logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-paathiri-tree

temple-trees-தலமர சிறப்புகள் பாதிரி மரம்

தலமர சிறப்புகள்


பாதிரி Stereospermum suaveblens, Dt.; Bignoniaceae.

 

விடையான் விரும்பியென் னுள்ளத் திருந்தான் இனிநமக்கிங் கடையா அவலம் அருவினை சாரா நமனையஞ்சோம் புடையார் கமலத் தயன்போல் பவர்பா திரிப்புலியூர் உடையான் அடியார் அடியடி யோங்கட் கரியதுண்டே.

                                                                                                                  . - திருநாவுக்கரசர்.

 

 

திருப்பாதிரிப்புலியூர், திருவலிதாயம், திருஅவினாசி, திருவாரூர்ஆரூர் அரநெறி, திருவாரூர் - ஆரூர்ப்பரவையுண்மண்டளி, திருப்புக்கொளியூர் (அவிநாசி), அவளிவணல்லூர் முதலிய சிவத் தலங்களில் பாதிரி தலமரமாக விளங்குகின்றது. இவற்றுள் பாதிரிப்புலியூரில் வெண்பாதிரியும், திருவாரூரில் செம்பாதிரியும் தலமரமாக உள்ளது. இணையில்லாத எதிர் அடுக்கில் அமைந்த சிறகமைப்புக் கூட்டிலைகளையுடைய வறட்சியான காடுகளில் வளரும் மரம். வெண்பாதிரி மலர் சிவப்பு வரிகளுடைய மஞ்சள் நிறமும், செம்பாதிரி மலர் மங்கிய செம்மஞ்சள் நிறமும் உடையது. இலை, பூ, வேர் ஆகியவை மருத்துவப் பயன் உடையது.

பாதிரி - பூக்கும், ஆனால் காய்க்காது. சித்திரை மாதம் முழுவதும் பாதிரிப்பூ பூத்திருக்குமாம். 

சிறுநீர் பெருக்குதல், வெப்பகற்றுதல் ஆகிய மருத்துவக் குணங்களையுடையது.

 

< PREV <
பனைமரம்
Table of Content> NEXT >
பாலைமரம்

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

temple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)

temple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்

temple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்

temple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)