தலமர சிறப்புகள்

மா மரம்



மா Mangifera indica, Linn.; Anacardiaceae.

மா / maa / Mangifera indica
மா
மந்த மார்பொழில் மாங்கனி மாந்திட மந்திகள் மாணிக்கம் உந்தி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானை நிந்தி யாஎடுத் தார்த்தவல் லரக்கனை நெறித்திடு விரலானைச் சிந்தி யாமனத் தாரவர் சேர்வது தீநெறி யதுதானே. - திருஞானசம்பந்தர்.

திருமாந்துறை, திருமயிலாடுதுறை, திருநாகைக்காரோணம், திருக்கச்சியேகம்பம், திருஉசாத்தானம், திருஅவிநாசி முதலிய சிவத்தலங்களில் மா தலமரமாக விளங்குகிறது. இஃது காம்புள்ள நீண்ட தனி இலைகளையும், கொத்தான மலர்களையும், புளிக்கும் காய்களையும், உண்ணக்கூடிய இனிய சதைக் கனியையும் உடையது; என்றும் பசுமையான பெரிய மரமாக வளரக்கூடியது. தமிழகமெங்கும் கனிகளுக்காகப் பயிரிடப்பெறுகிறது. துளிர், இலை, பருப்பு, பட்டை ஆகியவை மருத்துவக் குணமுடையதாக விளங்குகிறது.

பிஞ்சு உள்ளழலாற்றி பசிமிகுக்கும், காய் மலமிளக்கும், பழம் சிறுநீர் வியர்வை பெருக்கும், பருப்பு நுண்புழுக்களை கொல்லும், உள்ளழலாற்றி உடல் உரம் பெருக்கும், பட்டை சதை நரம்புகளைச் சுருக்கி இரத்தம் சீழ்க்கசிவை அடக்கும்.


< PREV <
மாதவி
Table of Content > NEXT >
மாவிலங்கமரம்