logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-erukku-calotropis-gigantea

temple-trees-தலமரச் சிறப்புகள் எருக்கஞ்செடி (Erukku - Calotropis Gigantea)

தலமரச் சிறப்புகள்


எருக்கு Calotropis gigantean, R Br.; Asclepiadaceae.

இலையார் தருசூலப் படையெம் பெருமானாய் 
நிலையார் மதில்மூன்று நீறாய் விழவெய்த 
சிலையான் எருக்கத்தம் புலியூர்த் திகழ்கோயில் 
கலையான் அடியேத்தக் கருதா வினைதானே

                                                                                                   . - திருஞானசம்பந்தர்.

 

 

திருஎருக்கத்தம்புலியூர், திருக்கானாட்டுமுள்ளூர் , திருமங்கலக்குடி ஆகிய திருக்கோயில்களில் தலமரமாக விளங்குவது வெள்ளெருக்கு ஆகும். இவற்றுள் திருக்கானாட்டுமுள்ளூரில் வெள்ளெருக்கு தற்போதில்லை. எருக்கத்தம்புலியூரில் விழாக் காலங்களில் வெள்ளெருக்கம் பூவால் பூசிக்கப்படுகிறது. திருக்கானாட்டுமுள்ளூரில் அத்தியும் தலமரமாக உள்ளது.

எருக்கு, அகன்று எதிரடுக்கில் அமைந்த இலைகளையுடைய பெரிய நேராக வளரும் பாலுள்ள குறுஞ்செடியாகும். செடி முழுமையும் மென்மையான வெள்ளைக் கம்பளியால் மூடப்பட்டு இருக்கும். விதைகள் பஞ்சுடன் இணைந்திருப்பதால் காற்றில் பறக்கக் கூடியவை. தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் தானே வளர்வது. வெள்ளை மலர்களையுடைய வெள்ளெருக்கே மருத்துவத்திற்குச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இலை, பூ, பால், பட்டை, வேர் முதலியன மருத்துவப் பயனுடையது.

இலை நஞ்சு நீக்குதல், வாந்தியுண்டாக்குதல், பித்தம் பெருக்குதல், வீக்கம்-கட்டிகளைக் கரைத்து வேதனை குறைத்தல் ஆகிய குணங்களையுடையது. பூ, பட்டை ஆகியவை கோழையகற்றுதல், பசியுண்டாக்குதல், முறைநோய் நீக்குதல் ஆகிய பண்புகளையுடையது. பால் புண்ணுண்டாக்கும் தன்மை கொண்டது.

 

 

திருமுறைகளில் எருக்கு/வெள்ளெருக்கு பற்றிய குறிப்புகள் :-

வண்டணை கொன்றை வன்னியு மத்தம் 
	மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க
கொண்டணி சடையர் விடையினர் பூதங் 
	கொடுகொட்டி குடமுழாக் கூடியு முழவப்
பண்டிகழ் வாகப் பாடியோர் வேதம் 
	பயில்வர்முன் பாய்புனற் கங்கையைச் சடைமேல்
வெண்பிறை சூடி உமையவ ளோடும் 
	வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.		1.75.4 

ஏறுமொன் றேறி நீறுமெய் பூசி 
	இளங்கிளை யரிவையொ டொருங்குட னாகிக்
கூறுமொன் றருளிக் கொன்றையந் தாருங் 
	குளிரிள மதியமுங் கூவிள மலரும்
நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும் 
	மகிழிள வன்னியும் இவைநலம் பகர
ஆறுமோர் சடைமேல் அணிந்த வெம்மடிகள் 
	அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.		1.77.7 

நீரோடு கூவிளமும் நிலாமதியும் 
	வெள்ளெருக்கும் நிறைந்தகொன்றைத்
தாரோடு தண்கரந்தைச் சடைக்கணிந்த 
	தத்துவனார் தங்குங்கோயில்
காரோடி விசும்பளந்து கடிநாறும் 
	பொழிலணைந்த கமழ்தார்வீதித்
தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் 
	நடம்பயிலுந் திருவையாறே.		1.130.5

வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன்னி யன்ற சடையிற் பொலிவித்த புராணனார்
தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம்
என்னை யாளுடை யானிட மாகவு கந்ததே.	2.7.1 

விடையுடை யப்பனொப்பில் நடமாட வல்ல 
	விகிர்தத் துருக்கொள் விமலன்
சடையிடை வெள்ளெருக்க மலர்கங்கை திங்கள் 
	தகவைத்த சோதிபதி தான்
மடையிடை யன்னமெங்கும் நிறையப் பரந்து 
	கமலத்து வைகும் வயல்சூழ்
கொடையுடை வண்கையாளர் மறையோர்க ளென்றும் 
	வளர்கின்ற கொச்சை வயமே.	2.83.2 

பலபல வேடமாகும் பரனாரி பாகன் 
	பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென் 
	உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் 
	வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல 
	அடியா ரவர்க்கு மிகவே.	2.85.9 

விண்டவெள்ளெ ருக்கலர்ந்த வன்னிகொன்றை மத்தமும்
இண்டைகொண்ட செஞ்சடை முடிச்சிவ னிருந்தவூர்
கெண்டைகொண் டலர்ந்தகண்ணி னார்கள்கீத வோசைபோய்
அண்டரண்டம் ஊடறுக்கும் அந்தணாரூ ரென்பதே.	2.101.2 

அன்ன மென்னடை அரிவையோ டினிதுறை
	அமரர்தம் பெருமானார்
மின்னு செஞ்சடை வெள்ளெருக் கம்மலர்
	வைத்தவர் வேதந்தாம்
பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதிற்
	சிரபுரத் தார்சீரார்
பொன்னின் மாமலர் அடிதொழும் அடியவர்
	வினையொடும் பொருந்தாரே.	2.102.1

வெண்ணி லாமிகு விரிசடை யரவொடு
	வெள்ளெருக் கலர்மத்தம்
பண்ணி லாவிய பாடலோ டாடலர்
	பயில்வுறு கீழ்வேளூர்ப்
பெண்ணி லாவிய பாகனைப் பெருந்திருக்
	கோயிலெம் பெருமானை
உண்ணி லாவிநின் றுள்கிய சிந்தையார்
	உலகினில் உள்ளாரே.	2.105.3

துன்று வார்சடைத் தூமதி மத்தமுந்
	துன்னெருக் கார்வன்னி
பொன்றி னார்தலைக் கலனொடு பரிகலம்
	புலியுரி யுடையாடை
கொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர்நற்
	கொழுந்தேயென் றெழுவாரை
என்று மேத்துவார்க் கிடரிலை கேடிலை
	ஏதம்வந் தடையாவே.	2.109.6

கங்கைதிங்கள் வன்னிதுன் னெருக்கின்னொடு கூவிளம்
வெங்கண்நாகம் விரிசடையில் வைத்தவிகிர் தன்னிடஞ்
செங்கயல்பாய் புனலரிசில் சூழ்ந்ததில தைப்பதி
மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகார்மதி முத்தமே.	2.118.4

கலிபடு தண்கடல் நஞ்சமுண் டகறைக் கண்டனும்
புலியதள் பாம்பரைச் சுற்றினா னும்புன வாயிலில்
ஒலிதரு தண்புன லோடெருக் கும்மத மத்தமும்
மெலிதரு வெண்பிறை சூடிநின் றவிடை யூர்தியே.	3.11.5

தொடைமலி இதழியுந் துன்எ ருக்கொடு
புடைமலி சடைமுடி யடிகள் பொன்னகர்
படைமலி மழுவினர் பைங்கண் மூரிவெள்
விடைமலி கொடியணல் விசய மங்கையே.		3.17.4

பாடினார் அருமறை பனிமதி சடைமிசைச்
சூடினார் படுதலை துன்னெருக் கதனொடும்
நாடினார் இடுபலி நண்ணியோர் காலனைச்
சாடினார் வளநகர் சக்கரப் பள்ளியே.		3.27.2

தடவரை யெடுத்தவன் தருக்கிறத் தோளடர்
படவிரல் ஊன்றியே பரிந்தவற் கருள்செய்தான்
மடவரல் எருக்கொடு வன்னியும் மத்தமும்
இடமுடைச் சடையினன் ஏடகத் திறைவனே.	3.32.8

விடையுயர் வெல்கொடியான் அடிவிண்ணொடு மண்ணுமெல்லாம்
புடைபட ஆடவல்லான் மிகுபூதமார் பல்படையான்
தொடைநவில் கொன்றையொடு வன்னிதுன்னெருக் கும்மணிந்த
சடையவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.	3.62.6

கோளரவு கொன்றைநகு வெண்டலையெ ருக்குவன்னி கொக்கிறகொடும்
வாளரவு தண்சலம கட்குலவு செஞ்சடைவ ரத்திறைவனூர்
வேளரவு கொங்கையிள மங்கையர்கள் குங்குமம்வி ரைக்குமணமார்
தேளரவு தென்றல்தெரு வெங்கும்நிறை வொன்றிவரு தேவூரதுவே.	3.74.2 

தொடைத்தலை மலைத்திதழி துன்னிய எருக்கலரி வன்னிமுடியின்
சடைத்தலை மிலைச்சிய தபோதனன் எமாதிபயில் கின்றபதியாம்
படைத்தலை பிடித்துமற வாளரொடு வேடர்கள் பயின்றுகுழுமிக்
குடைத்தலை நதிப்படிய நின்றுபழி தீரநல்கு கோகரணமே.		3.79.5

காரணி வெள்ளை மதியஞ்சூடிக் கமழ்புன் சடைதன்மேற்
தாரணி கொன்றையுந் தண்ணெருக்குந் தழையந் நுழைவித்து
வாரணி கொங்கை நல்லாள்தனோடும் வலஞ்சுழி மேவியவர்
ஊரணி பெய்பலி கொண்டுகந்த உவகை அறியோமே.		3.106.2

வெள்ளெருக்கொடு தும்பை மிலைச்சியே வேறுமுன்செலத் தும்பை மிலைச்சியே
அள்ளிநீறது பூசுவ தாகமே யானமாசுண மூசுவ தாகமே
புள்ளியாடை யுடுப்பது கத்துமே போனவூழி யுடுப்பது கத்துமே
கள்ளுலாமலர்க் கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.	3.114.3

மடல்மலி கொன்றை துன்றுவா ளெருக்கும் வன்னியும் மத்தமுஞ் சடைமேற்
படலொலி திரைகள் மோதிய கங்கைத் தலைவனார் தம்மிடம் பகரில்
விடலொலி பரந்த வெண்டிரை முத்தம் இப்பிகள் கொணர்ந்துவெள் ளருவிக்
கடலொலி யோதம் மோதவந் தலைக்குங் கழுமல நகரென லாமே.	3.118.1

செந்துவர் வாயாள் சேலன கண்ணாள் சிவன்திரு நீற்றினை வளர்க்கும்
பந்தணை விரலாள் பாண்டிமா தேவி பணிசெயப் பாரிடை நிலவுஞ்
சந்தமார் தரளம் பாம்புநீர் மத்தந் தண்ணெருக் கம்மலர் வன்னி
அந்திவான் மதிசேர் சடைமுடி யண்ணல் ஆலவா யாவதும் இதுவே.	3.120.3

வண்டுலவு கொன்றை வளர்புன் 
	சடையானே என்கின் றாளால்
விண்டலர்ந்து நாறுவதோர் வெள்ளெருக்க 
	நாண்மலருண் டென்கின் றாளால்
உண்டயலே தோன்றுவதோர் உத்தரியப் 
	பட்டுடையன் என்கின் றாளாற்
கண்டயலே தோன்றுங் கழிப்பாலைச் 
	சேர்வானைக் கண்டாள் கொல்லோ.  4.6.2

மீனுடைத் தண்புனல் வீரட்ட 
	ரேநும்மை வேண்டுகின்ற
தியானுடைச் சில்குறை ஒன்றுள 
	தால்நறுந் தண்ணெருக்கின்
தேனுடைக் கொன்றைச் சடையுடைக் 
	கங்கைத் திரைதவழுங்
கூனுடைத் திங்கட் குழவியெப் 
	போதுங் குறிக்கொண்மினே.		4.105.4 

வெள்ளெ ருக்கர வம்விர வுஞ்சடைப் 
புள்ளி ருக்குவே ளூரரன் பொற்கழல் 
உள்ளி ருக்கு முணர்ச்சியில் லாதவர் 
நள்ளி ருப்பர் நரகக் குழியிலே.		5.79.1

எருக்கங் கண்ணிகொண் டிண்டை புனைந்திலர் 
பெருக்கக் கோவணம் பீறி யுடுத்திலர் 
தருக்கி னாற்சென்று தாழ்சடை யண்ணலை 
நெருக்கிக் காணலுற் றாரங் கிருவரே.		5.95.5

தோடேறும் மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்
	துன்னெருக்கின் வடம்வைத்தார் துவலை சிந்தப்
பாடேறு படுதிரைக ளெறிய வைத்தார்
	பனிமத்த மலர்வைத்தார் பாம்பும் வைத்தார்
சேடேறு திருநுதன்மேல் நாட்டம் வைத்தார்
	சிலைவைத்தார் மலைபெற்ற மகளை வைத்தார்
நாடேறு திருவடியென் றலைமேல் வைத்தார்
	நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.	6.14.3

புரையுடைய கரியுரிவைப் போர்வை யானைப்
	புரிசடைமேற் புனலடைத்த புனிதன் றன்னை
விரையுடைய வெள்ளெருக்கங் கண்ணி யானை
	வெண்ணீறு செம்மேனி விரவி னானை
வரையுடைய மகள்தவஞ்செய் மணாளன் றன்னை
	வருபிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னை
நரைவிடைநற் கொடியுடைய நாதன் றன்னை
	நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.	6.74.5

ஏடேறு மலர்க்கொன்றை அரவு தும்பை
	இளமதியம் எருக்குவா னிழிந்த கங்கைச்
சேடெறிந்த சடையானைத் தேவர் கோவைச்
	செம்பொன்மால் வரையானைச் சேர்ந்தார் சிந்தைக்
கேடிலியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
	கிறிபேசி மடவார்பெய் வளைகள் கொள்ளுங்
காடவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
	கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.	6.90.6

மூடாய முயலகன் மூக்கப் பாம்பு
	முடைநா றியவெண் டலைமொய்த்த பல்பேய்
பாடா வருபூதங் கள்பாய் புலித்தோல்
	பரிசொன் றறியா தனபா ரிடங்கள்
தோடார் மலர்க்கொன்றை யுந்துன் னெருக்குந்
	துணைமா மணிநா கம்அரைக் கசைத்தொன்
றாடா தனவேசெய் தீர்எம் பெருமான்
	அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.	7.2.03 

திரிவன மும்மதிலும் எரித்தான்இமை யோர்பெருமான்
அரியவன் *அட்டபுட்பம் அவைகொண்டடி போற்றிநல்ல
கரியவன் நான்முகனும் அடியும்முடி காண்பரிய
பரியவன் பாசுபதன் பழமண்ணிப் படிக் கரையே.	7.22.8

*அட்டபுட்பமாவனது புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம்,
நந்தியாவர்த்தம், நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை
என்னுமிவற்றின் புட்பங்களாம். இவை புலரி முதலிய
காலங்களிற் சாத்தும் அட்டபுட்பம். மற்றுமுள்ளவைகளைப்
புட்பவிதியிற் காண்க.

கருக்கநஞ் சமுதுண்ட கல்லாலன் கொல்லேற்றன்
தருக்கருக் கனைச்செற் றுகந்தான்றன் முடிமேல்
எருக்கநாண் மலரிண்டை யும்மத்த முஞ்சூடி
இருக்குமூர் எய்தமான் இடையா றிடைமருதே.		7.31.7

மத்தமாமலர் கொன்றைவன்னியுங்
	கங்கையாளொடு திங்களும்
மொய்த்தவெண்டலை கொக்கிறகொடு
	வெள்ளெருக்கமுஞ் சடையதாம்
பத்தர்சித்தர்கள் பாடியாடும்பைஞ்
	ஞீலியேன்என்று நிற்றிரால்
அத்தியீருரி போர்த்திரோசொல்லும்
	ஆரணீய விடங்கரே.	7.36.8

இறந்தார் என்பும் எருக்குஞ் சூடிப்
புறங்காட் டாடும் புனிதன் கோயில்
சிறந்தார் சுற்றந் திருவென் றின்ன
துறந்தார் சேருஞ் சோற்றுத் துறையே.	7.94.7

2. உலகின்மேல் வைத்துரைத்தல்
காய்சின வேலன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து
வீசின போதுள்ள மீனிழந் தார்வியன் தென்புலியூர்
ஈசன சாந்தும் எருக்கு மணிந்தோர் கிழிபிடித்துப்
பாய்ச்சின மாவென ஏறுவர் சீறூர்ப் பனைமடலே. 	8.தி.கோவை.74

கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும் போதஞ்சி நெஞ்சம்என்பாய்த்
தளர்ந்திங் கிருத்தல் தவிர்திகண் டாய்தள ராதுவந்தி
வளர்ந்துந்து கங்கையும் வானத் திடைவளர் கோட்டுவெள்ளை
இளந்திங் களும்எருக் கும்மிருக் குஞ்சென்னி ஈசனுக்கே.	11.காரைக்-3.1

(கட்டளைக் கலித்துறை)
இறைக்கோ குறைவில்லை உண்டிறை யேஎழி லாரெருக்கு
நறைக்கோ மளக்கொன்றை துன்றும் சடைமுடி நக்கர் சென்னிப்
பிறைக்கோர் பிளவும் பெறுவிளிக் கொண்டெம் பிரான்உடுக்கும்
குறைக்கோ வணம்ஒழிந் தாற்பின்னை ஏதுங் குறைவில்லையே.	11.கபில-2.4

(கட்டளைக் கலித்துறை)
இடைதரில் யாமொன் றுணர்த்துவ துண்டிமை யோர்சிமையத்
தடைதரு மூரிமந் தாரம் விராய்நதி வெண்ணிலவின்
தொடைதரு துண்டங் கிடக்கினுந் தொண்டர் ஒதுக்கியிட்ட
புடைதரு புல்லெருக் குஞ்செல்லு மோநின் புரிசடைக்கே.		11.இளம்பெரு-1.3

உடைதலையின் கோவை ஒருவடமோ கொங்கை
புடைமலிந்த வெள்ளெருக்கம் போதோ - சடைமுடிமேல்
முன்னநாள் பூத்த முகிழ்நிலவோ முக்கணா
இன்னநாள் கண்ட திவள்.		11.இளம்பெரு-1.8

பொருளாக யானிரந்தால் புல்லெருக்கின் போதும்
அருளான்மற் றல்லாதார் வேண்டின் - தெருளாத
பான்மறா மான்மறிக்கைப் பைங்கட் பகட்டுரியான்
தான்மறான் பைங்கொன்றைத் தார்.	11.இளம்பெரு-1.23

திங்கட் கொழுந்தொடு பொங்கரவு திளைக்கும்
கங்கைப் பேரியாற்றுக் கடுவரற் கலுழியின்
இதழியின் செம்பொன் இருகரை சிதறிப்
புதலெருக்கு மலர்த்தும் புரிபுன் சடையோன்
திருவருள் பெற்ற இருபிறப் பாளன்

11.நம்பி-6.(5)

Calotropis gigantea, (L.) W. T. Aiton <=> Crown Flower Tree - Erukku

 

Canopy

 

Crown Flower Canopy

Name Crown Flower Tree
Family Asclepiadaceae
Genus Calotropis
Species gigantea
Authority (L.) W. T. Aiton
Type evergreen
Common Family milkweed
Native Asia
Size Small

 

Reference

 

Wiki wikipedia
Links flowersofindia
ars-grin
theplantlist
Description This large shrub, which looks like a small tree, sports clusters of waxy flowers that are either white or lavender in color. Each flower consists of five pointed petals and a small, elegant "crown" rising from the center, which holds the stamens. The plant has oval, light green leaves and milky stem. The flowers last long, and in Thailand they are used in various floral arrangements. They were also supposed to be popular with the Hawaii queen Liliuokalani, who considered them as symbol of royalty and wore them strung into leis. In India, the plant is common in the compounds of temples. The fruit is a follicle and when dry, seed dispersal is by wind. The seeds with a parachute of hairs, is a delight for small children, who like to blow it and watch it float in the air. This plant plays host to a variety of insects and butterflies.
Where ESI hospital Road, II Stage, Domlur, Bangalore

 

Bark

 

bark

Color grey brown

 

Flowers

 

Erukku Flower

Color white and purple
Season Mar-Apr

 

Fruits

 

fruit

Shape follicle

 

Leaves

 

Erukku Leaf

Type ovate

 

Picture Carousel (29)

 

Erukku Flower Bud

Crown Flower Tree - Flower Bud

 

 

< PREV <
ஊமத்தம்
Table of Content > NEXT >
எலுமிச்சைமரம்

 

Related Content