logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-kaarai-plant

temple-trees-தலமர சிறப்புகள் காரைச் செடி

தலமர சிறப்புகள்



காரை Canthium Parviflorum, Lam.; Rubiaceae.

அன்றாலின் கீழிருந்தங் கறம்புரிந்த அருளாளர் 
குன்றாத வெஞ்சிலையிற் கேளரவ நாண்கொளுவி 
ஒன்றாதார் புரம்மூன்றும் ஓங்கெரியில் வெந்தவிய 
நின்றாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

                                                                                                        - திருஞானசம்பந்தர்.

 

காஞ்சிபுரத்திற்கு அருகாமையிலுள்ளது கச்சிநெறிக்காரைக்காடு; இத்தலத்தின் தலமரம் காரை ஆகும். இஃது இலையும் முள்ளும் மாற்றடுக்கில் அமைந்த குத்துச் செடி. பச்சை நிறக் காய்களையும், மஞ்சள் நிற பழங்களையும் கொண்டுள்ளது. பழங்கள் உண்ணக் கூடியவை. இலை, பழம் முதலியன மருத்துவப் பயனுடையன.

 

திருமுறைகளில் காரை(ச்செடி) பற்றிய குறிப்புகள் :-

காரைகள் கூகைமுல்லை களவாகை ஈகை 
	படர்தொடரி கள்ளி கவினிச்
சூரைகள் பம்மிவிம்மு சுடுகா டமர்ந்த 
	சிவன்மேய சோலை நகர்தான்
தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை 
	குதிகொள்ள வள்ளை துவள
நாரைக ளாரல்வார வயன்மேதி வைகும் 
	நனிபள்ளி போலு நமர்காள்.		2.84.1
எட்டி இலவம் ஈகை சூரை காரை படர்ந்தெங்கும்
சுட்ட சுடலை சூழ்ந்த கள்ளி சோர்ந்த குடர்கெளவப்
பட்ட பிணங்கள் பரந்த காட்டிற் பறைபோல் விழிகட்பேய்
கொட்ட முழவங் கூளி பாடக் குழகன் ஆடுமே.		11.காரைக்-2.1

காரைகள் கூகை முல்லை என நிகழ் கலை சேர் வாய்மைச் 
சீர் இயல் பதிகம் பாடித் திருக் கடைக் காப்புத்தன்னில் 
நாரியோர் பாகம் வைகும் நனி பள்ளி உள்குவார் தம் 
பேர் இடர் கெடுதற்கு ஆணை நமது எனும் பெருமை வைத்தார்	12.சம்.115

நீடு திருப் பொழில் காஞ்சி நெறிக்காரைக் காடு இறைஞ்சிச் 
சூடு மதிக் கண்ணியார் துணை மலர்ச் சேவடி பாடி 
ஆடும் அவர் இனிது அமரும் அனே கதங்கா வதம் பரவி 
மாடு திருத் தானங்கள் பணிந்து ஏத்தி வைகும் நாள்	12.சம்.1000

 

 

< PREV <
காட்டாத்திமரம்
Table of Content > NEXT >
கிளுவைமரம்

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

temple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)

temple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்

temple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்

temple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)