தலமர சிறப்புகள்

புன்னை மரம்



புன்னை Calophyllam inophyllam, Linn.; Clusiaceae மின்னியல் செஞ்சடை வெண்பிறை யின்விள நூலினன் பன்னிய நான்மறை பாடியா ஒப்பல வூர்கள்போய் அன்னம்அன் னந்நடை யாளொ டும்மமரும்மிடம் புன்னைநன் மாமலர் பொன்னுதிர்க் கும்புன வாயிலே. - திருநாவுக்கரசர்.

திருப்புனவாயில், திருப்புகலூர், திருமயிலாப்பூர், திருவெண்ணெய் நல்லூர், திருவேட்டக்குடி முதலிய சிவத்தலங்களில் புன்னை தலமரமாக விளங்குகிறது. திருவேட்டக்குடியில் சிவபிரானை “நறையுலவும் பொழிற்புன்னை நன்னிழற்கீழமரும் இறை” என தேவாரம் குறிப்பிடுகிறது. இம்மரம் தமிழகத்தின் கடற்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் தானே வளரும் இயல்பினது. இதன் இலை சற்று நீண்டதாகவும், பளப்பளப்பாகவும் இருக்கும், உருண்டையான உள்ஓடுள்ள சதைக்கனியை உடையது. இதன் இலை, பூ, விதை, பட்டை, நெய் ஆகியவை மருத்துவப் பயன் உடையது.

தாது அழுகல் போக்கியாகவும், உடல் இசிவு நீக்கியாகவும், நாடி நடையை உயர்த்தி உடல் வெப்பு தரும் மருந்தாகவும் பயன்படும். தோல் நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.


< PREV <
புளியமரம்
Table of Content > NEXT >
மகிழமரம்