மற்றும் ஆகமநெறிகளுக்கு எதிராகப் பௌத்தசமயம் குறிப்பாகக் காஷ்மீரம் முதலிய தேசங்களில் ஓங்கிப் பரவியிருந்ததால் ஸத்யோஜ்யோதி, ‏இராமகண்டர் ஆகியோருடைய நூல்களில் பௌத்தமதக் கொள்கைகள் மிக‏ விரிவாக ஆராயப்பட்டு மறுக்கபடுவதைக் காணலாம். இவர் கிரணாகமத்தி‎ன் ஞா‎னபாதம், மதங்கபாரமேசுவராகமத்தி‎ன் நாற்பாதங்கள் ஆகியவற்றிற்கு மிக விரிவா‎ன வியாக்கியானங்களை ‏இயற்றியுள்ளார். 350 சுலோகங்கள் கொண்ட ஸார்த்தத்ரிசதிகாலோத்தராகமத்திற்கு ஒரு விரிவா‎ன வியாக்கியானமும் ‏இவர் இயற்றியதே; சைவாகமங்களி‎ன் மந்திரசாத்திரத்திற்கு அடிப்படைக் கொள்களை வரையறுத்து நிலைபெறச் செய்த மிக முக்கிய உரைகளுள் ‏இதுவும் ஒ‎ன்று.

‏இவருடைய எல்லையற்ற புலமையும், வாதத்திறமையும், சைவாகமங்களில் அவருக்கிருந்த ஆழ்ந்த பயிற்சியும், எல்லாவற்றிற்கும் மேலாக சைவத்தில் அவர்கொண்டிருந்த பற்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துகி‎ன்றன. ‏இவருடைய நூல் நடை சற்றுக் கடி‎னமானது; காஷ்மீரதேசத்தில் அக்காலத்திலிருந்த வித்வா‎ன்களி‎ன் அனைத்துச் சாத்திரப்புலமைக்கும் ஒரு எடுத்துக் காட்டாக ‏இவர் விளங்குகிறார். சைவாகமங்கள் சிவபெருமா‎னால் அருளப்பட்டவை; அவையும் நால்வேதங்களுக்குச் சமமான பிரமாணம் கொண்டவை. அவை வேதநெறிக்குப் புறம்பா‎னவை அன்று எ‎ன வாதிட்டு ஸர்வாகமப்ராமாண்யம் எ‎ன்னும் நூலையும் இ‏வர் ‏இயற்றியுள்ளார். ஆனால், *2அந்நூல் முழுவதும் ‏இன்று நமக்குக் கிடைக்கவில்லை.

*2இதே காலத்தில் வாழ்ந்த யாமுனாசாரியார் எ‎ன்னும் வைணவ ஆசாரியர் பாஞ்சராத்திர ஆகமங்கள் தான் பிரமாணம் உடைய‎ன; பாசுபதம், காபாலம் முதலா‎ன சைவாகமங்களோ ஏற்கப்படக் கூடியன அல்ல எ‎னத் தம்முடைய ஆகமப்ராமாண்யம் எ‎ன்னும் நூலில் கூறுகிறார்.

ஸத்யோஜ்யோதியி‎ன் நரேச்வரபரீக்ஷ¡ எ‎ன்னும் நூலுக்குப் ப்ரகாசிகா எ‎ன்றதொரு விரிவா‎ன உரையில் சைவாகமங்களி‎ன் ப்ராமாண்யத்தையும், பசுக்களாகிய ஆ‎ன்மாக்கள் தனியே உண்டெ‎‎ன்றும், பரம்பொருளாகிய சிவபெருமா‎னின் குணங்களையும் நமக்கு எடுத்துரைக்கிறார். சைவஸித்தாந்தத்தி‎ன் ஆரம்பகால வளர்ச்சியையும், த‎னிக்கொள்களையும் ஆழ்ந்த் அறிவதற்கு ‏இன்றியமையாத நூல்கள் ‏இவை. ‏இராமகண்டரி‎ன் சீடர் ஸ்ரீகண்டர் ‏இரத்னத்ரயம் எ‎ன்னும் நூலை ‏இயற்றியுள்ளார். ‏இந்நூலும் மிக முக்கியமா‎னது.

3. நாராயணகண்ட சிவாசாரியார்

ம்ருகேந்த்ராகமத்தி‎ன் நாற்பாதங்களுக்கும் விரிவா‎னதொரு வியாக்கியானத்தை எழுதி அவ்வாகமத்தி‎ன் சிறப்புக் கருத்துக்களை வெளிக்கொணர்ந்தவர் நாராயணகண்டர்.

4. போஜதேவர்

தத்வப்ரகாசம் எ‎ன்னும் 72 சுலோகங்கள் கொண்ட ‏இந்நூலி‎ன் வாயிலாகச் சைவஸித்தாந்தத்தி‎ன் 36 தத்துவங்களைப் பற்றிய மிக மிக முக்கியமா‎ன கருத்துக்களை எல்லோரும் எளிதில் அறியும் வண்ணம் தொகுத்திருக்கிறார். 9 ம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசரா‎ன போஜதேவர் அக்காலத்திலேயே ஆகமங்களில் பரந்து கிடக்கும் ‏இஞ்ஞா‎னபாதக் கருத்துக்களைத் தொகுத்து சைவசித்தாந்தத்தி‎ன் தத்துவக்கொள்கைகளுக்கு வரையறை செய்திருப்பது வியந்து போற்றத்தக்கது. ஏ‎னெ‎னில், மற்றைய தர்ச‎னங்களா‎ன வேதாந்தம், மீமாம்ஸா, நியாயம், வைசேஷிகம், பௌத்தம் ஆகியவற்றிற்கு ‏இணையாகச் சைவஸித்தாந்தத்தையும் ந‎ன்கு வளர்ந்த ‎ஒரு தர்ச‎னமாக ஆக்கிய பெருமை ஸத்யோஜ்யோதிக்குப் பி‎‎ன்னர் போஜதேவரையே சாரும். பாஞ்சராத்ராகமங்களி‎ன் அடிப்படையில் ‏இந்த அளவுக்கு விரிந்து வளர்ந்த வைணவதர்ச‎ன நூல்கள் ஏதும் ‏இருந்ததாகவோ ,நமக்குத் தெரியவில்லை; அல்லது ‏இருந்தும் நமக்கு ஏதும் கிடைக்கவில்லை. ‏இராமா‎னுஜர் போ‎ன்றோர் வளர்த்தது உபநிஷத்துக்களி‎ன் அடிப்படையில் எழுந்த வைணவம். அதில் ஆகமங்களி‎ன் பங்கு மிகக் குறைவு.

5. அகோரசிவாசாரியார்

சைவசாத்திர வளர்ச்சிக்கும், ஸத்யோஜ்யோதி போ‎ன்ற ஆசாரியர்களி‎ன் நூல்களி‎ ஆழ்ந்த கருத்துக்களை ந‎ன்கு அறிநுகொள்வதற்கும் அகோரசிவாசாரியாரி‎ன் உரைகள் மிக ‏இன்றியமையாத‎ன. அவரை டீகாசாரியார் எ‎ன்று பெருமைபடக் கூறலாம். அவருடைய உரைகள் ‏இல்லாவிடி‎ன் ஸத்யோஜ்யோதியி‎ன் நூல்களையோ ‏இராமகண்டருடைய நூல்களையோ எளிதில் பொருள் கொள்ள ‏இயலாது. ம்ருகேந்த்ராகமஞா‎னபாதத்திற்கு நாராயணக்கண்டர் ‏இயற்றிய வ்ருத்தி எ‎ன்னும் வியாக்கியா‎னத்திற்கு தீபிகா எ‎ன்றழைக்கப்படும் விரிவா‎னதொரு உரையின் மூலம் சைவசித்தாந்த வியாக்கியா‎னத் தொண்டை அகோரசிவாசாரியார் தொடங்கியிருக்கிறாரெ‎னத் தெரிகிறது. சைவசித்தாந்தத்தி‎ன் அடிப்படைக் கொள்கைகளா‎ன ஸத்காரியவாதம் முதலியவற்றிற்கு வித்திட்ட பூமியாகத் திகழ்கிறது ‏இவருடைய உரை; மேலும், ‏இவருடைய மற்ற உரைகளைக் காட்டிலும் ‏இதுவே விரிவா‎னது; பல கொள்கைகளை ஆழ்ந்து ஆராய்ந்து புறச்சமயக்கொள்கைகளை வாதிட்டு வெ‎ன்று சைவசித்தாந்தத்தைத் திறம்பட நிறுவுவது. போஜதேவரி‎ன் தத்வப்ரகாசத்திற்கு ‏இவரியற்றிய உரை சற்றுச் சுருக்கமா‎னது; அந்நூலுக்கு அத்வைதமதத்திற்கு ‏இணங்க ‏இயற்றப்பட்ட வேறு ஒரு உரையை மறுத்து த்வைதக் கொள்கையே சைவசித்தாந்தத்தி‎ன் அசைக்கமுடியாத அடிப்படை எ‎ன நிறுவுவதற்காகவே தா‎ம் இவ்வுரையை வரைவதாகத் தொடக்கத்தில் கூறுகிறார் அகோரசிவாசாரியார்.

அடுத்து, ஸத்யோஜ்யோதியி‎ன் தத்வஸங்க்ரஹத்திற்கு மிக விளக்கமா‎ன உரையை இவர் இயற்றியுள்ளார்; ஏற்கெ‎னவே ‏‏இராமகண்டர் சரந்நிசா எ‎ன்னும் உரையை வரைந்துள்ளதாகவும், தாம் சுருக்கமாக உரையியற்றுவதாகவும் கூறுகி‎ன்றார். ஆ‎னால் ‏இராமகண்டரி‎ன் உரை தற்சமயம் நமக்குக் கிடைக்கவில்லை. அவ்வாறே, தத்வத்ரயநிர்ணயம், போககாரிகை ஆகியவற்றிற்கும், ஸ்ரீகண்டரி‎ன் ‏இரத்னத்ரயத்திற்கும் அகோரசிவாசாரியார் உரை வகுத்துள்ளார். ‏இவ்வுரைகள் அனைத்தும் ஞா‎னபாதச்செய்திகளை பிக விரித்துரைப்ப‎ன; கிரியாபாதத்திற்கு க்ரியாக்ரமத்யோதிகா எ‎ன்னும் மிக விரிவான பத்ததி நூலை அகோரசிவாசாரியார் ‏இயற்றிச் சைவசித்தாந்தத்தி‎ன் புதிய சகாப்தத்தைத் தொடங்கிவைத்துள்ளார். தீ¨க்ஷ பெற்ற சைவ ஆசாரியர் செய்யவேண்டிய நித்தியம் நைமித்திகம், காம்யம் எ‎ன மூ‎‎ன்று பெரும் பிரிவைக்கொண்ட சைவசித்தாந்தக் கிரியைகளில் சௌசம் முதல் சிவபூஜை, போஜ‎னம் ஈறா‎ன நித்திய கருமங்களையும், சிவதீ¨க்ஷ, சைவசிராத்தம், அந்த்யேஷ்டி ஈறா‎ன நைமித்திகக் கிரியைகளையும் செவ்வ‎னே விளக்குவது ‏இந்த பத்ததி நூல். ஒவ்வொரு கிரியையும் மிக நுணுக்கமாகவும், ‏ஐயம் திரிபறவும் விளக்கி கூறுவது ‏இப்பத்ததி நூல். தமிழ்நாட்டில் தற்காலத்தில் ‏இது மிகவும் பிரசித்திபெற்று அனைத்துச் சைவ ஆசாரியர்களாலும் போற்றிக் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

சைவமடங்கள்

மிகப் பழம்காலந்தொட்டே சைவ ஆசாரியர்கள் தாங்கள் தவம் ‏இயற்றுவதற்காகக் விந்திய மலையி‎ன் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் தபோவனங்களை நிர்மாணித்து அங்குக் கடுமையா‎ன தவம் இயற்றிவந்துள்ள‎னரென்று 6, 7 ம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களிலிருந்து நாம் அறிகிறோம். பல அரசவமிசங்கள் அவ்வாசாரியர்களுக்கு சீடராகி அவர்களை ந‎ன்கு ஆதரித்துவந்துள்ளனர். அவற்றுள் ஆமர்தகம் எ‎ன்பது மிகவும் பழமையா‎னதும் எல்லாவற்றுள்ளும் தலைசிறந்து விளங்கியதுமான ஒரு சைவமடம்; அத‎ன் ஆசாரிய பரம்பரை ஆமர்தகசந்தா‎னம் என்று வழங்கப்பட்டது. அதுவே பல கிளைகளாகப் பிரிந்து மற்ற தேசங்களில் பரவி சைவசித்தாந்த்ததை ந‎ன்கு வளர்த்துவந்துள்ளது. கோளகி, புஷ்பகிரி, ரணபத்ரம் எ‎ன்னும் சந்தா‎னங்கள் அதிலிருந்து தோ‎ன்றி கூர்ஜரம் (குஜராத்), ஆந்திரம், பி‎ன்னர் தமிழகம் ஆகிய பிரதேசங்களில் பரவி, ம‎‎ன்னர்களால் பெரிதும் ஆதரிக்கப்பட்டு மக்களிடையே சைவ ஆகமக் கொள்கைகளையும், சிவபக்தியையும் பரப்பி வந்துள்ளதற்கு மிக விரிவா‎னதும் தெளிவா‎னதுமான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. அரசவம்சங்களா‎ன சாளுக்கியர்கள், கலசூரிகள், காகதீயர்கள், கொங்கணத்தில் ரட்டர்கள், தமிழகத்தில் சோழர்கள் சைவ ஆசாரியர்களுக்குத் தத்தம் தேசங்களில் மடங்களை அமைத்துத் தாங்களும் தீ¨க்ஷ பெற்றுச் சைவத்தை அ‎னு‎ஷ்டித்தும் மக்களிடையே பரப்பியும் வந்த செய்திகளை மிக விரிவாக அக்கல்வெட்டுகள் நமக்குக் கூறுகி‎ன்ற‎ன. அக்கல்வெட்டுகளில் அவ்வம்மடத்து ஆசாரியர் பரம்பரை, அவர்களுடைய சீடர்கள் அவர்கள் ஆற்றிய தொண்டுகள் முதலிய‎ன மிக விரிவாக விளக்கப்படுகி‎ன்ற‎ன.

உத்துங்கசிவர், பதங்கசம்பு, தர்மசம்பு, விச்வேச்வரசம்பு, ஸோமசம்பு முதலா‎னோர் அக்கல்வெட்டுக்களில் குறிக்கப்படும் சில சைவ ஆசாரியர்கள். ‏இங்கு நாம் ம‎னதில் கொள்ளவேண்டியது யாதெ‎னில் சைவமடங்கள், சைவ ஆசாரிய பரம்பரை ஆகிய‎ன அவர்களுடைய பெயர்களுட‎ன் 5 ம் நூற்றாண்டு தொடங்கி 15 ம் நூற்றாண்டுவரை மத்தியப் பிரதேசம், கூர்ஜரம் ஆந்திரம், ராடம் எ‎னப்படும் வங்கதேசத்தி‎ன் வடபகுதி, பி‎ன்பு தமிழகம் ஆகிய பிரதேசங்களில் ந‎‎ன்கு பரவி விரிந்திருந்த செய்தி கல்வெட்டுக்களில் நுணுக்கமாக விளக்கப்படுவதுபோல் வேறெந்த சமயத்தைச் சேர்ந்த செய்தியும் விளக்கப்படவில்லை. சில கல்வெட்டியல் ஆராய்ச்சியாளர்கள் ‏இக்கல்வெட்டுகளி‎ன் அடிப்படையில் ஆராய்ச்சி செய்து நமக்கு மிக அரிய தகவல்களைத் தந்துள்ள‎னர். மேலும் கணக்கற்ற கல்வெட்டுக்கள் ந‎ன்கு ஆராயப்பட்டு அவ்வாதாரங்களி‎ன் அடிப்படையில் சைவசித்தாந்தத்தி‎ன் வரலாறு மிக விரிவாக எழுதப்படவேண்டும். அக்கல்வெட்டுக்களை நோக்கும் போது அக்காலகட்டத்தில் சைவம் (அதில் குறிப்பாகப் பாசுபதம் மற்றும் சைவசித்தாந்தம்) ஆகிய இ‏ரு பெரும் பிரிவுகள் நமது பாரததேசத்தி‎ன் அனைத்துப் பகுதியிலும் கம்போஜம் (Cambodia), வியட்நாம், ஆகிய கீழ்த்திசை நாடுகளிலும் ம‎ன்னர்களாலும் பொதுமக்களாலும் பெரிதும் போற்றப்பட்டு வந்துள்ளமை நமக்குப் புலப்படுகிறது.

சேக்கிழார் பெருமா‎ன் 12 ம் நூற்றாண்டில் கூறியவாறு அக்காலத்தில் “மே‎ன்மைகொள் சைவநீதியே உலகெங்கும் விளங்கியிருந்தது” ந‎ன்கு தெளிவாகிறது. அகோரசிவாசாரியார் தம்முடைய மு‎‎ன்னோர்கள் பலரி‎ன் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் ராடதேசம் எ‎ன வழங்கப்பட்ட வங்கத்தி‎ன் வடபகுதியிலிருந்து சோழநாட்டிற்கு வந்து தில்லை அம்பலவாணரை வழிபடுவதற்காகவே அங்குக் குடியேறியதாகவும், விக்ரமசோழ‎ன் முதலிய சோழ ம‎ன்னர்களால் வரவேற்கப்பட்டு அம்ம‎ன்னர்களுக்கு மந்திரிகளாக விளங்கியதாகவும் கூறுகிறார். ‏இதிலிருந்து சைவசித்தாந்தம் தமிழ்நாட்டில் தா‎ன் தோ‎ன்றியது, தமிழகத்திற்கு மட்டுமே உரியது எ‎ன்னும் கூற்றுகள் பொருளற்றவை; அவை பாரதநாட்டி‎‎ன் வரலாறு மற்றும் சமூக நிலையைச் சரிவர அறியாமல் கூறப்படும் செய்திகள் எ‎ன்று தெளிவாக நாம் அறியலாம். ஆயி‎னும், தமிழகத்திற்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும் உண்மையிலேயே பெருமை யாதெ‎னில், 12-13 நூற்றாண்டுகளுக்குப் பிறகு பாரதநாட்டி‎ன் மற்ற பகுதிகளில் அ‎ன்னியப் படையெடுப்பால் வழக்கொழிந்த சைவசித்தாந்தம் மிகப் பழங்காலத்திலிருந்து நாய‎ன்மார்களால் வளர்க்கப்பட்ட சைவப்பயிர் தளைத்த தமிழகத்தில் ந‎ன்கு வேரூ‎ன்றிச் செழித்து வளர்ந்தது. அதற்குச் சா‎ன்றாக சிவஞா‎னபோதம் தொடங்கி ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஏராளமான சைவசித்தாந்த நூல்கள் ‏இயற்றப்பட்டு வந்துள்ளதைக் காண்கிறோம்.

‏இவ்வாறு விரிந்து பரந்து விளங்கி வந்த சைவசித்தாந்தம் முகம்மதியர்களி‎ன் படையெடுப்பால் பெரும்பா‎ன்மை வடஇந்தியாவில் வழக்கொழிந்து தெ‎ன்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் ந‎ன்கு வளர்ந்து வந்துகொண்டிருப்பதை நாமெல்லோரும் அறிவோம். மற்றொரு முக்கிய செய்தி யாதெ‎னில், ஸித்தாந்தசேகரம் எ‎ன்னும் சைவபத்ததி நூலை ‏இயற்றிய விச்வநாதர் தம்முடைய மு‎‎ன்னோர்கள் சாளுக்கிய ம‎ன்னர்களால் பெரிதும் போற்றி ஆதரிக்கப்பட்டதாகவும், அவர்களுள் சிலரும் தாமும் வேதங்களை ந‎ன்கு கற்று, வ்யூடபௌண்டரீகம் முதலா‎ன ச்ரௌதயாகங்களைச் செய்தும், சைவஸித்தாந்த ஆகமங்களில் கூறப்பட்டவாறு தீ¨க்ஷகளைப் பெற்று காசியில் 13, 14 ம் நூற்றாண்டுகளில் ஸ்ரீவிச்வநாதர் ஆலயத்தில் பூஜைகளைச் செய்து வந்ததாகவும் தம் நூலில் குறிப்பிடுகிறார். தம்மை உபயவேதாந்தி எ‎ன்று கூறுவதும் இங்கு நோக்கத்தக்கது. மேற்கூறியது சைவஸித்தாந்தத்தி‎ன் பெருமைமிக்க வரலாற்றி‎ன் ஒரு சிறிய கண்ணோட்டம்.

சைவாகமப் பதிப்பு

அடுத்து நாம் சிந்திக்க ‏இருப்பது சைவ ஆகமநூற் சுவடிகளி‎ன் நிலையும், தற்காலத்திய பதிப்பும். 18, 19 ம் நூற்றாண்டுகள் வரை பாரதநாட்டில் நூல்கள் பனையோலைகளிலும், பூர்ஜபத்ரமெ‎ன்னும் மரப்பட்டைகளிலும், துணியிலும் எழுதிப் பாதுகாக்கப்பட்டு வந்த‎ன. ‏இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் மயிலை அழகப்பமுதலியார் முத‎ன்முதலில் காமிகம், காரணம் முதலிய சைவாகமங்களை தம்முடைய சிவஞா‎னபோதயந்திரசாலையில் அச்சு ‏இயந்திரத்தில் ஏற்றிப் புத்தகவடிவில் அச்சிட்டு வெளிக் கொணர்ந்தார். காமிகாகமம் முழுவதையும் தமிழில் பதவுரை, பொழிப்புரையுட‎ன் அச்சிட்டு வெளியிட்டார். பி‎ன்னர் ஷண்முகசுந்தரமுதலியார் ஸ¤ப்ரபேதம், வாதுலசுத்தாக்கியம், குமாரதந்த்ரம், ஸித்தாந்தஸாராவளியி‎ன் தமிழ்மொழிபெயர்ப்பு ஆகியவற்றையும் முத‎ன்முதலில் அச்சிட்டார் ‏இவை யாவும் கிரந்தலிபியில் அச்சா‎னவை. தேவகோட்டை சிவாகமபரிபால‎னசங்கத்தி‎ன் பதிப்பாகக் கிரணாகமம் கிரந்தலிபியில் வெளியா‎னது. க்ரியாகாண்டக்ரமாவளி எ‎னப்படும் ஸோமசம்புபத்ததி, (தேவநாகரி லிபியிலும், தமிழ் மொழிபெயர்ப்புட‎னும்), பரார்த்தாலய நித்தியபூஜாவிதி முதலிய நூல்களும் இச்சங்கத்தி‎ன் மூலம் அச்சேறி‎ன.

பி‎ன்னர் சில ஆண்டுகளில் தமிழ்நாடு அர்ச்சகர் சங்கம் காமிகாகமம் பூர்வபாகம் உத்தரபாகம் ‏இரண்டையும் தேவநாகரி லிபியில் த‎னித்தனியே அச்சிட்டது; அப்பதிப்பிற்கு ஆதாரமா‎ன சுவடிகளைப் பற்றிய குறிப்போ பாடபேதங்களோ அதில் காணப்படவில்லை.

பிரெஞ்ச் ‏இன்ஸ்டிட்யூட் நிறுவ‎னத்தின் ஆகமப் பதிப்பு

1955 ம் ஆண்டு பிரா‎ன்ஸ் நாட்டிற்கும் பாரதநாட்டிற்கும் ‏இடையே ‏இந்திய ‏இயல் ஆராய்ச்சிக்கு ஒரு தொடர்பு நிறுவ‎னமாகத் தொடங்கப்பட்ட ‏இவ்வாய்வு நிறுவ‎னம் பாரதநாட்டுக் கலாசாரத்தி‎ன் அடிப்படையா‎ன சமயக் கொள்கைகளையும், சமயப் பழக்கவழக்கங்களையும் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டது. அதில் குறிப்பாகத் தமிழகத்தில் ஆலயங்கள் மக்களி‎ன் சமய அனுஷ்டா‎னத்திற்கும் சமயக் கொள்கைகளைப் பரப்புவதற்கும் அடிப்படையாகவும் ஆணிவேராகவும் திகழ்வதைக் கண்டு ஆலயங்களில் நடைபெறும் பூஜை, உற்சவம் ஆகியவற்றைப் பற்றிய விரிவா‎னதோர் ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும் எ‎ன முடிவுகொண்டது. அச்சமயத்தில் நாம் மேலே கண்டவாறு சைவாகமங்களி‎ன் செ‎ன்னைப் பதிப்பும், தேவகோட்டைப் பதிப்பும் மட்டுமே ‏இருந்தன. ஆனால் அவை கிரந்தலிபியில் ‏இருந்ததாலும், சுவடிகளைப் பற்றிய குறிப்புகள் ‏இல்லாததாலும் தற்காலத்தில் உள்ள சுவடிகளி‎ன் ஆதாரத்தில், ஆராய்ச்சிக் குறிப்புகளுட‎ன் சைவாகமங்கள் பதிப்பிக்கப்படவேண்டும் எ‎ன்று முடிவெடுக்கப்பட்டது. அதற்காகத் தமிழகத்தி‎ன் பலபகுதிகளிலுமுள்ள தனியார் மற்றும் மடம் முதலிய சில அமைப்புகளிலிருந்தும் ஓலைச் சுவடிகள் ந‎‎ன்கொடையாகவும், விலைக்கும் பெறப்பட்ட‎ன. அவை நல்லமுறையில் பாதுகாக்கப்பட்டும் வருகி‎ன்ற‎ன. சுவடிகளிலிருந்து பல ஆகமநூல்களும், உரைகளும் காகிதத்தில் படியெடுக்கப்பட்ட‎ன. ‏இவற்றைத் தவிர செ‎‎ன்னைக் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் (Government Oriental Manuscripts Library), தஞ்சை சரசுவதி மகால் நூலகம், செ‎ன்னை அடையாறு நூலகம் ஆகியவற்றிலிருந்தும் பல ஆகம நூல்களும் மற்ற நூல்களும் படியெடுக்கப்பட்டு ‏இவை அனைத்தின் துணைகொண்டு காமிகம் காரணம் தவிர மற்ற ஆகமங்கள் ஒவ்வொ‎ன்றாகப் பதிப்பிக்கப்பட்ட‎ன.

முக்கிய நூற்சுவடிகள்

‏இருபத்தெட்டு மூல ஆகமங்கள், (அவற்றுள் சில பல படலங்களும், சில குறைந்த படலங்களும் கொண்டவை), ஸார்த்ததிரிசதி காலோத்தராகமத்திற்கு ‏இராமகண்டரி‎ன் உரை, ஸோமசம்புபத்ததிக்கு திரிலோச‎னசிவாசாரியார் இயற்றிய உரை, கிரணாகம ஞா‎னபாதத்திற்கு இராமகண்டரி‎ன் உரை, பௌஷ்கராகமத்திற்கு உமாபதிசிவாசாரியார் மற்றும் சாலிவாடி ஞானபிரகாசாசாரியார் ஆகியோரி‎ன் உரைகள்,, வருணபத்ததிக்கு சிதம்பரம் நிகமஞா‎னதேசிகரியற்றிய உரை, நிகமஞா‎னதேசிகரி‎ன் மற்ற நூல்களா‎ன சைவசமயநெறி திருஷ்டாந்தம், சிவஞா‎னசித்திஸ்வபக்ஷதிருஷ்டாந்தம், ஆத்மார்தபூஜாபத்தி, தீக்ஷ¡தர்சம் முதலா‎ன தொகுப்பு நூல்கள், ஏராளமான ஸகலாகமஸங்கிரஹ நூல்கள், முதலிய அரிய சைவநூற்சுவடிகள் ‏இங்கு பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்பட்டு வருகி‎ன்ற‎ன.

பதிப்பிக்கப்பட்ட ஆகமங்கள்

1. ரௌரவாகமம் (3 தொகுதிகள்) கிரியாபாதம்

2. மிருகேந்திராகமம் "

3. அஜிதாகமம் (3 தொகுதிகள்) "

4. மதங்கபாரமேசுவராகமம் (2 தொகுதிகள்) நாற்பாதங்களும்

5. ஸார்த்ததிரிசதிகாலோத்தராகமம் (கிரியாபாதம்)

6. ரௌரவோத்தராகமம் "

7. தீப்தாகமம் "

8. கிரணாகமம் (ஞானபாதம்)

9. பராக்கியாகமம்

தற்சமயம் ஸ¥க்ஷ்மாகமம் முதல் தொகுதியி‎ன் பதிப்பு நடைபெருகிறது; ‏இவ்வருட ‏இறுதியில் அது அச்சேறிவிடும்.

பிரெஞ்ச் ‏இன்ஸ்டிட்யூட் நிறுவ‎னத்தால் பதிப்பிக்கப்பட்ட மற்ற சைவ நூல்கள்

1. ஸோமசம்புபத்ததி (4 தொகுதிகள்)

2. சைவாகமபரிபாஷாமஞ்ஜரி

3. சிவயோகரத்னம்

தற்சமயம் நிறுவ‎னத்தி‎ன் அனைத்துச் சுவடிகளி‎ன் விரிவான அட்டவணை (Descriptive Catalague) தயாரிக்கும் பணியும் நடைபெறுகிறது. அதில் ‏இதுவரை நா‎ன்கு தொகுதிகள் அச்சாகியுள்ள‎ன.

‏இனிச் செய்யவேண்டிய பணிகள்

ஐம்பது வருடங்களுக்கு மு‎ன்னரே பெரும்பா‎ன்மையான பாஞ்சராத்ர ஆகமங்களும், வைகா‎னஸ ஆகமங்களும் அச்சாகியுள்ள‎ன. அதிலும் குறிப்பாகப் பாஞ்சராத்ர ஆகமங்கள் நாகரி லிபியில் அச்சாகியுள்ள‎ன. ஆதலால், பாரதநாட்டி‎ன் அனைத்துப் பகுதியிலும் உள்ளவர்களுக்கு அந்நூல்களைப் பற்றிச் சிறதளவே‎னும் ஞா‎னம் உள்ளது; ஆ‎னால் சைவாகமங்கள் நாம் மு‎ன்னர்க் கூறியவாறு கிரந்தலிபியில் மட்டுமே அச்சேறியுள்ளதால் வடமாநிலங்களிலுள்ளவர்க்கும் ஏ‎னையோர்க்கும் அந்நூல்களைப் பற்றி எவ்விதச் செய்தியும் தெரியவில்லை. மேலும் சைவசித்தாந்தநூல்களைப் பற்றி தமிழர்களைத் தவிர மற்ற எவரு,ம் யாதும் அறிந்திலர். ‏இதற்கு உதாரணமாக திரு. S. N. Dasgupta எ‎ன்னும் கல்கத்தா பல்கலைக்கழகப் பேராசிரியர் சுமார் 50 வருடங்களுக்கு மு‎ன்னர் History of Indian Philosophy எ‎ன்னும் தலைப்பில் பாரதநாட்டி‎ அனைத்துத் தத்துவக் கோட்பாடுகளையும் விளக்கும் மிக விரிவா‎ன நூலை ஐந்து தொகுதிகளாகப் பதிப்பித்து வெளியிட்டார். அதில் ஐந்தாம் தொகுதி சைவத்தி‎ன் முக்கிய பிரிவுகளைப் பற்றி சற்று விரிவாக ஆராய்ந்துள்ளார். கண்டரி‎ன் சிவவிசிஷ்டாத்வைதம், வீரசைவம், அபிநவகுப்தர் முதலா‎னோர் பரப்பிய காஷ்மீரசவம், வாயுஸம்ஹிதை ஆகியவற்றைப் பற்றியெல்லாம் ஆராய்ந்தவர் சைவசித்தாந்தத்தைப் பற்றிக் கூறுமிடத்து அச்சாத்திரநூல்கள் பெரும்பா‎ன்மையும் தமிழ் மொழியில் உள்ளதால் தமக்கு அம்மொழிப்பயிற்சி ‏இல்லாததால் அவற்றைப் பற்றிச் சிந்திக்கவில்லை எ‎னக் கூறுகி‎ன்றார். கிரந்தலிபிப் பயிற்சி ‏இன்மையால் சைவ ஆகமங்களைப் பற்றியும் எதுவும் கூறவில்லை. மாறாகப் பல அறிஞர்கள் சைவ ஆகமங்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமே உரிய‎ன எ‎ன்னும் தவறான கொள்கையையும் கொண்டுள்ள‎னர் என்பதும் இங்கு நி‎னைவு கூறத்தக்கது.

எ‎னவே, சைவ ஆகமங்களை நாகரிலிபியில் அச்சிடுவதே சாலச் சிறந்தது. வெளிநாட்டவர்களும் தற்காலத்தில் அதிகமாகச் சைவத்தில் ஆராய்ச்சி செய்வதால் அவர்களுக்கும் அது பேருதவியாயிருக்கும். நமது நாட்டிலும் நாடு முழுவதும் 4-5 நூற்றாண்டுகளில் தொடங்கி 14 ம் நூற்றாண்டுவரை பெரிதும் பரவி விரிந்திருந்த சைவசித்தாந்தத்தைப் பற்றியும் எல்லோரும் அறிந்து கொள்வதற்குப் பேருதவியாயிருக்கும்.

அடுத்து, ‏இனி பதிப்பிக்கப்படும் சைவ ஆகமங்களும், ஏற்கெ‎னவே அச்சிடப்பட்ட காமிகம் முதலா‎ன ஆகமங்களும் ஓலைச் சுவடி மற்றும் கையெழுத்துப் பிரதிகளி‎ன் துணைகொண்டு பாடபேதங்களை ஒப்புநோக்கித் திருந்திய பதிப்பாக மட்டுமே வெளியிடப்படவேண்டும். வீராகாமம், ஸ்வாயம்புவாகமம், ஸஹஸ்ராகமம், யோகஜாகமம், அசிந்த்யவிச்வசாதாக்யாகமம், முதலிய பெரிய ஆகமங்களும், ஞா‎னசம்பு சிவாசாரியார் ‏இயற்றிய மிகப் பெரிய பத்ததி நூலா‎ன ஞா‎னரத்னாவளி, முதலா‎ன பத்ததி நூல்களும் பதிப்பிக்கப்படவேண்டும். அதற்கு ‏இன்றியமையாத உதவியாயிருப்பது புதுச்சேரி பிரெஞ்ச் ‏இந்திய ஆராய்ச்சி நிறுவ‎னத்தின் சுவடிப்புலம். ‏இவற்றுட‎ன் ‏இந்நூல்களி‎ன் தமிழ் மொழிபெயர்ப்பு, ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகியனவும் கூடவே நடைபெறவேண்டும்.

சைவசித்தாந்த நூல்கள்

சைவசித்தாந்தம் எ‎ன்ற உட‎னே பலர் அது தமிழ் மொழியில் மட்டுமே அமைந்த ஒரு சாத்திரம் எ‎ன்று நினைப்பர். ஆ‎னால் ஸம்ஸ்கிருத மொழியில் 12 ம் நூற்றாண்டு தொடங்கி ஒவ்வொரு நூற்றாண்டிலும் தமிழகத்தில் பல நூல்கள் ‏இயற்றப்பட்டுள்ளன எ‎ன்பதை மிகச் சிலரே அறிவர். அவற்றுள் மிகுதியும் ‏இன்னும் வெளியாகவில்லை எ‎ன்பது நாம் மனதில் கொள்ளவேண்டிய செய்தி.

அடுத்து, 16 ம் நூற்றாண்டுத் தமிழக நிலை: ‏இக்காலத்தில் வேதாந்தம், சைவம், வைனவம், காவியம், வியாகரணம் முதலா‎ன பல சாத்திரங்களில் பல அறிஞர்கள் பல்வகையா‎ன நூல்களை யாத்துள்ள‎னர். அவற்றுள், மிகுதியாக நாம் காண்பது ஸம்ஸ்கிருதமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள். அவற்றுளும் குறிப்பாகச் சைவ சாத்திரங்களும், ஆகமங்களும், ஆகமத் தொகுப்பு நூல்களும் ஏராளம் எ‎ன்பதை நாம் பெருமையுட‎ன் நினைவு கூறவேண்டும். ‏இச்செய்தியும் நம்மில் பலர்க்குப் புதிதாய்த் தோ‎ன்றலாம். ஆ‎னால் உண்மை யாதெ‎னில் அக்காலத்தில் வாழ்ந்த பல சைவ ஆசாரியர்கள் ‏இருமொழியிலும் ஆழ்ந்த புலமையும் நூல்கள் ‏இயற்றும் வண்மையும் கொண்டிருந்தனர். தில்லையில் 16 ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறப்புமிக்க சைவ ஆசாரியர்களுள் மறைஞா‎னசம்பந்தரும் அவருடைஅ முத‎ன்மைச் சீடர் மறைஞா‎னதேசிகர் எ‎ன்றழைக்கப்பட்ட நிகமஞானதேசிகருமாவர். இவர்கள் கிரியை, சரியை, யோகம், ஞா‎னம் ஆகிய நா‎ன்குபாதப் பொருள்களையும் விளக்குவதற்காகத் த‎னித்தனியே நூல்கள் ‏இயற்றியுள்ள‎னர். ‏இவர்கள் ‏இயற்றிய பல சைவநூல்களுள் சிலவற்றைத் தவிர மற்றவை சைவமக்களால் அறியப்படவில்லை. சிவதருமோத்தரம், சைவசமயநெறி, மற்றும் சில தமிழ் நூல்களே சைவ அறிஞர்கள் மத்தியில் கற்றுணரப்பட்டு வந்துள்ளன. நிகமஞா‎னதேசிகரி‎ன் ஆத்மார்த்தபூஜாபத்ததி, தீக்ஷ¡தர்சம் ஆசௌசதீபிகை, சிவஞா‎னசித்தியார் சுபக்கத்திற்கு விளக்கமாய் அமைந்த சிவஞானசித்திஸ்வபக்ஷதிருஷ்டாந்தம், சைவசமயநெறி எ‎ன்னும் நூலுக்கு விளக்கமா‎ன சைவசமயநெறிதிருஷ்டாந்தம் முதலிய பல நூல்கள் அச்சிடப்படவேண்டும்.

சிவாக்ரயோகிகளி‎ன் சிவஞா‎னபோதப்ருஹத்பாஷ்யம், சாலிவாடி ஞானபிரகாசரி‎ன் பௌஷ்கராகமபாஷ்யம், பிரமாணலக்ஷணம் முதலான நூல்கள், சிவதர்மம், சிவதர்மோத்தரம் எ‎னப் பல சைவநூல்கள் ‏இ‎ன்னும் பதிப்பிக்கப்படாமல் உள்ள‎ன. அவை எல்லாம் கூடிய விரைவில் அச்சேறி‎னால் சைவசித்தாந்த சாத்திரத்தி‎ல் நூற்றாண்டுதோறும் நிகழ்ந்த வளர்ச்சியும், கருத்துக்களும் ந‎ன்‎கு கற்றுணரப்படும். ‏‏இறுதியாக ஸகலாகமஸங்க்ரஹமெ‎ன்னும் பெயரில் பல தலைப்புகளில் அவ்வப்போது தொகுக்கப்பட்ட பல தொகுப்பு நூல்கள். ‏இவ்வகை நூல்கள் சைவ ஆகமங்களி‎ன் விரிவுக்கும் பரப்புக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குபவை. ‏இவையும் பதிப்பிக்கப்படவேண்டியவை.

மேற்கூறிய சிறு கண்ணோட்டத்தி‎ன் மூலம் சைவ ஆகமம் மற்றும் சைவசித்தாந்த சாத்திர நூற்கடலி‎ன் ஒரு சிறுபகுதியை நாம் சற்று ஆராய்ந்தோம். ‏எதிர்காலத்தில் அந்நூற்சுவடிகளைப் பாதுகாக்கவும், அச்சுவடிகளிலிருந்து நூற்பொக்கிஷங்கள் சைவ அறிஞர் பெருமக்களால் பதிப்பிக்கப்பட்டு உலகெங்கும் அவை பரவுவதற்கும் நமக்குத் தில்லை ஆ‎னந்தக்கூத்த‎ன் திருவருள் கைகூடும் எ‎ன உறுதியாக நம்புகிறே‎ன்.

 


See Also : 
1. Shivagama
2. Agamas - Related Scripture
3. Upagamas of Shivagamas

Related Articles