நினைவுக்கும் அரிய பெருமான்

 

திருஞானசம்பந்தர் தேவாரம்

தலம் : திருக்கழுமலம் பண் : கொல்லி மூன்றாம் திருமுறை திருச்சிற்றம்பலம் நெடியவன் பிரமனும் நினைப்பு அரிதாய் அவர் அடியொடு முடி அறியா அழல் உருவினன்; கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர்ப் பிடிநடை அவளொடும் பெருந்தகை இருந்ததே. 3.24.9 திருச்சிற்றம்பலம்

thirunyAnacamban^thar thEvAram

thalam : thirukkazumalam paN : kolli Third thirumuRai thirucciRRambalam n^eDiyavan biramanum n^inaippu arithAy avar aDiyoDu muDi aRiyA azal uruvinan; kaDikamaz pozilaNi kazumala vaLan^agarp piDin^aDai avaLoDum perun^thakai irun^thathE. 3.24.9 thirucciRRambalam

Meaning of Thevaram

Form of fire Whose foot and head are inexplorable and unimaginable to the long (viShNu) and brahma! That Magnanimous along with the Lady of female elephant like walk is at the prosperous town of thirukkazumalam embellished with fragrant gardens.

பொருளுரை

நெடிதுயர்ந்தவனும் (திருமால்), பிரமனும் நினைக்கவும் அரிதாக, அவர்கள் திருவடியும் திருமுடியும் அறியாதவகை நின்ற கனல் உருவன்; நறுமணம் கமழும் சோலைகள் அணிசெய்யும் திருக்கழுமலமாம் வளமிக்க நகரில் பெண்யானை போன்ற நடையுடைய உமையம்மையோடு சிவபெருமான் வீற்றிருக்கிறார்.

Notes

1. கடி - மணம்; பொழில் - சோலை; பிடி - பெண்யானை.
< PREV <
இராவணற்கு அருளிய பெருமான்
Table of Contents > NEXT >
ஆரவாரச் சொற்களில் மயங்காதீர்

Back to Thirumurai Series Page
Back to Thirumurai Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page