உருவ வழிபாட்டால் என்ன பயன்?

திருஞானசம்பந்தர் தேவாரம் தலம் : திருந்து தேவன் குடி பண் : கொல்லி மூன்றாம் திருமுறை திருச்சிற்றம்பலம் விண்ணுலாவும் நெறி வீடு காட்டும் நெறி மண்ணுலாவும் நெறி மயக்கம் தீர்க்கும் நெறி தெண்ணிலா வெண்மதி தீண்டு தேவன் குடி அண்ணல் ஆனேறுடை அடிகள் வேடங்களே. 3.25.5 திருச்சிற்றம்பலம் thirunyAnacamban^thar thEvAram thalam : thirundhu dhEvan kuDi paN : kolli Third thirumuRai thirucciRRambalam viNNulAvum n^eRi vIDu kATTum n^eRi maNNulAvum n^eRi mayakkam thIrkkum n^eRi theNNilA veNmathi thINDu dhEvan kuDi aNNal AnERuDai aDikaL vEDaN^gaLE. 3.25.5 thirucciRRambalam Meaning: Way to wander in the heavens; Way that shows the liberation; Way that the earth follows; Way that demystifies; That are the Forms of the Reverend, Who has the eldest bull, Who is at the thirundhudhEvankuDi touched by the shiny white moon! பொருளுரை: விண்ணிலே உலவச் செய்யும் நெறியும், முத்திப்பேற்றை அருளும் நெறியும், பூமி இயங்கும் நெறியும், குழப்பத்தைத் தெளிவிக்கும் நெறியும் ஆவது ஒளிமிக்க வெண்மதி தீண்டுகின்ற திருந்துதேவன்குடியில் இருக்கின்ற எல்லாவற்றிற்கும் மூத்ததான எருதினை உடைய அடிகளாகிய சிவபெருமானின் திருவடிவங்களாகும். Notes: 1. உருவமற்ற பரசிவமாகிய தன்னிலையில் உள்ள இறைவன், உயிர்கள் வழிபட்டு உய்யும் பொருட்டு சோதிக்குறியாக, இலிங்கமாக, அருவுருவாக சதாசிவமூர்த்தமாய் அமைகின்றார். இன்னும் அவ்வரிய பெருமான் அன்பர்களுக்கு எளியவனாகத் தன்னைக் காட்டுவித்த திருவடிவங்களே மாகேச்சுர மூர்த்தங்கள். (விளக்கம் காண http://www.shaivam.org/siddhanta/maahesh.html ) பெருமானின் பெருங்கருணை வடிவங்களான இவை நம்மை உய்விக்கும் பேரின்பம் தரும் என்பதை ஞானமுணர்ந்தார் இத்திருப்பதிகத்தில் அறிவுறுத்துகிறார். 2. அண்ணல் ஆனேறு - சிவபெருமானின் எருது அறம் ஆகும். இறைவனின் செயல்கள் என்றும் அறத்தை நிலைநிறுத்துவதாக அமைவன. எனவே அறமே இறைவனுக்கு ஊர்தியாக அமைந்தது. ஒ. திறந்தான் காட்டி அருளாய் என்று தேவர் அவர் வேண்ட அறந்தான் காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே - சம்பந்தர். 3. தெண்மை - ஒளி.

< PREV <
சம்பந்தர் தமிழ் சொன்னால்
விண்ணை ஆளலாம்
Table of Contents > NEXT >
புகழே கொள்ளும் திருவடிவங்கள்

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page