புகழே கொள்ளும் திருவடிவங்கள்

திருஞானசம்பந்தர் தேவாரம் தலம் : திருந்து தேவன் குடி பண் : கொல்லி மூன்றாம் திருமுறை திருச்சிற்றம்பலம் பங்கமென்னப் படர் பழிகளென்னப்படா புங்கமென்னப் படர் புகழ்களென்னப்படும் திங்கள் தோயும் பொழில் தீண்டு தேவன் குடி அங்கமாறும் சொன்ன அடிகள் வேடங்களே. 3.25.6 திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar thEvAram thalam : thirundhu dhEvan kuDi paN : kolli Third thirumuRai thirucciRRambalam paN^gamennap paDar pazikaLennappaDa puN^gamennap paDar pukazkaL ennappaDum thiN^gaL thOyum pozil thINDu dhEvan kuDi aN^gamARum conna aDikaL vEDaN^gaLE. 3.25.6 thirucciRRambalam Meaning: The Forms of the Reverend, Who told the six limbs (of vedas), Who is residing at thirundhudhEvankuDi having gardens touched by the moon, are not of blames that spread as shortcomings, but are of glory that spread as virtue! பொருளுரை: மதியானது தோயும் உயர்ந்த சோலைகளுடைய திருந்துதேவன்குடியில் உறையும், ஆறங்கம் சொன்ன அடிகளாராகிய சிவபெருமானின் திருவேடங்கள் குறைகள் என்று பெருகும் பழிகள் உடையன அல்ல; அவை புண்ணியமாகப் பெருகும் புகழ்களே உடையன! Notes: 1. சிவபெருமான் செய்யும் எச்செயலும் - அது மறக்கருணையாகிலும் அறக்கருணையாகிலும் - எவ்வடிவும் - புகழே உடையன, பழிகள் இல்லாதன. ஒ. திங்கள் சூடினரேனும் திரிபுரம் எரித்தனரேனும் எங்கும் எங்கள் பெருமான் புகழலது இகழ் பழி இலரே - சம்பந்தர். 2. அங்கம் ஆறு - வேதங்கங்கள் ஆறு (சி¨க்ஷ, வ்யாகரணம், சந்தஸ், ந்ருத்தம், ஜ்யோதிஷம், கல்பம்) 3. பங்கம் - குறை; புங்கம் - புண்ணியம்.

< PREV <
உருவ வழிபாட்டால் என்ன பயன்?
Table of Contents > NEXT >
கவலை நீங்க வழி

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page