கவலை நீங்க வழி

திருஞானசம்பந்தர் தேவாரம் தலம் : திருவேடகம் பண் : கொல்லி மூன்றாம் திருமுறை திருச்சிற்றம்பலம் குண்டலம் திகழ் தரு காதுடைக் குழகனை வண்டு அலம்பும் மலர்க் கொன்றை வான் மதியணி செண்டு அலம்பும் விடைச் சேடன் ஊர் ஏடகம் கண்டு கை தொழுதலும் கவலை நோய் கழலுமே. 3.32.3 திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar thEvAram thalam : thiruvEDagam paN : kolli Third thirumuRai thirucciRRambalam kuNDalam thikaz tharu kAthuDaik kuzakanai vaNDu alambum malarkkonRai vAn mathi aNi ceNDu alambum viDaic cEDan Ur EDakam kaNDu kai thozuthalum kavalai n^Oy kazalumE. 3.23.3 thirucciRRambalam Meaning: The Youth with the glorious ear-ball, the Everlasting wearing the moon of the sky and beetle humming floral konRai, having the floral crown swaying bull - His town thiruvEDagam, when seen and hands folded in worship, the disease of worries will get disentangled. பொருளுரை: குண்டலம் காதில் திகழும் இளமையானவனை, வண்டுகள் ஒலிக்கும் கொன்றை மலரையும் வானத்து மதியையும் சூடி, தலையில் ஆடுகின்ற பூச்செண்டை உடைய எருதினை உடைய (எல்லாவற்றிற்கும் பிறகும்) எப்போதும் இருப்பவனின் ஊரான திருவேடகத்தினைக் கண்டு கைகளால் தொழுதவுடன், நம்முடைய கவலை என்னும் நோயானது கழன்று அகலும். Notes: 1. செண்டு அலம்பும் விடை ஒ. செண்டாடும் விடையாய் - சுந்தரர். 2. சேடன் - எஞ்சி இருப்பவன் - எல்லா உயிர்களும் ஒடுக்கம் பெற்ற பின் ஒருவனாக எஞ்சி இருப்பவன். 3. குழகன் - இளமையானவன்; அலம்புதல் - ஒலித்தல்/ அசைதல்; செண்டு - பூச்செண்டு.

< PREV <
புகழே கொள்ளும் திருவடிவங்கள்
Table of Contents > NEXT >
அலியும் ஆயவன்

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page