அலியும் ஆயவன்

 

திருஞானசம்பந்தர் தேவாரம்

தலம் : திருவேடகம் பண் : கொல்லி மூன்றாம் திருமுறை திருச்சிற்றம்பலம் வரியணி நயனி நன் மலைமகள் மறுகிடக் கரியினை உரிசெய்த கறையணி மிடறினன் பெரியவன் பெண்ணினோடு ஆண் அலியாகிய எரியவன் உறைவிடம் ஏடகக் கோயிலே. 3.32.5 திருச்சிற்றம்பலம்

thirunyAnacamban^thar thEvAram

thalam : thiruvEDagam paN : kolli Third thirumuRai thirucciRRambalam variyaNi n^ayani n^an malaimakaL maRukiDak kariyinai uriceytha kaRaiyaNi miDaRinan periyavan peNNinODu AN aliyAgiya eriyavan uRaiviDam EDagak kOyilE. 3.32.5 thirucciRRambalam

Meaning of Thevaram

One with stain-worn-throat, Who peeled the elephant making the nice Lady of mountain with striped-eyes frightened; The Big; Fire-like Who became male, female and neuter; His residence if the abode of thiruvEDagam.

பொருளுரை

வரிகளை உடைய கண்ணுடைய நல்ல மலைமகள் அஞ்சுமாறு யானையை உரித்த கறுத்த கண்டம் உடையவன்; பெரியவன்; பெண் ஆண் அலி என்ற இயல்புகள் எல்லாம் ஆகிய எரி உருவானவனின் உறைவிடம் திருவேடகக் கோயில் ஆகும்.

Notes

1. வரியணி நயனி - செவ்வரியோடிய கண்கள். 2. பெண்ணினோடு ஆண் அலியாகிய இறைவனை ஆணாகவும் பெண்ணாகவும் காட்டுவதோடு நில்லாமல் அலியாகவும் காட்டுகின்றது சைவம். "ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான்." திருவாசகத்தில் இத்தன்மை பல இடங்களில் சுட்டப்படுகின்றது. 3. நயனி - கண்ணுடையவள்; மறுகுதல் - கலங்குதல்; கரி - யானை.
< PREV <
கவலை நீங்க வழி
Table of Contents > NEXT >
ஐயனை அரற்றுமின்

Back to Thirumurai Series Page
Back to Thirumurai Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page