சிவமயம்

சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய

கைத்தல மாலை
* * *

		ஒருவிகற்ப எதுகைக் கலிநிலைத்துறை

		முன்ன மாலய னிந்திர னமரர்கண் முனிவர் 
		பன்னு மாரணம் போற்றுதற் கரியநம் பரமன் 
		மின்னு லாவிய சடாடவிக் கடவுள்வீற் றிருப்ப 
		வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 			1 

		அன்ன மாயும்வெண் பிறைமருப் பேனமென் றாயு 
		முன்ன நான்முக னாரணன் றேடரு முதல்வன் 
		பின்னு வார்சடைப் பெருந்தகை பீடமாக் கோடற் 
		கென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 			2 

		தன்னை மேவிவந் தனைபுரி பவன்செய றடுப்பா 
		னுன்னி மேல்வரும் வெந்திறற் கூற்றினை யுதைத்த 
		மன்னு மாலயற் கரியவன் வந்துவீற் றிருப்ப 
		வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 			3 

		தன்னை நேர்வட காசிதென் கயிலைகே தார 
		மன்ன வார்வய லம்பல நமன்றமர் வராமற் 
		கன்னன் மாமதற் றெறும்விழிக் கடவுள்வீற் றிருப்ப 
		வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 			4 

		கன்ன லாரமு தினுஞ்சுவை தருவதாய்க் காண்பா 
		னுன்னு மாலயற் கரியதா மொருமலை யுச்சி 
		மன்னு மோர்பவப் பிணிமருந் தௌ¤துவந் திருப்ப 
		வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 			5 

		அன்னை யாகியின் னுயிர்க்குயி ராமரு ளாளன 
		பொன்னு மாரமு மணியுமா ரமுதமும் போல்வான் 
		றன்னை நாடொறுங் கண்டுகண் களிப்பதாச் சார்தற் 
		கென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 			6 

		அன்ன மூர்பவன் முதலியோ ரபயமென் றடைய 
		முன்ன மாலமுண் டவர்துயர் களைந்தருண் முதல்வன் 
		மின்னு மாமழு வலமுடை வீரன்வீற் றிருப்ப 
		வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 			7 

		பன்னு மாமறை தமிழினாற் பாடுநம் பிக்குப் 
		பொன்னு மாடையு மணிகளு மூர்தியும் பொருளு 
		மின்னு மீபவ னருளினான் மேவிவீற் றிருப்ப 
		வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 			8 

		பின்னும் வார்திரைக் கடலின்வீழ்ந் தமிழ்கையிற் பிடிப்ப 
		முன்ன மோர்புணை யகப்படு முறைமைபோற் பிறப்பி 
		னின்னல் கூர்பொழு தெம்பிரான் வந்துவீற் றிருப்ப 
		வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 			9 

		தன்னை யோர்பொழு திறைஞ்சுவான் கருதியித்தரைமேன் 
		மன்னு மாலயம் யாண்டுள தெனவல மராமற் 
		பொன்ன வாமலர்ச் சடையுடைப் புனிதன்வீற் றிருப்ப 
		வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 			10 

- கைத்தல மாலை முற்றிற்று -