|
Home > Shaiva Siddhanta > Thirumurai > Thirumurai Series
இறைவனுக்குச் சாத்தும் மலர்கள் எப்படி இருக்க வேண்டும்?
திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் : திருக்கச்சி ஏகம்பம்
பண் : காந்தாரம்
நான்காம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
கைப்போது மலர் தூவிக் காதலித்து வானோர்கள்
முப்போது முடிசாய்த்துத் தொழ நின்ற முதல்வனை
அப்போது மலர் தூவி ஐம்புலனும் அகத்தடக்கி
எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே. 4.7.3
திருச்சிற்றம்பலம்
thirunAvukkaracar thEvAram
thalam : thirukkacci Ekambam
paN : gAndhAram
Fourth thirumuRai
thirucciRRambalam
kaippOthu malar thUvik kAthaliththu vAnOrkaL
muppOthu muDi cAyththuth thoza n^inRa muthalvanai
appOthu malar thUvi aimpulanum agaththaDakki
eppOthum iniyAnai en manathhtE vaiththEnE. 4.7.3
thirucciRRambalam
Meaning:
The Prime, worshipped three times (of the day) by the
celestials showering handful of buds and flowers fondly
- Him - the Ever Sweet Lord, showering
then bloomed flower controlling the five senses internally
I have kept in my mind!
பொருளுரை:
கைகளில் அரும்பும் மலர்களும் கொண்டு தூவி, அன்பு மிகுந்து
வானவர்கள் முப்பொழுதும் தலைவணங்கித் தொழ நின்ற முதல்வனை,
அப்பொழுது மலர்ந்த மலர்கள் தூவி, ஐம்புலன்களையும் உள்ளே அடக்கி,
எப்பொழுதும் இனிய சிவபெருமானை என் மனத்தில் வைத்தேனே!
Notes:
1. அப்போது மலர் - இறைவனுக்குச் சாத்தும் மலர்கள் பழையனவாக
இல்லாமல் அப்பொழுது மலர்ந்தனவாகவும் தூயனவாகவும்
உள்ளதே சிறப்பு. எனவே தான் திருக்கோயில்களில் நந்தவனத்திலும்,
வீடுகளில் தோட்டத்திலும் அப்பொழுது மலர்ந்த புதிய மலர்கள்
இறைவனுக்கு இனியவை.
2. போது - அரும்பு.
Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page
|