இருந்தும் இல்லாத உறுப்புக்களும் மனிதர்களும்

திருநாவுக்கரசர் தேவாரம் தலம் : பொது பண் : சாதாரி நான்காம் திருமுறை திருவங்கமாலை திருச்சிற்றம்பலம் கால்களாற் பயன் என் - கறைக்கண்டன் உறைகோயில் கோலக் கோபுரக் கோகரணஞ் சூழாக் கால்களாற் பயன் என்? 4.9.9 திருச்சிற்றம்பலம் thirunAvukkaracar thEvAram thalam : common paN : cAthAri Fourth thirumuRai thiruvangamAlai thirucciRRambalam kAlkaLAR payan en - kaRaikkaNDan uRaikOyil kOlak kOpurak kOkaraNany cUzAk kAlkaLAR payan en? 4.9.9 thirucciRRambalam Meaning: What is the use of legs? If they do not circumambulate the abode of the stain throated Lord, the gOkarNa having beautiful pinnacles, what is the use of legs? பொருளுரை: கால்கள் இருந்தும் பயன் என்ன? கறையைக் கழுத்தின் அணிந்த பெருமானின் திருக்கோயிலாம் அழகிய கோபுரங்கள் கொண்ட திருக்கோகரணத்தை வலம் செய்யாத கால்கள் இருந்தும் பயன் என்ன? Notes: 1. கோளில் பொறியில் குணமிலவே எண் குணத்தான் தாளை வணங்காத் தலை - திருக்குறள் சிவபெருமானுடைய திருவடிகளை வணங்கி வலம் வராத கால்களும் வழிபடாத உறுப்புக்களும், போற்றாத வாழ்வும் வீண் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 2. கோகரணம் - கன்னட நாட்டில் உள்ள தலம். சம்பந்தர், அப்பரால் பதிகம் பாடப்பெற்றது.

< PREV <
கைகளின் பயன் மலர்
தூவித் தொழுவது
Table of Contents > NEXT >
நம்பத் தகுந்த உறவினர் யார்?

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page