அறமும் அருளும் அமைந்த பெருமான்

திருநாவுக்கரசர் தேவாரம் தலம் : திருவதிகை பண் : கொல்லி நான்காம் திருமுறை திருச்சிற்றம்பலம் பொன் போல மிளிர்வதோர் மேனியினீர் புரிபுன் சடையீர் மெலியும் பிறையீர் துன்பே கவலை பிணி என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்தும் இடீர் என்போலிகள் உம்மை இனித் தெளியார் அடியார் படுவது இதுவேயாகில் அன்பே அமையும் அதிகைக்கெடில வீரட்டானத்துறை அம்மானே. 4.1.9 திருச்சிற்றம்பலம் thirunAvukkaracar thEvAram thalam : thiruvAlavAy paN : kolli Fourth thirumuRai thirucciRRambalam pon pOla miLirvathOr mEniyinIr puripun caDaiyIr meliyum piRaiyIr thunbE kavalai piNi enRu ivaRRai n^aNukAmal thuran^thu karan^thum iDIr enpOlikaL ummai inith theLiyAr aDiyAr paDuvathu ithuvEyAkil anbE amaiyum athikaik keDila vIraTTAnaththu uRai ammAnE 4.1.9 thirucciRRambalam Meaning: Oh the One of the form shining like gold! Of twined holy hair! Of waning crescent! Drive away without allowing near and remove - the misery, worries and sickness! If this is what the devotees undergo, people like me will not realize You! Oh Mother for Whom love is the quality, residing at the thiruvadhikaik keDila vIraTTAnam! பொருளுரை: பொன் போன்று மிளிர்கின்ற திருமேனி உடையவரே! பின்னியுள்ள புனிதமான சடையுடையவரே! மெலிந்துவரும் பிறையைச் சூடியவரே! துன்பம், கவலை, நோய் என்னும் இவற்றை அருகில் வராது விரட்டி, இல்லாது செய்துவிடுங்கள்! அடியவர்கள் இதுபோன்று துன்புற்றால் என் போன்றவர்கள் உம்மைத் தெளிந்து உய்யமாட்டார்கள். அன்பே உடைய திருவதிகை வீரட்டானத்தில் உறைகின்ற தாய் போன்றவனே! Notes: 1. இறைவன் தருகின்ற எந்தத் துன்பமும் அறம் இன்றிக் கொடுக்கப்பட்டதல்ல. எனினும் பல நேரங்களில் அவற்றை நம்மால் பொறுக்க இயலாது அவரிடமே முறையிடுகின்றோம். இறைவன் அருளால் (அறம் விலகாத அளவில்) தணிக்கின்றார். (இவ்வாறே உருத்திரப் பெருமறையும் பல இடங்களில் இறைவனை வேண்டுகின்றது.) 2. நணுகாது - அணுகாது; துரத்தல் - விரட்டுதல்; கரத்தல் - நீக்குதல்; போலிகள் - போன்றவர்கள்.

< PREV <
உலகியல் காக்குமா?
Table of Contents > NEXT >
இறைவன் தண்டிப்பானா?

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page