|
Home > Scriptures & Stotras > Tamil
tirukkuRRAlak kuRavanjci, tirukkuRRAla mAlai and tirukkuRRAla UTAl
of tirikUTarAcappa kavirAyar
tirukkuRRAlappatikam, tirukkuRumpalAppatikam of tirunjAna campantar
(in Tamil Script, unicode format)
திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய
திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்
Etext Preparation: Ms. Sarala Sandirasegarane, Kanpur, India and
Mr. Srinivasa Varadarajan (aruLaracan) , St. Louis, MI, USA.
Proof Reading : Mr. Srinivasa Varadarajan (aruLaracan) , St. Louis, MI, USA
PDF and Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland
We are grateful to Mr. Periannan Chandrasekaran of Atlana, GA, USA for providing us with a complete
version of these works for etext preparation.
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding. To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view. .
In case of difficulties send an email request to
kalyan@geocities.com or
kumar@vt.edu
© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி -- மதிப்புரை
(ஆசிரியர் : இரசிகமணி சிதம்பரநாத முதலியார், 1937 )
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழில் அருமையான கவிகள் இயற்றப்பட்டன. திருக்குறள், திருவாசகம்,
காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி, குலசேகர ஆழ்வார் பாசுரங்கள், பொய்கையாழ்வார் பாடல்கள்,
கலிங்கத்துப்பரணி, கம்பராமாயணம் முதலானவை அனுபவிக்கத்தக்க கவிகள். அவைகளைக் கற்கும்போது
தமிழராகிய நமக்குத் தனித்த ஒரு பேருவுவகை பிறக்கிறது. அவைகளுக்குப் பிற்பாடு உண்டாயிருக்கிற நூல்கள் -
புராணங்கள், கோவைகள், அந்தாதிகள் எல்லாம் அனேகமாய்க் கவித்துவம் என்பது இல்லாத, எதுகை
மோனைகளைக் கணக்காக அமையும்படி செய்து தீர்த்த செய்யுள்களாகத்தான் முடிந்தன. பூர்வமான,
தமிழ்ப்பண்பு, கவிப்பண்பு, இதயப்பண்பு இவைகளை ஆசிரியர்கள் அறவே மறந்துவிட்டார்கள் அல்லது
ஒழித்துவிட்டார்கள் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. "ஏது தமிழ்க்கவி அஸ்தமித்தே போய்விட்டதோ?"
என்று அஞ்சவே தோன்றும்.
இந்த நிலைமையில் இருநூறு வருஷங்களுக்கு முன் திருநெல்வேலி ஜில்லாவில் மேலகரம் என்ற - சுமார்
ஐம்பது கூரைவீடுகள் உள்ள - சிறிய ஊரில் இருந்த புலவர் ஒருவர் தமிழ்ப்பாஷையின் இன்ப நிலைகளை
அனுபவத்தறிந்து அற்புதமான கவிகளைப்பாடி உதவினார் என்பது பாலைவனத்துக்கு மத்தியில் கற்பகக்காவைக்
கண்டக் கணக்குத்தான். புலவர் திரிகூடராஜப்ப(ன்) கவிராயர் பாடிய "குறவஞ்சி" தன்னுடைய புலமையைக்
காட்டிவிட வந்த சொற்கோவை அன்று; உண்மையாக இதயம் அனுபவித்த ரசங்களைத் தமிழுக்கே உரிய
இசையிலும் தாளத்திலும் வைத்துப் பாடிய பாடல்கள். வழக்கோடு ஒட்டிய தமிழில் எளிமைபடக் பாடியிருப்பதால்
தமிழராய்ப் பிறந்த யாருமே கவிரஸத்தை அனுபவிக்கும்படியாக இருக்கின்றன. தமிழ் நூல்களை முறையில்
கற்றுணர்ந்தவர்களுக்கோ கற்கக் கற்கத் தெவிட்டாத தேன்தான்.
நாற்பது ஐம்பது வருஷத்துக்கு முன்பு திருநெல்வேலி மதுரைச் சீமையில் தமிழ் கற்றவர் என்றால் குற்றாலக்
குறவஞ்சியைக் கல்லாதவர் இருக்கமாட்டார்கள். மந்தை நாடகத்திலும் பரதநாட்டியத்திலும் குறவஞ்சிப்
பாடலைப் பாடுவது சாமான்யம். எல்லாப்பள்ளிக்கூடங்களிலுமே பாடமாக வைத்துப் பாடும்படியாகக் கற்பிப்பார்கள்.
"தமிழ் கற்பதே அகௌரவம். குற்றாலக் குறவஞ்சியைப் படிப்பது அனுபவிப்பது என்பது எவ்வளவு கேவலம்!
ஆங்கிலக் கவிகளை வைத்துக்கொண்டு எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி, அனுபவித்தோம்" என்று மாத்திரம்
சொன்னால் போதும் அவர்களுக்குப் பெரிய பெரிய மதிப்பு.
பல பதிப்புகள் வௌிவந்தும், குறவஞ்சியைத் தமிழுலகம் கவனித்த பாடாக இல்லை. காரணம், மேலே
சொன்ன ஆங்கில மோகம் ஒன்று. மற்றது, பண்டைத்தமிழ். பண்டைத்தமிழ் என்று வழக்கொழிந்த பாஷையில்
எழுதிய நூல்களின்மேல் ஏற்பட்ட மோகம். தற்போது இந்த மோகம் எல்லாம் கொஞ்சம் தௌிந்து வருகிறது.
உண்மையான தமிழ்க்கவியை அனுபவிக்கவேண்டும் என்ற அவா தமிழர் பலருக்கும் உண்டாகி வருகிறது.
குறவஞ்சி ஆசிரியர் காலத்தில் சாமான்ய மக்களுக்கும் ஜமீன்தார்களுக்கும் வின்னியாசமான செய்யுள்களிலும்
கற்பனைகளிலும் மற்றும் போலியான விகடங்களிலுமே விருப்பம் இருந்தது. ஆகவே அவர்களுடைய
விருப்பத்திற்கிணங்கியோ அல்லது மற்றப்புலவர்களோடு ஒட்டிப்போகும் காரணத்தினாலோ சிற்சில அவசியம்
அல்லாத விஷயங்களும் கவிப்போக்குகளும் அங்கொன்று இங்கொன்று காணக்கிடக்கின்றன. அவைகளை
ஒதுக்கிவிட்டு நூலைப்பார்ப்போமானால் ரொம்ப ரொம்ப வியக்கக்கூடிய தாயும் தெவிட்டாத ரஸம்
உள்ளதாகவுமே இருக்கக்காண்போம். ஏதோ பழம் புத்தகங்களையும் நிகண்டுகளையும் வாசித்துவிட்டு
அவைகளையுமே அப்படியுமிப்படியாக புரட்டுகிற காரியம் அல்ல. இயற்கையை - புற இயற்கையையும்
மக்களின் உள இயற்கையையும் தன் இதயத்தோடு ஒட்டவைத்து அனுபவித்தவர்
ஓடக்காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
இது புலவர் திருக்குற்றாலத்தைக் கண்டு பாடியதல்லவா! திணையிலக்கணத்தை முன்னால் வைத்துக்
கொண்டு எழுதிய வெறும் சம்பபிரதாயச் செய்யுளா? மேலும் உண்மையான பழந்தமிழ்க் கவிகளை இதய
தத்துவம் புலப்படும்படியாக ஊடுருவிக் கற்றிருக்கிறார்.
வாகனைக்கண் டுருகுதையோ - ஒரு
மயக்கமதாய் வருகுதையோ
மோகம்என்பது இதுதானோ - இதை
முன்னமே நான் அறியேன்! ஓ!
ஆகம் எல்லாம் பசந்தேனே - பெற்ற
அன்னைசொல்லும் கசந்தேனே
தாகம் அன்றிப் பூணேனே - கையில்
சரிவளையும் காணேனே.
காதல் துறையில் வெள்வளையைக் காணோமே! காணோமே! என்று பாடியதெல்லாம் பார்த்துச்
சடைத்துப் போயிருக்கிறோம். ஆனால் நம்முடைய ஆசிரியர் அதைக் கையாளுகிற விதத்தில் நாயகி
கைவளையல்களை உண்மையில் காணாமல் போக்கிவிட்டு அங்குமிங்குமாகத் திகைத்துப் பார்க்கிற
சாயல் நம் கண் முன்னால் வந்துவிடுகிறது.
குறத்தி வருகிறது, குறி சொல்கிறது, வேடன் வருகிறது, பறவைகள் மேய்கிறது முதலான பாடல்களைப்
பார்த்தால் கவியெல்லாம், காட்டிலும் மலையிலும் தான் சஞ்சரிக்கிறது என்று சொல்லத் தோன்றும்.
எத்தனை தடவை படித்தாலும் அந்தப் பாடல்கள் புதிதாகவே தோன்றும்.
சமயபக்தி என்றால் அது சம்பந்தமாக மூர்த்தியையும் ஸ்தலத்தையும் அனுபவிக்கிறதும் கூடத்தான்.
சுற்றாத ஊர்தோறும் சுற்றவேண்டாம் புலவீர்
குற்றாலம் என்றொருகால் கூறினால்
போதும், என்று அழகாக அனுபவித்துப் பாடுகிறார். இயற்கை அழகையும், கடவுள் தத்துவத்தையும்
ஒன்றாய்ச் சேர்த்து அனுபவித்து விடுகிறார். சிருஷ்டி தத்துவங்களில் உள்ள உண்மைகளை தற்காலத்து
அறிவியல் நிபுணர்களைப்போல நேர்முகமாகக் கண்டு அனுபவித்துப் பாடுகிறார். ஒரே ஒரு தத்துவந்தான் சகல பகுதிகளையும் ஒழுங்கான முறையில் இயங்கச் செய்கிறது என்பது தற்காலத்து அறிவியல் முடிபு.
அதை இருநூறு வருஷங்களுக்கு முன் நமது மேலகரம் கவிராஜர்
சாட்டிநிற்கும் அண்டம் எலாம் சாட்டையிலாப் பம்பரம்போல்
ஆட்டுவிக்கும் குற்றாலத் தண்ணலார்
என்று உடல் புளகிக்கப் பாடுகிறார்.
இப்படிச் சிறிய விஷயம் பெரிய விஷயம் எல்லாவற்றையும் பற்றிப் பாடுகிறார். ஆனால் ஒன்று:
அவைகளுக்குள் எல்லாம் ஒரு ஹாஸ்ய ரசமும் ஒரு பக்தி ரஸமும் பின்னிக்கொண்டு ஓடுவதைப் பார்க்கலாம்.
இதைப் பார்த்து அனுபவிக்கக் கொடுத்து வைத்தவர்கள் தமிழர்கள்தாம்.
(ரசிகமணி, 1937)
திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி
தற்சிறப்புப்பாயிரம்
விநாயகர் துதி
பூமலி யிதழி மாலை புனைந்தகுற் றாலத் தீசர்
கோமலர்ப் பாதம் போற்றிக் குறவஞ்சித் தமிழைப் பாட
மாமதத் தருவி பாயு மலையென வளர்ந்த மேனிக்
காமலி தருப்போ லைந்து கைவலான் காவ லானே. | ...1
|
முருகக்கடவுள்
பன்னிருகை வேல்வாங்கப் பதினொருவர் படைதாங்கப் பத்துத் திக்கும்
நன்னவவீ ரரும்புகழ மலைகளெட்டும் கடலேழு நாடி யாடிப்
பொன்னின்முடி ஆறேந்தி அஞ்சுதலை யெனக்கொழித்துப் புயநால் மூன்றாய்த்
தன்னிருதாள் தருமொருவன் குற்றாலக் குறவஞ்சித் தமிழ்தந் தானே. | ...2
|
திரிகூடநாதர்
கிளைகளாய்க் கிளைத்தபல கொப்பெலாஞ் சதர்வேதம் கிளைக ளீன்ற
களையெலாஞ் சிவலிங்கம் கனியெலாம் சிவலிங்கம் கனிக ளீன்ற
சுளையெலாஞ் சிவலிங்கம் வித்தெலாஞ் சிவலிங்க சொரூ பமாக
விளையுமொரு குறும்பலவின் முளைத்தெழுந்த சிவக்கொழுந்தை வேண்டு வோமே. | ...3
|
குழல்வாய்மொழியம்மை
தவளமதி தவழ்குடுமிப் பனிவரையின் முளைத்தெழுந்து தகைசேர் முக்கட்
பவளமலை தனிலாசை படர்ந்தேறிக் கொழுந்துவிட்டுப் பருவ மாகி
அவிழுநறைப் பூங்கடப்பந் தாமரையு மீன்றொருகோட் டாம்ப லீன்று
குவலயம்பூத் தருட்கொடியைக் கோதைகுழல் வாய்மொழியைக் கூறு வோமே. | ...4
|
சைவசமயாச்சாரியார் நால்வருள் மூவர்
தலையிலே யாறிருக்க மாமிக் காகத்
தாங்குகட லேழழைத்த திருக்குற் றாலர்
சிலையிலே தடித்ததடம் புயத்தை வாழ்த்திச்
செழித்தகுற வஞ்சிநா டகத்தைப் பாட
அலையிலே மலைமிதக்க ஏறி னானும்
அத்தியிலே பூவையந்நா ளழைப்பித் தானும்
கலையிலே கிடைத்தபொரு ளாற்றிற் போட்டுக்
கனகுளத்தில் எடுத்தானுங் காப்ப தாமே. ...5
| |
அகத்தியமுனிவர், மாணிக்கவாசக சுவாமிகள்
நித்தர்திரி கூடலிங்கர் குறவஞ்சி நாடகத்தை நிகழ்த்த வேண்டி
முத்தர்திரு மேனியெல்லா முருகவே தமிழுரைத்த முனியைப் பாடி
இத்தனுவி லாத்துமம்விட் டிறக்குநாட்சி லேட்டுமம்வந் தேறா வண்ணம்
பித்தனடித் துணைசேர்ந்த வாதவூ ரானடிகள் பேணு வோமே. | ...6
|
சரசுவதி
அடியிணை மலருஞ் செவ்வா யாம்பலுஞ் சிவப்பினாளை
நெடியபூங் குழலு மைக்க ணீலமுங் கறுப்பினாளைப்
படிவமும் புகழுஞ் செங்கைப் படிகம்போல் வெளுப்பாம்ஞானக்
கொடிதனைத் திருக்குற்றாலக் குறவஞ்சிக் கியம்புவோமே. | ...7
|
நூற்பயன்
சிலைபெரிய வேடனுக்கும் நரிக்கும் வேதச்
செல்வருக்குந் தேவருக்கு மிரங்கி மேனாள்
கொலைகளவு கட்காமங் குருத்து ரோகங்
கொடியபஞ்ச பாதகமும் தீர்த்த தாலே
நிலவணிவார் குற்றாலம் நினைத்த பேர்கள்
நினைத்தவரம் பெறுவரது நினைக்க வேண்டிப்
பலவளஞ்சேர் குறவஞ்சி நாட கத்தைப்
படிப்பவர்க்குங் கேட்பவர்க்கும் பலனுண் டாமே. ...8
| |
அவையடக்கம்
தாரினை விருப்ப மாகத் தலைதனில் முடிக்குந் தோறும்
நாரினைப் பொல்லா தென்றே ஞாலத்தோர் தள்ளு வாரோ?
சீரிய தமிழ்மா லைக்குட் செல்வர்குற் றாலத் தீசர்
பேரினா லெனது சொல்லைப் பெரியவர் தள்ளார் தாமே | ...9
|
நூல்
கட்டியக்காரன் வரவு
தேர்கொண்ட வசந்த வீதிச் செல்வர்குற் றாலத் தீசர்
பார்கொண்ட விடையி லேறும் பவனியெச் சரிக்கை கூற
நேர்கொண்ட புரிநூன் மார்பும் நெடியகைப் பிரம்பு மாகக்
கார்கொண்ட முகிலே றென்னக் கட்டியக் காரன் வந்தான் | ...1
|
இராகம் - தோடி, தாளம் - சாப்பு
கண்ணிகள்
(1) பூமேவு மனுவேந்தர் தேவேந்தர் முதலோரைப்
புரந்திடுஞ்செங் கோலான் பிரம்புடையான்
(2) மாமேருச் சிலையாளர் வரதர்குற் றாலநாதர்
வாசற் கட்டியக்காரன் வந்தனனே. ....2
| |
திரிகூடநாதர் பவனி வருதலைக் கட்டியக்காரன் கூறுதல்
விருத்தம்
மூக்கெழுந்த முத்துடையா ரணிவகுக்கும்
நன்னகர மூதூர் வீதி
வாக்கெழுந்த குறுமுனிக்கா மறியெழுந்த
கரங்காட்டும் வள்ள லார்சீர்த்
தேக்கெழுந்த மறைநான்குஞ் சிலம்பெழுந்த
பாதர்விடைச் சிலம்பி லேறி
மேக்கெழுந்த மதிச்சூடிக் கிழக்கெழுந்த
ஞாயிறுபோல் மேவி னாரே ...3
| |
இராகம் - பந்துவராளி, தாளம் - சாப்பு
பல்லவி
பவனி வந்தனரே மழவிடைப் பவனி வந்தனரே
அநுபல்லவி
அவனிபோற்றிய குறும்பலாவுறை மவுனநாயகர் இளமைநாயகர்
சிவனுமாயரி அயனுமானவர் கவனமால்விடை அதனிலேறியே (பவனி)
சரணங்கள்
(1) அண்டர் கூட்டமு முனிவர் கூட்டமும்
அசுரர் கூட்டமு மனித ராகிய
தொண்டர் கூட்டமும் இமைப்பி லாரெனச்
சூழ்ந்து தனித்தனி மயங்கவே
பண்டை நரரிவர் தேவ ரிவரெனப்
பகுத்து நிறுவிய வேளை தொறுந்தொறும்
மண்ட லீகரை நந்தி பிரம்படி
மகுட கோடியிற் புடைக்கவே (பவனி)
(2) தடுப்ப தொருகரம் கொடுப்ப தொருகரம்
தரித்த சுடர்மழு விரித்த தொருகரம்
எடுத்த சிறுமறி பிடித்த தொருகரம்
இலங்கப் பணியணி துலங்கவே
அடுத்த வொருபுலி கொடுத்த சோமனும்
ஆனை கொடுத்தவி தானச் சேலையும்
உடுத்த திருமருங் கசைய மலரயன்
கொடுத்த பரிகல மிசையவே. (பவனி)
(3) தொடரு மொருபெருச் சாளி யேறிய
தோன்றற் செயப்படை தாங்கவே
அடல்கு லாவிய தோகை வாகனத்
தரசு வேல்வலம் வாங்கவே
படலை மார்பினிற் கொன்றை மாலிகை
பதக்க மணியொளி தேங்கவே
உடைய நாயகன் வரவு கண்டுகண்
டுலகெலாந் தழைத்தோங்கவே. (பவனி)
(4) இடியின் முழக்கொடு படரு முகிலென
யானை மேற்கன பேரிமு ழக்கமும்
துடியின் முழக்கமும் பரந்து திசைக்கரி
துதிக்கை யாற்செவி புதைக்கவே
அடியர் முழக்கிய திருப்ப லாண்டிசை
அடைத்த செவிகளும் திறக்க மூவர்கள்
வடிசெய் தமிழ்த்திரு முறைக ளொருபுறம்
மறைக ளொருபுறம் வழங்கவே. (பவனி)
(5) கனக தம்புரு கின்ன ரங்களி
யாசை வீணை மிழற்றவே
அனக திருமுத்தின் சிவிகை கவிகைபொன்
ஆல வட்டம் நிழற்றவே
வனிதை மார்பல குஞ்சம் சாமரை
வரிசை விசிறி சுழற்றவே
தனத னிந்திரன் வருணன் முதலிய
சகல தேவரும் வழுத்தவே. (பவனி)
(6) சைவர் மேலிடச் சமணர் கீழிடச்
சகல சமயமு மேற்கவே
கைவலா ழியங் கருணை மாலொடு
கமலத் தோன்புடை காக்கவே
ஐவர் நாயகன் வந்த னன்பல
அமரர் நாயகன் வந்தனன்
தெய்வ நாயகன் வந்த னன்எனச்
சின்ன மெடுத்தெடுத் தார்க்கவே (பவனி)
(7) சேனைப் பெருக்கமுந் தானைப் பெருக்கமுந்
தேரின் பெருக்கமுந் தாரின் பெருக்கமும்
ஆனைப் பெருக்கமுங் குதிரைப் பெருக்கமும்
அவனி முழுதினு நெருங்கவே
மோனைக் கொடிகளின் காடு நெடுவௌி
மூடி யடங்கலும் ஓடி யிருண்டபின்
ஏனைச் சுடர்விரி இடப கேதன
மெழுந்து திசைதிசை விளங்கவே (பவனி)
(8) கொத்து மலர்க்குழல் தெய்வ மங்கையர்
குரவை பரவையை நெருக்கவே
ஒத்த திருச்செவி யிருவர் பாடல்க
ளுலக மேழையு முருக்கவே
மத்த ளம்புயல் போல்மு ழங்கிட
மயில னார்நடம் பெருக்கவே
சத்தி பயிரவி கௌரி குழல்மொழித்
தைய லாளிட மிருக்கவே (பவனி) ...4
| |
பவனி காணப் பெண்கள் வருதல்
விருத்தம்
பாலேறும் விடையில் திரிகூடப் பெருமானார் பவனி காணக்
காலேறுங் காமனுக்காக் கையேறும் படைப்பவுஞ்சாய்க் கன்னி மார்கள்
சேலேறுங் கலகவிழிக் கணைதீட்டிப் புருவநெடுஞ் சிலைகட் கோட்டி
மாலேறப் பொருதுமென்று மணிச்சிலம்பு முரசறைய வருகின் றாரே. | ...5
|
பவனி காண வந்த பெண்கள் சொல்லுதல்
இராகம் - புன்னாகவராளி, தாளம் - சாப்பு
கண்ணிகள்
(1) ஒருமானைப் பிடித்துவந்த பெருமானைத் தொடர்ந்துவரும்
ஒருகோடி மான்கள்போல் வருகோடி மடவார்
(2) புரிநூலின் மார்பனிவன் அயனென்பார் அயனாகில்
பொங்கரவ மேதுதனிச் சங்கமேது என்பார்
(3) விரிகருணை மாலென்பார் மாலாகில் விழியின்மேல்
விழியுண்டோ முடியின்மேல் முடியுண்டோ என்பார்
(4) இருபாலு நான்முகனுந் திருமாலும் வருகையால்
ஈசனிவன் திரிகூட ராசனே என்பார்.
(5) ஒருகைவளை பூண்டபெண்கள் ஒருகைவளை பூணமறந்
தோடுவார் நகைப்பவரை நாடுவார் கவிழ்வார்
(6) இருதனத்து ரவிக்கைதனை அரையிலுடை தொடுவார்பின்
இந்தவுடை ரவிக்கையெனச் சந்தமுலைக் கிடுவார்.
(7) கருதுமனம் புறம்போக ஒருகண்ணுக்கு மையெடுத்த
கையுமா ஒருகணிட்ட மையுமாய் வருவார்
(8) நிருபனிவன் நன்னகரத் தெருவிலே நெடுநேரம்
நில்லானோ ஒருவசனஞ் சொல்லானோ என்பார்
(9) மெய்வளையு மறுவுடைய தெய்வநா யகன்முடித்த
வெண்மதியும் விளங்குதெங்கள் பெண்மதிபோல் என்பார்
(10) பைவளைத்துக் கிடக்குமிவன் மெய்வளையும் பாம்புகட்குப்
பசியாதோ தென்றலைத்தான் புசியாதோ என்பார்
(11) இவ்வளைக்கை தோளழுந்த இவன்மார்பி லழுந்தாமல்
என்னமுலை நமக்கெழுந்த வன்னமுலை என்பார்
(12) மைவளையும் குழல்சோரக் கைவளைகொண் டானிதென்ன
மாயமோ சடைதரித்த ஞாயமோ என்பார் ...6
| |
வசந்தவல்லி வருதல்
விருத்தம்
நன்னகர்ப் பெருமான் முன்போய் நாணமும் கலையுந்தோற்ற
கன்னியர் சநுப்போற்காட்டிக் காமவேள் கலகமூட்டிப்
பொன்னணித் திலதந் தீட்டிப் பூமலர் மாலைசூட்டி
வன்னமோ கினியைக்காட்டி வசந்தமோ கினிவந்தாளே. | ..7
|
இராகம் - கல்யாணி, தாளம் - ஆதி
கண்ணிகள்
(1) வங்காரப் பூஷணம் பூட்டித் திலதந்தீட்டி
மாரனைக்கண் ணாலே மருட்டிச்
சிங்கார மோகனப் பெண்ணாள் வசந்தவல்லி
தெய்வரம்பை போலவே வந்தாள்
(2) கண்ணுக்குக் கண்ணிணை சொல்லத் திரிகூடக்
கண்ணுதலைப் பார்வையால் வெல்லப்
பெண்ணுக்குப் பெண்ம யங்கவே வசந்தவல்லி
பேடையன்னம் போலவே வந்தாள்.
(3) கையாரச் சூடகமிட்டு மின்னாரை வெல்லக்
கண்ணிலொரு நாடகம் இட்டு
ஒய்யார மாக நடந்து வசந்தவல்லி
ஓவியம் போலவே வந்தாள்
(4) சல்லாப மாது லீலர் குற்றால நாதர்
சங்கநெடு வீதிதனிலே
உல்லாச மாது ரதிபோல் வசந்தவல்லி
உருவசியும் நாணவே வந்தாள். ...8
| |
இராகம் - பைரவி, தாளம் - சாப்பு
கண்ணிகள்
(1) இருண்ட மேகஞ்சுற்றிச் சுருண்டு சுழியெறியுங்
கொண்டையாள் - குழை
ஏறி யாடிநெஞ்சைச் சூறையாடும் விழிக்
கெண்டையாள்
திருந்து பூமுருக்கி னரும்பு போலிருக்கும்
இதழினாள் - வரிச்
சிலையைப் போல்வளைந்து பிறையைப் போலிலங்கு
நுதலினாள்.
(2) அரம்பை தேசவில்லும் விரும்பி யாசைசொல்லும்
புருவத்தாள் - பிறர்
அறிவை மயக்குமொரு கருவ மிருக்குமங்கைப்
பருவத்தாள்
கரும்பு போலினித்து மருந்துபோல் வடித்த
சொல்லினாள் - கடல்
கத்துந் திரைகொழித்த முத்து நிரை பதித்த
பல்லினாள்.
(3) பல்லி னழகையெட்டிப் பார்க்கு மூக்கிலொரு
முத்தினாள் - மதி
பழகும் வடிவுதங்கி அழகு குடிகொளு
முகத்தினாள்
வில்லுப் பணிபுனைந்து வல்லிக் கமுகைவென்ற
கழுத்தினாள் - சகம்
விலையிட் டெழுதியின்ப நிலையிட் டெழுதுந்தொய்யில்
எழுத்தினாள்.
(4) கல்லுப் பதித்ததங்கச் செல்லக் கடகமிட்ட
செங்கையாள் - எங்கும்
கச்சுக் கிடக்கினும்தித் திச்சுக்கிடக்குமிரு
கொங்கையாள்
ஒல்லுங் கருத்தர்மனக் கல்லுஞ் சுழிக்குமெழில்
உந்தியாள் - மீதில்
ஒழுங்கு கொண்டுள்ளத்தை விழுங்கு சிறியரோம
பந்தியாள்.
(5) துடிக்கு ளடங்கியொரு பிடிக்கு ளடங்குஞ்சின்ன
இடையினாள் - காமத்
துட்ட னரண்மனைக்குக் கட்டுங் கதலிவாழைத்
தொடையினாள்
அடுக்கு வன்னச்சேலை எடுத்து நெறிபிடித்த
உடையினாள் - மட
அன்ன நடையிலொரு சின்ன நடைபயிலும்
நடையினாள்.
(6) வெடித்த கடலமுதை எடுத்து வடிவு செய்த
மேனியாள் - ஒரு
வீமப் பாகம் பெற்ற காமப் பாலுக்கொத்த
சீனியாள்
பிடித்த சுகந்தவல்லிக் கொடிபோல் வசந்தவல்லி
பெருக்கமே - சத்தி
பீட வாசர்திரி கூட ராசர்சித்தம்
உருக்குமே. ...9
| |
வசந்தவல்லி பந்தடித்தல்
விருத்தம்
வித்தகர் திரிகூ டத்தில் வௌிவந்த வசந்தவல்லி
தத்துறு விளையாட்டாலோ தடமுலைப் பிணைப்பினாலோ
நத்தணி கரங்கள் சேப்ப நாலடி முன்னே ஓங்கிப்
பத்தடி பின்னே வாங்கிப் பந்தடி பயில்கின் றாளே. | ...10
|
இராகம் - பைரவி, தாளம் - சாப்பு
கண்ணிகள்
(1) செங்கையில் வண்டு கலின்கலி னென்று செயஞ்செயம்
என்றாட - இடை
சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை
கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றன மென்று குழைந்து
குழைந்தாட - மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே.
(2) பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு
புரண்டாடக் - குழல்
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன்சிலை
வண்டோட - இனி
இங்கிது கண்டுல கென்படு மென்படு மென்றிடை
திண்டாட - மலர்ப்
பங்கய மங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே.
(3) சூடக முன்கையில் வால்வளை கண்டிரு தோள்வளை
நின்றாடப் - புனை
பாடக முஞ்சிறு பாதமு மங்கொரு பாவனை
கொண்டாட - நய
நாடக மாடிய தோகை மயிலென நன்னகர்
வீதியிலே - அணி
ஆடக வல்லி வசந்த ஒய்யாரி
அடர்ந்துபந் தாடினளே.
(4) இந்திரை யோயிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ
மோகினியோ - மன
முந்திய தோவிழி முந்திய தோகர முந்திய
தோவெனவே - உயர்
சந்திர சூடர் குறும்பல வீசுரர் சங்கணி
வீதியிலே - மணிப்
பைந்தொடி நாரி வசந்தவொய் யாரிபொற்
பந்துகொண் டாடினளே. ...11
| |
விருத்தம்
கொந்தடிப்பூங் குழல்சரிய நன்னகரில் வசந்தவல்லி கொடிய காமன்
முந்தடிபிந் தடியிடைபோய் மூன்றடிநா லடிநடந்து முடுகி மாதர்
சந்தடியில் திருகியிட சாரிவல வாரிசுற்றிச் சகிமார் சூழப்
பந்தடிக்கும் பாவனையைப் பார்க்கஅயன் ஆயிரங்கண் படைத்தி லானே. | ...12
|
தரு
இராகம் - காம்போதி, ஆதி - தாளம்
பல்லவி
பந்தடித்தனளே வசந்த சுந்தரி விந்தை யாகவே (பந்)
சரணங்கள்
(1) மந்தர முலைக ளேச லாட
மகரக் குழைக ளூச லாடச்
சுந்தர விழிகள் பூச லாடத்
தொங்கத் தொங்கத் தொங்கத் தொம்மெனப் (பந்)
(2) பொன்னி னொளிவில் வந்துதாவிய
மின்னி னொளிவு போலவே
சொன்ன யத்தினை நாடிநாடித்
தோழியருடன் கூடிக் கூடி
நன்ன கர்த்திரி கூடம் பாடி
நகுர்தத் திகுர்தத் தகுர்தத் தொம்மெனப் (பந்) ...13
| |
வசந்தவல்லி திரிகூடநாதரைக் காணுதல்
விருத்தம்
வருசங்க வீதி தன்னில்
வசந்தபூங் கோதை காலில்
இருபந்து குதிகொண் டாட
இருபந்து முலைகொண் டாட
ஒருபந்து கைகொண் டாட
ஒருசெப்பி லைந்து பந்துந்
தெரிகொண்டு வித்தை ஆடுஞ்
சித்தரை யெதிர் கொண்டாளே ...14
| |
இராகம் - அடாணா, தாளம் - ரூபகம்
பல்லவி
இந்தச் சித்த ராரோ வெகு
விந்தைக் காரராக விடையி லேறி வந்தார் (இந்த)
சரணங்கள்
(1) நாகம் புயத்திற் கட்டி நஞ்சு கழுத்திற்கட்டிக்
காக மணுகாம லெங்குங் காடு கட்டிப்
பாகந் தனிலொரு பெண் பச்சைக் கிளிபோல் வைத்து
மோகம் பெற வொருபெண் முடியில் வைத்தார். (இந்த)
(2) மெய்யிற் சிவப்பழகும் கையில் மழுவழகும்
மையார் விழியார் கண்டால் மயங்காரோ
செய்ய சடையின் மேலே திங்கட் கொழுந்திருக்கப்
பையை விரிக்கு தம்மா பாம்பு சும்மா. (இந்த)
(3) அருட்கண் பார்வை யாலென் னங்கம் தங்கமாக
உருக்கிப் போட்டார் கண்ட உடனேதான்
பெருக்கம் பார்க்கில் எங்கள் திருக்குற் றாலர் போலே
இருக்கு திவர்செய் மாயம் ஒருக்காலே (இந்த) | ...15
|
தோழியர் சொல்கேட்டு வசந்தவல்லி மோகங்கொள்ளுதல்
விருத்தம்
திங்களை முடித்தார் கண்டாய்
திரிகூடச் செல்வர் கண்டாய்
எங்குள சித்துக் கெல்லாம்
இறையவ ரிவரே யென்று
நங்கைமார் பலருங் கூறு
நன்மொழித் தேறல் மாந்தி
மங்கையாம் வசந்த வல்லி
மனங்கொண்டாள்; மயல்கொண் டாளே. ...16
| |
இராகம் - புன்னாகவராளி, தாளம் - ரூபகம்
கண்ணிகள்
(1) முனிபரவும் இனியானோ (வேத) முழுப்பலவின் கனிதானோ
கனியில் வைத்த செந்தேனோ (பெண்கள்) கருத்துருக்க வந்தானோ
தினகரன்போற் சிவப்பழகும் (அவன்) திருமிடற்றில் கறுப்பழகும்
பனகமணி இருகாதும் (கண்டால்) பாவையுந்தா னுருகாதோ.
(2) வாகனைக்கண் டுருகுதையோ (ஒரு) மயக்கமதாய் வருகுதையோ
மோகமென்ப திதுதானோ (இதை) முன்னமேநா னறிவேனோ
ஆகமெல்லாம் பசந்தேனோ (பெற்ற) அன்னைசொல்லுங் கசந்தேனே
தாகமின்றிப் பூணேனே (கையில்) சரிவளையுங் காணேனே. | ...17
|
தோழியர் புலம்பல்
விருத்தம்
நடைகண்டா லன்னம் தோற்கு
நன்னகர் வசந்த வல்லி
விடைகொண்டா னெதிர்போய்ச் சங்க
வீதியிற் சங்கம் தோற்றாள்
சடைகொண்டா னுடைதான் கொண்டு
தன்னுடை கொடுத்தா ளையன்
உடைகொண்ட வழக்குத் தானோ
ஊர்கின்ற தேர்கொண் டாளே. ...18
| |
இராகம் - தோடி, தாளம் - சாப்பு
கண்ணிகள்
(1) ஆசைகொண்டு பாரில் வீழ்ந்தாள் நேசமா னென்பார் விளை
யாடாள் பாடாள் வாடா மாலை சூடாள் காணெண்பார்
பேசி டாத மோச மென்ன மோசமோ என்பார் காமப்
பேயோ என்பார் பிச்சோ என்பார் மாயமோ என்பார்.
(2) ஐயோ என்ன செய்வ மென்பார் தெய்வமே களைப்
பாச்சோ என்பார் மூச்சே தென்பார் பேச்சே தோவென்பார்
கையிற் றிரு நீறெடுப்பார் தையலா ரெல்லாஞ் சூலக்
கையா திரி கூடநாதா கண்பாரா யென்பார். ...19
| |
வசந்தவல்லியைப் பாங்கியர் உபசரித்தல்
விருத்தம்
வானவர் திருக்குற் றாலர்
மையலால் வசந்த வல்லி
தானுடல் சோர்ந்தா ளென்று
தமனிய மாடஞ் சேர்த்து
மேனியா ரழகு தோற்ற
மின்னனார் விழுந்த பேரைக்
கூனைகொண் டமிழ்த்து வார்போற்
குளிர்ச்சியால் வெதுப்புவாரே ...20
| |
இராகம் - கல்யாணி, தாளம் - சாப்பு
கண்ணிகள்
(1) முருகு சந்தனக் குழம்பு பூசுவார் விரகத்தீயை
மூட்டி மூட்டி விசிறி வீசுவார்
கருகு தேயுட லுருகு தேயென்பார் விரித்த பூவும்
கரியுதே முத்தம் பொரியு தேயென்பார்.
(2) அருகி லிருந்து கதைகள் நடத்துவார் எடுத்து மாதர்
அணைத்து வாழைக் குருத்திற் கிடத்துவார்
பெருகு நன்னகர்க் குறும்ப லாவினார் வசந்த மோகினி
பெருநி லாவி னொடுக லாவினாள். ...21
| |
வசந்தவல்லி சந்திரனை நிந்தித்தல்
விருத்தம்
பெண்ணிலே குழல்மொழிக்கோர் பங்குகொடுத் தவர்கொடுத்த
பிரமை யாலே
மண்ணிலே மதிமயங்கிக் கிடக்கின்றே னுனக்குமதி
மயக்கந் தானோ
கண்ணிலே நெருப்பை வைத்துக் காந்துவா ருடன்கூடிக்
காந்திக் காந்தி
விண்ணிலே நெருப்பை வைத்தாய் தண்ணிலாக் கொடும்பாவி
வெண்ணி லாவே. ...22
| |
இராகம் - வராளி, தாளம் - ஆதி
கண்ணிகள்
(1) தண்ணமு துடன்பிறந்தாய் வெண்ணிலாவே அந்தத்
தண்ணளியை ஏன்மறந்தாய் வெண்ணிலாவே
பெண்ணுடன் பிறந்ததுண்டே வெண்ணிலாவே என்றன்
பெண்மைகண்டும் காயலாமோ வெண்ணிலாவே.
(2) விண்ணிலே பிறந்ததற்கோ வெண்ணிலாவே எரு
விட்டுநா னெறிந்ததற்கோ வெண்ணிலாவே
கண்ணில்விழி யாதவர்போல் வெண்ணிலாவே மெத்தக்
காந்தியாட்ட மாடுகிறாய் வெண்ணிலாவே.
(3) ஆகடியஞ் செய்தல்லவோ வெண்ணிலாவே நீதான்
ஆட்கடியன் போற்குறைந்தாய் வெண்ணிலாவே
மோகன்வரக் காணேனென்றால் வெண்ணிலாவே இந்த
வேகமுனக் கானதென்ன வெண்ணிலாவே.
(4) நாகமென்றே யெண்ணவேண்டாம் வெண்ணிலாவே இது
வாகுகுழற் பின்னல்கண்டாய் வெண்ணிலாவே
கோகனக வீறழித்தாய் வெண்ணிலாவே திரி
கூடலிங்கர் முன்போய்க்காய்வாய் வெண்ணிலாவே. ...23
| |
வசந்தவல்லி மன்மதனை நிந்தித்தல்
விருத்தம்
தண்ணிலா மௌலிதந்த மையலா னதையறிந்துத்
தைய லார்கள்
எண்ணிலாப் பகையெடுத்தா ரிந்நகரை நன்னகரென்
றெவர்சொன் னாரோ
அண்ணலார் திரிகூட நாதரென்ப தென்னளவு
மமைந்தி டாரோ
வெண்ணிலாக் குடைபிடித்து மீனகே தனம்பிடித்த
வேனி லானே ...24
| |
இராகம் - எதுகுலகாம்போதி, தாளம் - சாப்பு
கண்ணிகள்
(1) கைக்கரும் பென்ன கணையென்ன நீயென்ன மன்மதா - இந்தச்
செக்கரும் பாவி நிலாவுமே போதாதோ மன்மதா
மைக்கருங் கண்ணா ளிரதிக்கு மால்கொண்ட மன்மதா - விடை
வல்லார்க்கு மால்கொண்டாற் பொல்லாப்பென் மேலுண்டே மன்மதா
(2) திக்கெலாந் தென்றற் புலிவந்து பாயுதே மன்மதா - குயிற்
சின்னம் பிடித்தபின் னன்னம் பிடியாதே மன்மதா
அக்கா ளெனுஞ்சகி வெட்காம லேசுவாள் மன்மதா - அவள்
அல்லாமல் தாயொரு பொல்லாத நீலிகாண் மன்மதா
(3) நேரிழை யாரையு மூரையும் பாரடா மன்மதா - கண்ணில்
நித்திரை தானொரு சத்துரு வாச்சுதே மன்மதா
பேரிசை யேயன்றிப் பூரிசை யேன்பிள்ளாய் மன்மதா - சிறு
பெண்பிள்ளை மேற்பொரு தாண்பிள்ளை யாவையோ மன்மதா.
(4) வார்சடை யீதல்ல கார்குழற் பின்னல்காண் மன்மதா - நெற்றி
வந்தது கண்ணல்ல சிந்தூர ரேகைபார் மன்மதா
நாரிபங் காளர்தென் னாரிய நாட்டினர் மன்மதா - எங்கள்
நன்னகர்க் குற்றாலர் முன்னமே செல்லுவாய் மன்மதா. ...25
| |
வசந்தவல்லியைப் பாங்கி வினாவுதல்
விருத்தம்
படியே ழுடையோர் திரிகூடப்
படைமா மதனைப் பயிற்றியசொல்
அடியேன் சகியா யிருக்கையிலே
அதுநான் பயின்றா லாகாதோ
கொடியே மதுரம் பழுத்தொழுகு
கொம்பே வம்பு பொருதமுலைப்
பிடியே யெமது குடிக்கொருபெண்
பிள்ளாய் கருத்து விள்ளாயே. ...26
| |
வசந்தவல்லி பாங்கிக்குச் சொல்லுதல்
இராகம் - கல்யாணி, தாளம் - சாப்பு
கண்ணிகள்
(1) மெய்யர்க்கு மெய்யர் திரிகூட நாயகர் மீதில்மெத்த
மையல்கொண் டேனந்தச் செய்தியைக் கேளாய் நீபாங்கி
செய்ய சடையுந் திருக்கொன்றை மாலை யழகுமவர்
கையில் மழுவுமென் கண்ணை விட்டே யகலாவே.
(2) கங்கைக் கொழுந்தணி தெய்வக் கொழுந்தைநான் கண்டுகுளிர்
திங்கட் கொழுந்தையும் தீக்கொழுந் தாக்கிக் கொண்டேனே
சங்கக் குழையாரைச் சங்க மறுகினிற் கண்டு இரு
செங்கைக்குட் சங்கமுஞ் சிந்தி மறுகி விட்டேனே.
(3) மன்றல் குழவி மதியம் புனைந்தாரைக் கண்டுசிறு
தென்றற் குளவி தினங்கொட்டக் கொட்ட நொந்தேனே
குன்றச் சிலையாளர் குற்றால நாதர்முன்போ னேன்மதன்
வென்றிச் சிலைகொடு மெல்ல மெல்லப் பொருதானே.
(4) பெம்மானை நன்னகர்ப் பேரரச வீதியிற் கண்டு அவர்
கைம்மானைக் கண்டு கலையை நெகிழ விட்டேனே
செம்மேனி தன்னிற் சிறுகறுப் பாரைநான் கண்டிப்போது
அம்மாவென் மேனி யடங்கலு மேகறுத் தேனே.
(5) வெள்ளி விடையில் வியாழன் புனைந்தாரைக் கண்டுசிந்தை
நள்ளிய திங்களை ஞாயிறு போலக் கண்டேனே
எள்ளள வூணு முறக்கமு மில்லாரைக் கண்டுநானும்
ஒள்ளிய வூணு முறக்கமு மற்று விட்டேனே. | ...27
|
வசந்தவல்லியைப் பாங்கி பழித்தல்
விருத்தம்
தரைப்பெண்ணுக் கணிபோல் வந்த
தமனியக் கொடியே மாதர்
துரைப்பெண்ணே வசந்த வல்லி
சொன்னபேதை மைக்கென் சொல்வேன்
வரைப்பெண்ணுக் காசை பூண்டு
வளர்சங்க மறுகி னூடே
நரைத்தமா டேறுவார்க்கோ
நங்கைநீ மயல்கொண் டாயே. ...28
| |
வசந்தவல்லி திரிகூடநாதரைப் புகழ்ந்து பாங்கிக்குக் கூறுதல்
இராகம் - சௌராஷ்டிரம், தாளம் - ரூபகம்
கண்ணிகள்
(1) மன்னவர்குற் றாலர்செய்தி இன்னமின்னங்
கேளாயோ மானே அவர்
வாகனத்தின் மால்விடைக்கு லோகமொக்க
ஓரடிகாண் மானே
சன்னதியின் பேறல்லவோ பொன்னுலகில்
தேவர் செல்வ மானே
சந்திரருஞ் சூரியரும் வந்திறங்கும்
வாசல்கண்டாய் மானே.
(2) நன்னகரி லீசருக்கு நான்றானோ
ஆசைகொண்டேன் மானே பல
கன்னியரு மாசைகொண்டார் பன்னியரும்
ஆசைகொண்டார் மானே
தென்னிலங்கை வாழுமொரு கன்னிகைமண்
டோதரியாள் மானே அவர்
பொன்னடியிற் சேர்ந்தணைய என்னதவஞ்
செய்தாளோ மானே ...29
| |
இதுவுமது விருத்தம்
வேரிலே பழம்பழுத்துத் தூரிலே சுளைவெடித்து
வெடித்த தீந்தேன்
பாரிலே பாதாள கங்கைவந்த தெனக்குதித்துப்
பசுந்தேன் கங்கை
நீரிலே பெருகுகுறும் பலாவிலே கொலுவிருக்கும்
நிமல மூர்த்தி
பேரிலே பிரமைகொண்ட பெண்களிலே நானுமொரு
பெண்கண் டாயே. ...30
| |
பாங்கி வசந்தவல்லியை நியாயம் வினாவுதல்
விருத்தம்
வசந்தவுல் லாச வல்லி
வல்லிக்கு வல்லி பேசி
பசந்தேதுார் பசப்புங் கண்டாய்
பரமர்மே லாசை கொண்டாய்
நிசந்தருந் திருக்குற் றால
நிரந்தர மூர்த்தி யுன்பால்
இசைந்திடக் கரும மேதோ
இசையநீ யிசைத்தி டாயே ...31
| |
வசந்தவல்லி வருந்திக்கூறுதல்
இராகம் - நாதநாமக்கிரியை, தாளம் - ஆதி
கண்ணிகள்
(1) புரத்து நெருப்பை மூவர்க் கவித்தவர் மையல் கொண்டவென்
ஒருத்தி காம நெருப்பை யவிக்கிலார்
பருத்த மலையைக் கையி லிணக்கினார் கொங்கை யான
பருவ மலையைக் கையி லிணக்கிலார்.
(2) அஞ்சு தலைக்குள் ஆறு தலைவைத்தார் எனது மனதில்
அஞ்சு தலைக்கொ ராறுதலை வையார்
நஞ்சு பருகி யமுதங் கொடுத்தவ ரெனது வாள்விழி
நஞ்சு பருகி யமுதங் கொடுக்கிலார்.
(3) தேவர் துரைதன் சாபந் தீர்த்தவர் வன்ன மாங்குயிற்
சின்னத் துரைதன் சாபந் தீர்க்கிலார்
ஏவ ரும்புகழ் திருக்குற் றாலர்தாம் சகல பேர்க்கும்
இரங்கு வாரெனக் கிரங்கிலார் பெண்ணே. ...32
| |
பாங்கி வசந்தவல்லிக்குப் புத்தி கூறுதல்
விருத்தம்
நன்னகர்த் திருக்குற் றால
நாதர்மே லாசை பூண்டு
சொன்னவர்க் கிணங்க வார்த்தை
சொல்லவும் படித்துக் கொண்டாய்
சன்னதி விசேடஞ் சொல்லத்
தக்கதோ மிக்க தோகாய்
என்னிலா னதுநான் சொன்னேன்
இனியுன திச்சை தானே ...33
| |
வசந்தவல்லி பாங்கியைத் தூதனுப்புதல்
இராகம் - காம்போதி, தாளம் - ஆதி
பல்லவி
தூதுநீ சொல்லி வாராய் பெண்ணே குற்றாலர் முன்போய்த்
தூதுநீ சொல்லி வாராய்
அநுபல்லவி
ஆதிநாட் சுந்தரர்க்குத் தூதுபோனவர் முன்னே (தூதுநீ)
சரணங்கள்
(1) உறங்க உறக்கமும் வாராது மாயஞ் செய்தாரை
மறந்தால் மறக்கவும் கூடாது பெண்சென்ம மென்று
பிறந்தாலும் பேராசை யாகாது அஃத றிந்தும்
சலுகைக் காரர்க் காசையானே னிப்போது (தூதுநீ)
(2) நேற்றைக்கெல் லாங்குளிர்ந்து காட்டி இன்று கொதிக்கும்
நித்திரா பாவிக்கென்ன போட்டி நடுவே இந்தக்
காற்றுக்கு வந்ததொரு கோட்டி விரகநோய்க்கு
மாற்று மருந்து முக்கண் மருந்தென்று பரஞ்சாட்டி (தூதுநீ)
(3) வந்தாலிந் நேரம்வரச் சொல்லு வராதி ருந்தால்
மாலையா கிலுந்தரச் சொல்லு குற்றாலநாதர்
தந்தாலென் னெஞ்சைத் தரச்சொல்லு தராதி ருந்தால்
தான்பெண்ணா கியபெண்ணை நான்விடே னென்று. (தூதுநீ) ...34
| |
வசந்தவல்லி திரிகூடநாதர் சமயத்தைப் பாங்கிக்குச் சொல்லுதல்
விருத்தம்
செவ்வேளை யீன்றருள்வார் சிலவேளை வென்றருள்வார்
திரும்பத் தாமே
அவ்வேளை யழைத்தருள்வா ரகங்கார மிகுதலா
லறவ ரேவும்
கைவேழ முரித்தவர்குற் றாலர்கொலு வமரருக்குங்
காணொ ணாதால்
வெவ்வேளை பலவுமுண்டு வியல்வேளை நான்சொலக்கேள்
மின்ன னாளே. ...35
| |
இராகம் - பியாகடை, தாளம் - ஆதி
கண்ணிகள்
(1) திரிகூட ராசருக்குத் திருவனந்தல் முதலாகத்
தினமுமொன் பதுகாலம் கொலுவிற் சகியே.
(2) பெரிதான அபிஷேகம் ஏழுகா லமுமொருவர்
பேசுதற்குச் சமயமல்ல கண்டாய் சகியே.
(3) வருநாளி லொருமூன்று திருநாளும் வசந்தனும்
மாதவழி வருடவழிச் சிறப்பும் சகியே.
(4) ஒருநாளுக் கொருநாளில் வியனாகக் குழல்மொழிப்பெண்
உகந்திருக்குங் கொலுவேளை கண்டாய் சகியே.
(5) பெத்தரிக்க மிகுந்ததிருக் குற்றால நாதலிங்கர்
பெருங்கொலுவில் சமயமறி யாமற் சகியே.
(6) சித்தரொடு தேவகணஞ் சிவகணங்கள் தடைசெய்யத்
திருவாசற் கடைநிற்பார் சிலபேர் சகியே.
(7) அத்தலையிற் கடந்தவர்கள் நந்திபிரம் படிக்கொதுங்கி
ஆட்கொண்டார் குறட்டில்நிற்பார் சிலபேர் சகியே.
(8) மைக்கருங்கண் மாதர்விட்ட வண்டுகளும் கிள்ளைகளும்
வாசல்தொறுங் காத்திருக்குங் கண்டாய் சகியே.
(9) கோலமகு டாகமம்சங் கரவிசுவ நாதனருள்
குற்றாலச் சிவராம நம்பிசெயுஞ் சகியே.
(10) பாலாறு நெய்யாறா யபிஷேக நைவேத்யம்
பணிமாறு காலமுங்கொண் டருளிச் சகியே.
(11) நாலுமறைப் பழம்பாட்டு மூவர்சொன்ன திருப்பாட்டும்
நாலுகவிப் புலவர் புதுப்பாட்டுஞ் சகியே.
(12) நீலகண்டர் குற்றாலர் கொண்டருளு நிறைகொலுவில்
நீக்கமிலை எல்லார்க்கும் பொதுக்காண் சகியே.
(13) அப்பொழுது குற்றாலர் தேவியுடன் கொலுவிருப்பார்
ஆசைசொலக் கூடாது கண்டாய் சகியே.
(14) முப்பொழுதுந் திருமேனி தீண்டுவார் வந்துநின்று
முயற்சிசெயுந் திருவனந்தல் கூடிச் சகியே.
(15) கொப்பழகு குழைமடந்தை பள்ளியறை தனிலிருந்து
கோயில்புகும் ஏகாந்த சமயஞ் சகியே.
(16) மைப்பழகு விழியாயென் பெருமாலை நீசொல்லி
மருமாலை வாங்கியே வாராய் சகியே. ...36
| |
வசந்தவல்லி கூடலிழைத்தல்
கொச்சகம்
தெண்ணீர் வடவருவித் தீர்த்தத்தார் செஞ்சடைமேல்
விண்ணீர் புனைந்தார் விரகவெம்மைக் காற்றாமல்
கண்ணீர் நறும்புனலாக் கைவளையே செய்கரையா
யுண்ணீரிற் கூட லுறைக்கிணறு செய்வாளே. | ...37
|
சிந்து
இராகம் - பந்துவராளி, தாளம் - திரிபுடை
கண்ணிகள்
(1) பாடியமறை தேடிய நாயகர் பன்னகர்பணி நன்னகர் நாயகர்
பாவலர்மனுக் காவலர் நாயகர் பதஞ்சலி பணிதாளர்
(2) கோடியமதி சூடிய நாயகர் குழல்மொழிபுண ரழகிய நாயகர்
குறும்ப லாவினிற் கூடுவ ராமெனிற் கூடலேநீ கூடாய்
(3) கஞ்சனைமுகில் மஞ்சனை நொடித்தவர் காமனைச்சிறு சோமனை முடித்தவர்
காரணமறை யாரணம் படித்தவர் கருதிய பெருமானார்
(4) குஞ்சரமுதற் பூசித்த நாயகர் குறுமுனிதமிழ் நேசித்த நாயகர்
குறும்ப லாவினிற் கூடுவ ராமெனிற் கூடலேநீ கூடாய் ...38
| |
குறிசொல்லும் குறத்தி வருதல்
விருத்தம்
ஆடல்வளை வீதியிலே அங்கணர்முன் போட்டசங்க
மரங்கு வீட்டில்
தேடல்வளைக் குங்குறிபோற் கூடல்வளைத் திருந்துவல்லி
தியங்கும் போதிற்
கூடல்வளைக் கரமசைய மாத்திரைக்கோ லேந்திமணிக்
கூடை தாங்கி
மாடமறு கூடுதிரி கூடமலைக் குறவஞ்சி
வருகின் றாளே. ...39
| |
ஆசிரியப்பா
| |
(1) | சைவமுத் திரையை வானின் மேற்றரிக்குந்
தெய்வமுத் தலைசேர் திரிகூட மலையான்
வான்புனல் குதட்டு மடக்குரு கினுக்குத்
தேன்புரை யேறுஞ் சித்திரா நதியான்.
| |
(5) | ஏரிநீர் செழிக்க வாரிநீர் கொழிக்கு
மாரிநீர் வளர்தென் னாரிய நாட்டான்
கன்னிமாப் பழுத்துக் கதலிதேன் கொழித்துச்
செந்நெல்காத் தளிக்கு நன்னகர்ப் பதியான்
ஓரா யிரமறை ஓங்கிய பரியான்.
| |
(10) | ஈரா யிரமருப் பேந்திய யானையான்
சேவக விருது செயவிடைக் கொடியான்
மூவகை முரசு முழங்குமண் டபத்தான்
அண்ட கோடிகளை ஆணையா லடக்கிக்
கொண்டல்போற் கவிக்குங் கொற்றவெண் குடையான்.
| |
(15) | வாலசுந் தரிகுழல் வாய்மொழி அருட்கட்
கோலவண் டிணங்குங் கொன்றைமா லிகையான்
பூவளர் செண்பகக் காவளர் தம்பிரான்
தேவர்கள் தம்பிரான் றிருவருள் பாடி
இலகுநீ றணிந்து திலகமு மெழுதிக்
| |
(20) | குலமணிப் பாசியுங் குன்றியும் புனைந்து
சலவைசேர் மருங்கிற் சாத்திய கூடையும்
வலதுகைப் பிடித்த மாத்திரைக் கோலு
மொழிக்கொரு பசப்பு முலைக்கொரு குலுக்கும்
விழிக்கொரு சிமிட்டும் வௌிக்கொரு பகட்டுமாக
| |
(25) | உருவசி அரம்பை கருவமு மடங்க
முறுவலின் குறும்பால் முனிவரு மடங்க
சமனிக்கு முரையாற் சபையெலா மடங்கக்
கமனிக்கு மவரும் கடைக்கண்ணா லடங்க
கொட்டிய உடுக்கு கோடாங்கிக் குறிமுதல்
| |
(30) | மட்டிலாக் குறிகளுங் கட்டினா லடக்கிக்
கொங்கண மாரியங் குச்சலர் தேசமும்
செங்கைமாத் திரைக்கோற் செங்கோல் நடாத்திக்
கன்னடம் தெலுங்கு கலிங்க ராச்சியமும்
தென்னவர் தமிழாற் செயத்தம்ப நாட்டி
| |
(35) | மன்னவர் தமக்கு வலதுகை நோக்கி
இன்னகை மடவார்க்கை இடதுகை பார்த்துக்
காலமுன் போங்குறி கைப்பல னாங்குறி
மேலினி வருங்குறி வேண்டுவார் மனக்குறி
மெய்க்குறி கைக்குறி விழிக்குறி மொழிக்குறி
| |
(40) | எக்குறி ஆயினு மிமைப்பினி லுரைக்கும்
மைக்குறி விழிக்குற வஞ்சி வந்தனளே. | ...40
|
விருத்தம்
சிலைநுதலிற் கஸ்தூரித் திலகமிட்டு நறுங்குழலிற்
செச்சை சூடிக்
கொலைமதர்க்கண் மையெழுதி மாத்திரைக் கோல்வாங்கி
மணிக்கூடை தாங்கி
முலைமுகத்திற் குன்றிமணி வடம்பூண்டு திரிகூட
முதல்வர் சாரல்
மலைதனிற்பொன் வஞ்சிகுற வஞ்சியப ரஞ்சிகொஞ்சி
வருகின் றாளே. ...41
|
கீர்த்தனை
இராகம் - தோடி, தாளம் - சாப்பு
பல்லவி
வஞ்சி வந்தனளே மலைக்குற வஞ்சி வந்தனளே
அநுபல்லவி
வஞ்சி எழிலப ரஞ்சி வரிவிழி நஞ்சி முழுமற நெஞ்சி பலவினில்
அஞ்சு சடைமுடி விஞ்சை அமலனை நெஞ்சில் நினைவொடு மிஞ்சு குறிசொல -
வஞ்சி வந்தனளே மலைக்குற வஞ்சி வந்தனளே.
சரணங்கள்
வல்லை நிகர்முலை இல்லை யெனுமிடை
வில்லை யனநுதல் முல்லை பொருநகை
வல்லி எனவொரு கொல்லி மலைதனில்
வல்லி அவளினு மெல்லி இவளென
ஒல்லி வடகன டில்லி வரைபுகழ்
புல்லி வருகுறி சொல்லி மதுரித
நல்லி பனிமலை வல்லி குழல்மொழிச்
செல்வி புணர்பவர் கல்வி மலைக்குற (வஞ்சி)
குன்றி லிடுமழை மின்க ளெனநிரை
குன்றி வடமுலை தங்கவே
மன்றல் கமழ்சிறு தென்றல் வரும்வழி
நின்று தரள மிலங்கவே
ஒன்றிலி ரதியும் ஒன்றில் மதனனு
மூச லிடுகுழை பொங்கவே
என்று மெழுதிய மன்றி னடமிடு
கின்ற சரணினர் வென்றி மலைக்குற (வஞ்சி)
ஆடு மிருகுழைத் தோடு மொருகுழற்
காடு இணைவிழி சாடவே
கோடு பொருமுலை மூடு சலவையி
னூடு பிதுங்கிமல் லாடவே
தோடி முரளி வராளி பயிரவி
மோடி பெறஇசை பாடியே
நீடு மலைமயி லாடு மலைமதி
சூடு மலைதிரி கூட மலைக்குற (வஞ்சி)...41-1
| |
கொச்சகக்கலிப்பா
முன்னங் கிரிவளைத்த முக்கணர்குற் றாலவெற்பிற்
கன்னங் கரியகுழற் காமவஞ்சி தன்மார்பிற்
பொன்னின் குடம்போற் புடைத்தெழுந்த பாரமுலை
இன்னம் பருத்தால் இடைபொறுக்க மாட்டாதே. | ...41-2
|
இராகம் - தோடி, தாளம் - ஆதி
பல்லவி
வஞ்சி வந்தாள் - மலைக்குற - வஞ்சி வந்தாள்
அநபல்லவி
வஞ்சி வந்தாள் திரிகூட ரஞ்சிதமோ கினிமுன்னே
மிஞ்சிய விரகநோய்க்குச் சஞ்சீவி மருந்துபோலே
சரணங்கள்
(1) மும்மையுல கெங்கும் வெல்லக்
கொம்மைமுலை யார்க்கு நல்ல
செம்மையாக் குறிகள் சொல்ல
அம்மேயம்மே என்று செல்ல (வஞ்சி)
(2) சோலையில் வசந்த காலம்
வாலகோ கிலம்வந் தாற்போற்
கோலமலை வில்லி யார்குற்
றாலமலை வாழும்குற (வஞ்சி)
(3) மாத்திரைக் கோலது துன்னச்
சாத்திரக்கண் பார்வை பன்னத்
தோத்திர வடிவமின்னப்
பூத்தமலர்க் கொடியென்ன (வஞ்சி) ...42
| |
வசந்தவல்லி குறத்தியைக்கண்டு மலைவளங்கேட்டல்
விருத்தம்
அந்தரதுந் துபிமுழங்கு நன்னகர்குற் றாலலிங்க
ரருளைப் பாடி
வந்தகுற வஞ்சிதன்னை வசந்தவல்லி கண்டுமன
மகிழ்ச்சி கொண்டு
சந்தமுலைத் துவளுமிடைத் தவளநகைப் பவளவிதழ்த்
தைய லேயுன்
சொந்தமலை எந்தமலை யந்தமலை வளமெனக்குச்
சொல் லென்றாளே. ...43
| | |
குறத்தி மலைவளங்கூறுதல்
இராகம் - புன்னாகவராளி, தாளம் - ஆதி
கண்ணிகள்
(1) வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
(2) கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பார்
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்.
(3) தேனருவித் திரையெழும்பி வானின்வழி யொழுகும்
செங்கதிரோன் பரிக்காலுந் தேர்க்காலும் வழுகும்.
(4) கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே.
(5) முழங்குதிரைப் புனலருவி கழங்கெனமுத் தாடும்
முற்றமெங்கும் பரந்துபெண்கள் சிற்றிலைக்கொண் டோடும்.
(6) கிழங்குகிள்ளித் தேனெடுத்து வளம்பாடி நடப்போம்
கிம்புரியின் கொம்பொடித்து வெம்புதினை இடிப்போம்
(7) செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப்பந் தடிக்கும்
தேனலர்சண் பகவாசம் வானுலகில் வெடிக்கும்
(8) வழங்குகொடை மகராசர் குறும்பலவி லீசர்
வளம்பெருகுந் திரிகூட மலையெங்கள் மலையே
(9) ஆடுமர வீனுமணி கோடிவெயி லெறிக்கும்
அம்புலியைக் கவளமென்று தும்பிவழி மறிக்கும்
(10) வேடுவர்கள் தினைவிதைக்கச் சாடுபுனந் தோறும்
விந்தையகில் குங்குமமுஞ் சந்தனமும் நாறும்
(11) காடுதொறும் ஓடிவரை யாடுகுதி பாயுங்
காகமணு காமலையில் மேகநிரை சாயும்
(12) நீடுபல வீசர்கயி லாசகிரி வாசர்
நிலைதங்குந் திரிகூட மலையெங்கள் மலையே
(13) கயிலையெனும் வடமலைக்குத் தெற்குமலை யம்மே
கனகமகா மேருவென நிற்குமலை யம்மே
(14) சயிலமலை தென்மலைக்கு வடக்குமலை யம்மே
சகலமலை யுந்தனக்கு ளடக்குமலை யம்மே
(15) வயிரமுடன் மாணிக்கம் விளையுமலை யம்மே
வானிரவி முழைகள்தொறு நுழையுமலை யம்மே
(16) துயிலுமவர் விழிப்பாகி யகிலமெங்கும் தேடுந்
துங்கர் திரிகூடமலை யெங்கள் மலை யம்மே
(17) கொல்லிமலை யெனக்கிளைய செல்லிமலை யம்மே
கொழுநனுக்குக் காணிமலை பழனிமலை யம்மே
(18) எல்லுலவும் விந்தைமலை யெந்தைமலை யம்மே
இமயமலை யென்னுடைய தமயன்மலை யம்மே
(19) சொல்லரிய சாமிமலை மாமிமலை யம்மே
தோழிமலை நாஞ்சிநாட்டு வேள்விமலை யம்மே
(20) செல்லினங்கள் முழவுகொட்ட மயிலினங்க ளாடும்
திரிகூட மலையெங்கள் செல்வமலை யம்மே
(21) ஒருகுலத்திற் பெண்கள்கொடோம் ஒருகுலத்திற் கொள்ளோம்
உறவுபிடித் தாலுவிடோங் குறவர்குலம் நாங்கள்
(22) வெருவிவருந் தினைப்புனத்திற் பெருமிருகம் விலக்கி
வேங்கையாய் வெயில்மறைத்த பாங்குதனைக் குறித்தே
(23) அருளிலஞ்சி வேலர்தமக் கொருபெண்ணைக் கொடுத்தோம்
ஆதினத்து மலைகளெல்லாஞ் சீதனமாக் கொடுத்தோம்
(24) பரிதிமதி சூழ்மலையைத் துருவனுக்குக் கொடுத்தோம்
பரமர்திரி கூடமலை பழையமலை யம்மே ...44
| |
வசந்தவல்லி குறத்தியினது நாட்டுவளமும் நகர்வளமும் வினாவுதல்
விருத்தம்
கோட்டுவளம் முலைகாட்டும் கொடியின்வள மிடைகாட்டும்
குறிஞ்சி பூத்த
காட்டுவளங் குழல்காட்டும் மலைவளந்தா னீயுரைத்துக்
காட்டு வானேன்?
தோட்டுவளம் புரிகாதர் திரிகூட மலைவளரும்
தோகை யேயுன்
நாட்டுவள மெனக்குரைத்துக் குற்றால நகர்வளமு
நவிலு வாயே. ...45
| |
குறத்தி நாட்டுவளம் கூறுதல்
இராகம் - கேதாரகௌளம், தாளம் - சாப்பு
கண்ணிகள்
(1) சூர மாங்குயிற் சின்னங்கள் காமத்
துரைவந் தான்றுரை வந்தானென் றூத
ஆர மாமுலை மின்னா ரவரவர்
அல்குல் தேர்க ளலங்காரஞ் செய்யப்
பார மாமதி வெண்குடை மிஞ்சப்
பறக்குங் கிள்ளைப் பரிகள்முன் கொஞ்சத்
தேரின் மாரன் வசந்தன் உலாவும்
திருக்குற் றாலர்தென் னாரிய நாடே.
(2) காரைச் சேர்ந்த குழலார்க்கு நாணிக்
கடலைச் சேர்ந்த கறுப்பான மேகம்
வாரைச் சேர்ந்த முலைக்கிணை யாகும்
மலையைச் சேர்ந்து சிலையொன்று வாங்கி
நீரைச் சேர்ந்த மழைத்தாரை யம்பொடு
நீளக் கொண்டலந் தேரேறி வெய்யவன்
தேரைச் சூழ்ந்திடக் கார்காலம் வெல்லுந்
திருக்குற் றாலர்தென் னாரிய நாடே.
(3) சூழ மேதி இறங்குந் துறையிற்
சொரியும் பாலைப் பருகிய வாளை
கூழை வாசப் பலாவினிற் பாயக்
கொழும் பலாக்கனி வாழையிற் சாய
வாழை சாய்ந்தொரு தாழையிற் றாக்க
வருவி ருந்துக் குபசரிப் பார்போல்
தாழை சோறிட வாழை குருத்திடுஞ்
சந்திர சூடர்தென் னாரிய நாடே.
(4) அந்ந லார்மொழி தன்னைப் பழித்ததென்
றாடவர் மண்ணில் மூடுங் கரும்பு
துன்னி மீள வளர்ந்து மடந்தையர்
தோளை வென்று சுடர்முத்த மீன்று
பின்னு மாங்கவர் மூரலை வென்று
பிரியுங் காலத்திற் பெண்மையை வெல்லக்
கன்னல் வேளுக்கு வில்லாக ஓங்குங்
கடவுளாரிய நாடெங்கள் நாடே.
(5) தக்க பூமிக்கு முன்புள்ள நாடு
சகல தேவர்க்கு மன்புள்ள நாடு
திக்கெ லாம்வளர்ந் தோங்கிய நாடு
சிவத்து ரோகமு நீங்கிய நாடு
முக்க ணான்விளை யாடிய நாடு
முதிய நான்மறை பாடிய நாடு
மைக்க ணாள்குழல் வாய்மொழி பாகர்
வசந்த ஆரிய நாடெங்கள் நாடே.
(6) அஞ்சு நூறு மகங்கொண்ட நாடு
அநேக கோடி யுகங்கண்ட நாடு
கஞ்ச யோனி உதிக்கின்ற நாடு
கமலை வாணி துதிக்கின்ற நாடு
செஞ்சொல் மாமுனி ஏகிய நாடு
செங்கண் மால்சிவ னாகிய நாடு
வஞ்சி பாகர் திரிகூட நாதர்
வசந்த ஆரிய நாடெங்கள் நாடே.
(7) மாத மூன்று மழையுள்ள நாடு
வருடம் மூன்று விளைவுள்ள நாடு
வேத மூன்றும் பலாவுள்ள நாடு
விசேஷ மூன்றுங் குலாவுள்ள நாடு
போத மூன்று நலஞ்செயு நாடு
புவனமூன்றும் வலஞ்செயு நாடு
நாத மூன்றுரு வானகுற் றால
நாத ராரிய நாடெங்கள் நாடே.
(8) நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்
நெருங்கக் காண்பது கன்னலிற் செந்நெல்
தூங்கக் காண்பது மாம்பழக் கொத்து
சுழலக் காண்பது தீந்தயிர் மத்து
வீங்கக் காண்பது மங்கையர் கொங்கை
வெடிக்கக் காண்பது கொல்லையின் முல்லை
ஏங்கக் காண்பது மங்கல பேரிகை
ஈச ராரிய நாடெங்கள் நாடே.
(9) ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகிய ருள்ளம்
வாடக் காண்பது மின்னார் மருங்குல்
வருந்தக் காண்பது சூலுளை சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து
புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து
தேடக் காண்பது நல்லறங் கீர்த்தி
திருக்குற் றாலர்தென் னாரிய நாடே. ...46
| |
வசந்தவல்லிக்குக் குறத்தி தலச் சிறப்பு கூறுதல்
விருத்தம்
அரிகூட அயன்கூட மறைகூடத் தினந்தேட
அரிதாய் நின்ற
திரிடகூடப் பதியிருக்கும் திருநாட்டு வளமுரைக்கத்
தெவிட்டா தம்மே
கரிகூடப் பிடிதிரியுஞ் சாரலிலே ஒருவேடன்
கைவில் லேந்தி
நரிகூடக் கயிலைசென்ற திரிகூடத் தலமகிமை
நவிலக் கேளே. ...47
| |
இராகம் - பிலகரி, தாளம் - ஜம்பை
கண்ணிகள்
(1) ஞானிகளு மறியார்கள் சித்ரநதி மூலம்
நானறிந்த வகைசிறிது பேசக்கே ளம்மே
(2) மேன்மைபெறுந் திரிகூடத் தேனருவித் துறைக்கே
மேவுமொரு சிவலிங்கம் தேவரக சியமாய்
(3) ஆனதுறை அயனுரைத்த தானமறி யாமல்
அருந்தவத்துக் காய்த்தேடி திரிந்தலையுங் காலம்
(4) மோனவா னவர்க்கெங்கள் கானவர்கள் காட்டு
முதுகங்கை யாறுசிவ மதுகங்கை யாறே
(5) சிவமதுகங் கையின்மகிமை புவனமெங்கும் புகழும்
செண்பகாட வித்துறையின் பண்புசொல்லக் கேளாய்
(6) தவமுனிவர் கூட்டரவும் அவரிருக்குங் குகையுங்
சஞ்சீவி முதலான விஞ்சைமூ லிகையும்
(7) கவனசித்த ராதியரும் மவுனயோ கியரும்
காத்திருக்குங் கயிலாய மொத்திருக்கு மம்மே
(8) நவநிதியும் விளையுமிட மவிடமது கடந்தால்
நங்கைமார் குரவையொலிப் பொங்குமா கடலே.
(9) பொங்குகடல் திரிவேணி சங்கமெனச் செழிக்கும்
பொருந்துசித்ர நதித்துறைகள் பொன்னுமுத்துங் கொழிக்கும்
(10) கங்கையெனும் வடவருவி தங்குமிந்த்ர சாபம்
கலந்தாடிற் கழிநீராய்த் தொலைந்தோடும் பாபம்
(11) சங்கவீ தியிற்பரந்து சங்கினங்கள் மேயுந்
தழைத்தமதிற் சிகரமெங்குங் கொழுத்தகயல் பாயும்
(12) கொங்கலர்செண் பகச்சோலைக் குறும்பலா வீசர்
குற்றாலத் திரிகூடத் தலமெங்கள் தலமே
(13) மன்றுதனில் தெய்வமுர சென்றுமேல் முழங்கும்
வளமைபெறுஞ் சதுரயுகங் கிழமைபோல் வழங்கும்
(14) நின்றுமத கரிபூசை அன்றுசெய்த தலமே
நிந்தனைசெய் புட்பகந்தன் வந்தனைசெய் தலமே
(15) பன்றியொடு வேடன்வலஞ் சென்றதிந்தத் தலமே
பற்றாகப் பரமருறை குற்றாலத் தலமே
(16) வென்றிபெறுந் தேவர்களும் குன்றமாய் மரமாய்
மிருகமதாய்த் தவசிருக்கும் பெரியதல மம்மே ...48
| |
வசந்தவல்லி திரிகூடநாதர் சுற்றம் வினாவுதல்
விருத்தம்
தீர்த்தவிசே டமுந்தலத்தின் சிறந்தவிசே டமுமுரைத்தாய்
திருக்குற் றால
மூர்த்திவிசே டந்தனையு மொழிதோறு நீயுரைத்த
முறையால் கண்டேன்
வார்த்தைவிசே டங்கட்கற்ற மலைக்குறவஞ் சிக்கொடியே
வருக்கை வாசர்
கீர்த்திவிசே டம்பெரிய கிளைவிசே டத்தையினிக்
கிளத்து வாயே. ...49
| |
குறத்தி திரிகூடநாதர் கிளைவிசேடம் கூறுதல்
இராகம் - முகாரி, தாளம் - ஏகம்
கண்ணிகள்
(1) குற்றாலர் கிளைவளத்தைக் கூறக்கே ளம்மே
குலம்பார்க்கில் தேவரினும் பெரியகுலம் கண்டாய்
(2) பெற்றதாய் தந்தைதனை யுற்றுநீ கேட்கில்
பெண்கொடுத்த மலையரசன் தனைக்கேட்க வேணும்
(3) உற்றதொரு பனிமலையின் கொற்றவேந் தனுக்கும்
உயர்மதுரை மாறனுக்குஞ் செயமருகர் கண்டாய்
(4) வெற்றி பெறும் பாற்கடலில் புற்றரவி லுறங்கும்
வித்தகர்க்குக் கண்ணான மைத்துனர்கா ணம்மே
(5) ஆனைவா கனத்தானை வானுலகி லிருத்தும்
ஆகுவா கனத்தார்க்கும் தோகைவா கனர்க்கும்
(6) தானையால் தந்தைகா லெறிந்தமக னார்க்கும்
தருகாழி மகனார்க்கும் தகப்பனார் கண்டாய்
(7) சேனைமக பதிவாச லானைபெறும் பிடிக்குந்
தேனீன்ற மலைச்சாரல் மானீன்ற கொடிக்கும்
(8) கானமலர் மேலிருக்கு மோனவய னார்க்கும்
காமனார் தமக்குமிவர் மாமனார் அம்மே
(9) பொன்னுலகத் தேவருக்கு மண்ணுலகத் தவர்க்கும்
பூதலத்தின் முனிவருக்கும் பாதலத் துளார்க்கும்
(10) அன்னவடி வெடுத்தவர்க்கும் ஏனவுரு வார்க்கும்
அல்லார்க்கு முன்னுதித்த செல்வர்கா ணம்மே
(11) முன்னுதித்து வந்தவரைத் தமையனென வுரைப்பார்
மொழிந்தாலு மொழியலாம் பழுதிலைகா ணம்மே
(12) நன்னகரிற் குற்றால நாதர்கிளை வளத்தை
நானுரைப்ப தரிதுலகம் தானுரைக்கும் அம்மே ...50
| |
வசந்தவல்லி குறத்தியைக் குறியின் விசேடம் வினாவுதல்
விருத்தம்
நீர்வளர் பவள மேனி
நிமலர்குற் றால நாதர்
கூர்வளம் பாடி யாடுங்
குறவஞ்சிக் கொடியே கேளாய்
கார்வளர் குழலார்க் கெல்லாங்
கருதிநீ விருந்தாச் சொல்லுஞ்
சீர்வளர் குறியின் மார்க்கம்
தெரியவே செப்பு வாயே. ...51
| |
குறத்தி குறியின் விசேடம் கூறுதல்
இராகம் - தோடி, தாளம் - ஆதி
பல்லவி
வித்தாரம் என்குறி யம்மே - மணி
முத்தாரம் பூணு முகிழ்முலைப் பெண்ணே
வித்தாரம் என்குறி யம்மே
சரணங்கள்
(1) வஞ்சி மலைநாடு கொச்சி கொங்கு
மக்க மராடம் துலக்காணம் மெச்சி
செஞ்சி வடகாசி நீளம் சீனம்
சிங்கம் ஈழம் கொழும்புவங் காளம்
தஞ்சை சிராப்பள்ளிக் கோட்டை தமிழ்ச்
சங்க மதுரைதென் மங்கலப் பேட்டை
மிஞ்சு குறிசொல்லிப் பேராய்த் திசை
வென்று நான் பெற்ற விருதுகள் பாராய் (வித்தாரம்)
(2) நன்னகர்க் குற்றாலந் தன்னில் எங்கும்
நாட்டுமெண் ணூற்றெண்பத் தேழாண்டு தன்னில்
பன்னக மாமுனி போற்றத் தமிழ்ப்
பாண்டிய னார்முதல் சிற்றொடு வேய்ந்த
தென்னாருஞ் சித்ர சபையை எங்கள்
சின்னணஞ் சாத்தேவன் செப்போடு வேய்ந்த
முன்னாளி லேகுறி சொல்லிப் பெற்ற
மோகன மாலைபார் மோகன வல்லி (வித்தாரம்)
(3) அன்பாய் வடகுண பாலிற் கொல்லத்து
ஆண்டொரு நானூற் றிருபத்து நாலில்
தென்காசி ஆலயம் ஓங்கக் குறி
செண்பக மாறற்குச் சொன்னபேர் நாங்கள்
நன்பாண்டி ராச்சியம் உய்யச் சொக்க
நாயகர் வந்து மணக்கோலஞ் செய்ய
இன்பா மதுரை மீனாட்சி குறி
எங்களைக் கேட்டதும் சங்கத்தார் சாட்சி (வித்தாரம்) ...52
| |
வசந்தவல்லி குறி கேட்டல்
விருத்தம்
கலவிக்கு விழிவாள் கொண்டு
காமனைச் சிங்கி கொள்வாய்
குலவித்தை குறியே ஆனால்
குறவஞ்சி குறைவைப் பாயோ
பலவுக்குட் கனிவாய் நின்ற
பரமர்குற் றாலர் நாட்டில்
இலவுக்குஞ் சிவந்த வாயால்
எனக்கொரு குறிசொல் வாயே. ...53
| |
குறத்தி குறி சொல்லுதல்
இராகம் - அடாணா, தாளம் - ஆதி
கண்ணிகள்
(1) என்னகுறி யாகிலுநான் சொல்லுவே னம்மே - சதுர்
ஏறுவே னெதிர்த்தபேரை வெல்லுவே னம்மே
(2) மன்னவர்கள் மெச்சுகுற வஞ்சிநா னம்மே - என்றன்
வயிற்றுக்கித் தனைபோதுங் கஞ்சி வாரம்மே
(3) பின்னமின்றிக் கூழெனினுங் கொண்டுவா அம்மே - வந்தால்
பெரிய குடுக்கைமுட்ட மண்டுவே னம்மே
(4) தின்னவிலையும் பிளவும் அள்ளித்தா அம்மே - கப்பல்
சீனச்சரக் குத்துக்கிணி கிள்ளித்தா அம்மே
(5) அம்மேயம்மே சொல்லவாராய் வெள்ளச்சி யம்மே - உனக்கு
ஆக்கம் வருகுதுபார் வெள்ளச்சி யம்மே
(6) விம்முமுலைக் கன்னிசொன்ன பேச்சு நன்றம்மே - நேரே
மேல்புறத்தில் ஆந்தையிட்ட வீச்சுநன் றம்மே
(7) தும்மலுங்கா கமுமிடஞ் சொல்லுதே யம்மே - சரஞ்
சூட்சுமாகப் பூரணத்தை வெல்லுதே யம்மே
(8) செம்மையிது நன்னிமித்தங் கண்டுபா ரம்மே - திரி
கூடமலைத் தெய்வமுனக் குண்டுகா ணம்மே ...54
| |
விருத்தம்
பல்லியும் பலப லென்னப்
பகரும் திரிகூ டத்தில்
கல்விமான் சிவப்பின் மிக்கான்
கழுத்தின்மேற் கறுப்பு முள்ளான்
நல்லமேற் குலத்தா நிந்த
நன்னகர்த் தலத்தா னாக
வல்லியே உனக்கு நல்ல
மாப்பிள்ளை வருவா னம்மே ...55
| |
ஸரீராகம், அடதாளம், சாப்பு
கண்ணிகள்
(1) தரைமெழுகு கோலமிடு முறைபெறவே கணபதிவை அம்மே - குடம்
தாங்காய்முப் பழம்படைத்தாய் தேங்காயும் உடைத்து வைப்பாய் அம்மே
(2) அறுகுபுனல் விளக்கிடுவாய் அடைக்காய் வெள்ளிலை கொடுவா அம்மே - வடை
அப்பமவல் வர்க்கவகை சர்க்கரையோ டெள்பொரிவை யம்மே
(3) நிறைநாழி யளந்துவைப்பாய் இறையோனைக் கரங்குவிப்பா யம்மே - குறி
நிலவரத்தைத் தேர்ந்துகொள்வாய் குலதெய்வத்தை நேர்ந்துகொள்வா யம்மே
(4) குறிசொல்லவா குறிசொல்லவா பிறைநுதலே குறிசொல்லவா அம்மே - ஐயர்
குறும்பலவர் திருவுளத்தாற் பெரும்பலனாங் குறிசொல்லவா அம்மே... ...56
| |
கட்டளைக் கலித்துறை
ஆனேறுஞ் செல்வர் திரிகூட நாதரணி நகர்வாழ்
மானே வசந்தப் பசுங்கொடி யேவந்த வேளைநன்றே
தானே இருந்த தலமுநன் றேசெழுந் தாமரைபோற்
கானேறுங் கைம்மலர் காட்டாய் மனக்குறி காட்டுதற்கே | ...57
|
இராகம் - கல்யாணி, தாளம் - சாப்பு
கண்ணிகள்
(1) முத்திரைமோ திரமிட்ட கையைக் காட்டா - யம்மே
முன்கை முதாரிட்ட கையைக் காட்டாய்
(2) அத்தகட கம்புனைந்த கையைக் காட்டாய் - பொன்னின்
அலங்கார நௌியிட்ட கையைக் காட்டாய்
(3) சித்திரச்சூ டகமிட்ட கையைக் காட்டாய் - பசும்
செங்கமலச் சங்கரேகைக் கையைக் காட்டாய்
(4) சத்திபீ டத்திறைவர் நன்னகர்க் குள்ளேவந்த
சஞ்சீவி யேயுனது கையைக் காட்டாய் ...58
| |
கவிக்கூற்று
கொச்சகக்கலிப்பா
ஏழைபங்கர் செங்கைமழு வேற்றவர்குற் றாலர்வெற்பில்
வாழிகொண்ட மோக வசந்தவல்லி கைபார்த்து
வீழிகொண்ட செங்கனிவாய் மிக்ககுற வஞ்சிபழங்
கூழையுண்ட வாயால் குறியைவிண்டு சொல்வாளே. | ...59
|
இராகம் - பைரவி, தாளம் - ரூபகம்
கண்ணிகள்
(1) மாறாமல் இருநிலத்தில் அறம்வளர்க்குங் கையே
மனையறத்தால் அறம்பெருக்கித் திறம்வளர்க்குங் கையே
(2) வீறாக நவநிதியும் விளையுமிந்தக் கையே
மேன்மேலும் பாலமுதம் அளையுமிந்தக் கையே
(3) ஆறாத சனங்கள்பசி யாற்றுமிந்தக் கையே
அணங்கனையார் வணங்கிநித்தம் போற்றுமிந்தக் கையே
(4) பேறாக நன்னகரங் காக்குமிந்தக் கையே
பிறவாத நெறியார்க்கே றேற்குமிந்தக் கையே. ...60
| |
குறத்தி தெய்வ வணக்கம் செய்தல்
விருத்தம்
கைக்குறி பார்க்கில் இந்தக்
கைப்பிடிப் பவர்தா மெட்டுத்
திக்குமே யுடைய ராவர்
செகமக ராசி நீயே
இக்குறி பொய்யா தென்றே
இறையவர் திரிகூ டத்தில்
மெய்க்குற வஞ்சி தெய்வம்
வியப்புற வணங்கு வாளே ...61
| |
ஆசிரியப்பா
குழல்மொழி யிடத்தார் குறும்பலா வுடையார்
அழகுசந் நிதிவா ழம்பல விநாயகா
செந்திவாழ் முருகா செங்கண்மால் மருகா
கந்தனே இலஞ்சிக் கடவுளே சரணம்
புள்ளிமா னீன்ற ப | |